எந்த formula கொடுப்பது?

நான் US இல் இருக்கிறேன். என் குழந்தைக்கு இப்பொது 2 1/2 மதங்கள் ஆகின்றது நான் ஜனவரி இல் இருந்து வேலைக்கு செல்ல வேண்டும். அவனுக்கு 3 மாதங்கள் முடியும் பொது நான் ஆபீஸ் செல்ல வேண்டும். நான் இல்லாத நேரத்தில் அவனுக்கு Formula கொடுக்க வேண்டிய சூழ்நிலை.அப்படி என்றால் எப்போது இருந்து அவனுக்கு போர்முல கொடுத்து பழக்குவது? எந்த formula கொடுப்பது என்று தெரிய வில்லை. similac,enfamil,gerber எது சிறந்தது? அதிலும் நிறைய வகை இருக்கிறது, எது வாங்க வேண்டும்? தெரிந்தவர்கள் கூறவும். நன்றி.

பொதுவாக தாய்பால் குடிக்கும் குழந்தைகள் மாற்று பாலுக்கு மாற்றுவது கொஞ்சம் சிரமம் தான். இங்கு கிடைக்கும் பல வகை பார்முலாவில் சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளும் ஒரு பிராண்ட் மற்ற குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. நீங்கள் ஆகையால் முதலில் அவளின் மருத்துவரிடம் பேசுங்கள். அவர் குழந்தைக்கு பார்முலா கொடுக்கலாம் என்றால் எந்த வகை கொடுக்கலாம் என்று அவரிடமே கேட்கலாம். பொதுவாக எல்லோரும் என்பாமில் அல்லது சிமிலாக் கொடுப்பார்கள். எனக்கு தெரிந்தவரின் குழந்தை இரண்டுமே குடிக்கவில்லை என்பதால் அவர்களின் மருத்துவர் கேர்பர் கொடுக்க சொன்னார்.
தாய்பால் உடனே செரித்து விடும் ஆகையால் குழந்தைக்கு ஒன்னரை அல்லது இரண்டு மணி நேரத்திற்கொருமுறை பால் தரவேண்டாம். ஆனால் பார்முலா அப்படி இல்லை. அவர்களின் எடையை பொறுத்து, ஆனா பெண்ணா இதையும் பொறுத்து எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றுள்ளது.
பொதுவாக மூன்று மாதமான 13 பவுண்ட் எடை உள்ள ஆண் குழந்தைக்கு 32.5 அவுன்ஸ் (ஆறு முதல் ஏழு தடவையாக பிரித்து) ஒரு நாளைக்கு கொடுக்கலாம். நான்காம் மாதத்தில் 15 பவுண்ட் எடையாக இருக்கும் பட்சத்தில் 37.5 அவுன்ஸ் ஆறு தடவையாக பிரித்து கொடுக்கலாம்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பார்முலா கொடுக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. குழந்தையின் எடையை 2.5 யால் பெருக்கினால் எவ்வளவு அவுன்ஸ் ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து விடும்.
நீங்கள் ஆகையால் முதலில் அவனின் மருத்துவரிடம் பேசுங்கள். அவர் குழந்தைக்கு பார்முலா கொடுக்கலாம் என்றால் எந்த வகை கொடுக்கலாம் என்று அவரிடமே கேட்கலாம்.

இல்லை என்றால் நீங்கள் பாலை எக்ஸ்பிரஸ் செய்து பதபடுத்தி குழந்தைக்கு வேளா வேளை கொடுக்க செய்யலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

அன்பு லாவண்யா,

தெளிவாக விளக்கி சொல்லியிருக்கீங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

லாவண்யா,

மிக்க நன்றி.மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் பதில் அளித்து உள்ளீர்கள். என்ன வகையான formula கொடுப்பது என்று pediatrician இடம் கேட்டதற்கு, குறிப்பிட்டு எந்த brandஉம் அவர் சொல்லவில்லை.
முடிந்த அளவு குழந்தைக்கு தாய்பாலே கொடுபதற்காக கடந்த 20௦ நாட்களாக தாய்ப்பால் எடுத்து freezer இல் சேமித்து வைத்து வருகிறேன். அதனால் குழந்தைக்கு பகலில் formulaவை 1 or 2 முறை கொடுத்து விட்டு மற்ற நேரங்களில் தாய்ப்பால் தரலாம் என்று இருகின்றேன். இரவில் நான் பீட் பணிவிடுவேன்.

"குழந்தையின் எடையை 2.5 யால் பெருக்கி னால் எவ்வளவு அவுன்ஸ் ஒரு நாளைக்கு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து விடும்." --- நான் குழந்தைக்கு தாய்ப்பால் உம் கொடுக்கவிருகிறேன். அப்படி என்றால் நான் எவ்வளவு அளவு formula கொடுக்க வேண்டும்?
இதே போல 2.5 யால் பெருக்க வேண்டுமா? அவனுக்கு தேவையான அளவு கொடுத்தல் போதுமா?

