குழந்தைக்கு சளி, தேங்காய் என்னையில் ordinary கற்பூரமா அல்லது பச்சை கற்பூரமா ?

Friends,
என் 5 மாத குழந்தைக்கு 3 நாட்க்களாக சளி, இருமல். மூச்சு விடவும் கஸ்ட படுகிறது. முதலில் எனக்குதான் சளி, பின் குழந்தைக்கும் வந்து விட்டது. எனக்கும் இன்னும் சரியாக வில்லை. கை வைத்தியம் அருசுவையில் தேடினபோது தேங்காய் என்னையில் கற்பூரம் போட்டு காய்ச்சி தேச்சு விடலாமென்று இருக்கிறது. அது சாத கற்பூரமா அல்லது பச்சை கற்பூரமா என்று சொல்லுங்கள். please

5 மாத குழந்தைக்கு கை வைத்தியம் எதுவும் செய்யாதீங்கள் சளி எல்லா குழந்தைகளிற்கும் வரும் ஒரு பிரச்சனையே பயப்படாதீங்கள்,குழந்தைகளிற்குரிய Salin(Nasal drops) என்று எந்த பர்மசியில் கேட்டாலும் தருவார்கள் அதனை வாங்கி அடிக்கடி மூக்கினுள் விட்டு Cotton swab இனால் மூக்கை துப்புரவு செய்து விடுங்கள் இவ்வாறு அடிக்கடி செய்வத்னால் குழந்தைக்கு மூச்சு விட இலகுவாக இருக்கும் அத்துடன் குழந்தையை படுக்கவைக்கும் போது சற்று உயரதில் தலை இருக்குமாறு படுக்க வைக்கவும், பால் கொடுக்கும் போதும் தொடர்ச்சியாக கொடுக்கமல் சிறிது விட்டு விட்டு கொடுங்கள்,சற்று குளிர் காற்று முகத்தில் படுமாறு வைத்ட்திருந்தால் குழந்தைக்கு மூச்சு விட இலகுவாக இருக்கும், அத்துடன் அதிகளவு நீர் குடிக்க கொடுங்கள்.

கற்பூரம் use பண்ணாதீங்க . என் குழந்தைக்கு நான் use பண்ணி உடம்பு fulla அலர்ஜி ஆயிடுச்சி 2 yrs முன்னாடி. ரொம்ப வருத்தமா இருந்தது. சோ pls avoid this . டாக்டர்ஸ் கொடுத்த மருந்து கொடுங்க சரி ஆயிடும்.

கற்பூரம் மிகவும் காட்டமானது பா. 5 வயது பிஞ்சு குழந்தையின் தோல் மிகவும் சாஃப்டாக இருக்கும். கற்பூரத்தின் காட்டத்தை அதனால் தாங்க முடியாது. பெறியவங்க கிட்ட கேட்டு வேர ஏதாவது ட்ரை பன்னுங்க

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

நான் என் குழந்தைகளுக்கு எப்பவுமே கைவைத்தியம் தான். நான் என் இரண்டு மாத குழந்தைக்கு கூட கற்பூரம் (பச்சை கற்பூரம் இல்லை) தடவி இருக்கிறேன். நல்ல கேட்டுச்சி. நிறைய தடவ கூடாது. ஒரு சின்ன ஸ்பூனில் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு துளி கற்பூரம் சேர்த்து இளஞ்சூடு செய்து மார்பில் முதுகில் தொண்டையில் தடவலாம்.
நீங்கள் தாய்பால் புகட்டுவரானால் பால் கொடுக்கும் முன்னர் சிறிதளவு பாலை அவர்களின் மூக்கில் பீய்த்து விட்டு இரண்டு துளியை அவர்களின் மூக்கின் மேல் தடவிய பின்னர் பால் புகட்டவும். தாய் பாலில் எல்லா குண நலனும் இருக்கு. It will work wonders. நல்ல பலன் தரும்.
குழந்தை உறங்கும் அறையில் humidifier அல்லது ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சூடு தண்ணீரில் கொஞ்சம் விக்ஸ் போட்டு வைக்காலாம். ஆனால் ஒருவர் பக்கத்திலிருந்து ஜாக்கிரதையாக பாத்துக்க வேணும். இப்படி செய்வதால் மூக்கடைப்பு சரியாகும்.
குழந்தைகளுக்கு சளி இரும்பல் அதுவும் இந்த குளிர் காலத்தில் வர தான் செய்யும். நீங்கள் மருந்து கொடுத்தாலுமே ஒரு வாராய் வரையாவது இருக்க தான் செய்யும். அடிக்கடி மருந்து கொடுத்து அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்காதீர்கள். குழந்தையின் சளி இருமல் அவர்களுக்கு மிகவும் அசௌகரியமாகவும் குழந்தை ரொம்பவும் சோர்வாகவும் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் காண்பிக்கவும்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

விக்ஸ் கொஞ்சமாக எடுத்து நம் விரல்களில் லேசாக ஸ்ப்ரெட் செய்தாலே இளகிடும். அதை அப்படியே குழந்தையின் முதுகில்(ஷோல்டர் ப்ளேடுகளில்) தேய்க்கலாம். குழந்தையின் நெஞ்சுப் பகுதியிலும் இதைத் தேய்க்கலாம். டாக்டர் தரும் நேசல் ட்ராப்ஸ் போட்டால், குழந்தைக்கு மூக்கடைப்பு சரியாகிடும்.

அன்புடன்

சீதாலஷ்மி

பதில் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி. நான் இன்னும் டாக்டரிடம் போகவில்லை. கை வைத்தியங்கள்தான் செய்து வருகிறேன். மன்றத்தில் ஏற்கனவே கொடுத்திருக்கும் டிப்ஸ் follow பன்றேன்.
வேறு குரிப்புகள் இருந்தாலும் கூறவும்.

நான் அதிகம் பதிவுகள் போட முடியாமல் போனாலும் அருசுவையின் நிகழ்வுகளை பார்பேன். பலனும் பெற்றிருக்கிறேன்.

எல்லாருக்கும் நன்றி.
Latha

The distance between the earth and the sky is not the measure of altitude its the measure of ATTITUDE!!!!!!!!!!

மேலும் சில பதிவுகள்