என்பாமில் போர்முல சம்ப்லஸ் வீட்டுக்கு போஸ்ட் இல் வருகின்றது. அதை உஸ் பண்ணலாமா?

சிமிலாக் நல்ல ப்ராண்ட் ..என் குழந்தைக்கு பிறந்ததுமுதல் அதுதான் :-)

கொடுக்கவேண்டிய சூழல்...அது நன்றாக ஒத்துக்கொண்டது..

என் தோழிகள் நிறைய பேர் அதுதான் கொடுக்கிறார்கள்..கொடுக்கும் அளவுகள் பற்றி அதிலேயே எழுதியிருக்கும்..வேறு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

உங்களுக்கு வரும் சாம்பிளை ட்ரை பண்ணி பாருங்க அது குழந்தைக்கு பிடிக்குதா ஒத்துக்குதா என்று பாருங்கள். அப்படி என்றால் அதையே உபயோகிக்கலாம். இளவரசி சொல்வது போல் நீங்கள் பெரிய டப்பா வாங்கினால் அதன் மேலே எவ்வளவு குடுக்கணும் என்று எழுதி இருக்கும். இருந்தாலும் ஒரு தாய்க்கு தெரியும் குழந்தைக்கு எவ்வளவு வேணும், அது எதற்கு அழுகிறது என்றெல்லாம். நீங்கள் குழந்தைக்கு தாய்பால் முடியும் போது விடாமல் கொடுங்கள். தாய்பாலை எவ்வளவு நேரம் எப்படி சேமித்து வைக்கலாம். சேமித்ததை எப்படி குழந்தைக்கும் கொடுக்கலாம் என்ற விதி முறைகளை மீறாமல் செய்யுங்கள்.

நன்றி எல்லாம் எதற்கு.....எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொன்னேன்....உங்களுக்கு அது உபயோகப்பட்டால் அதுவே எனக்கு சந்தோஷம்.

சீத்தாமா எனக்கும் உங்களை போல் எழுதனும்னு ஆசை.....இந்த தளத்திற்கு வந்து தான் தமிழில் அடிக்க கற்று கொண்டேன். உங்களின் இந்த பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது.

ஆல் தி பெஸ்ட்
லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

குழந்தைக்கு 5 or 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுத்து விட்டு, அதற்கு பிறகு formula கொடுக்கலாமா? நான் வேலைக்கு செல்கிறேன், என்னால் முடிந்த அளவு தாய்ப்பாலை பம்ப் செய்து சேமித்து வைத்து இருக்கிறேன். நான் இல்லாத நேரத்தில் என் மாமியார் தான் பார்த்து கொள்வார். ஆனால் என் பயம் என்னவென்றால், 6 மாதத்திற்கு பிறகு ஒரு வேலை என்னால் தாய்ப்பால் பம்ப் பண முடியாவிட்டால் அப்போது குழந்தைக்கு formula கொடுத்தால் பழகி கொள்ளுமா? அல்லது இப்பொது இருந்தே formula கொடுத்து நான் பழக்க வேண்டுமா? (என் குழந்தைக்கு இப்பொது 3 மாதங்கள் முடிந்து விட்டது)
இன்னுமொரு சந்தேகம், நான் இல்லாத நேரங்களில் என் மாமியார் பாலாடை இல் தான் பால் கொடுக்கிறார், குழந்தைக்கு பாட்டில் ய் எப்படி பழக்க படுத்துவது?தெரிந்தவர்கள் கூறவும். நன்றி.

சிமிலாக் தான் சில மருத்துவர்கள் பரிந்துறைக்கும் ஃபார்முலா.என் குழந்தைக்கும் அது தான்.
புட்டிப் பாலை சில குழந்தைகள் முதன்முறை எடுக்காது அல்லது பிடிக்காது.முதலில் அதில் தாய்ப்பாலை ஊற்றி கொடுத்து பழகுங்கள்..முதல் சில நாள் தாய்ப்பாலும் பிறகு மெல்ல 9:1, 8:2,6:4, 4:4 இப்படியாக தாய்ப்பாலும் புட்டிப்பாலும் கலந்து கொடுத்து மெல்ல பழக்கலாம்.அது உடம்பும் ஏற்றுக் கொள்ள சுலபமாக இருக்கும்

கடந்த 4 1/2 மாதங்களாக என் குழந்தைக்கு தாய்பால் மட்டுமே கொடுத்து வந்தேன்.வெள்ளி அன்று 1oz similac formula கொடுத்தேன். அடுத்த நாள், சனி அன்று 2oz similac formula கொடுத்தேன். ஆனால் அவன் கக்கா போகவே இல்லை, வயிறு கல்லு போல கெட்டியாக ஆகி, மிகவும் அழுதான். gripe water கொடுத்தவுடன் வயிறு வலி சரி ஆகி கக்கா போனான்.

மறுபடியும் அவனுக்கு சிமிலாக் போர்முல கொடுக்கலாமா அல்லது வேறு போர்முல கொடுக்க வேண்டுமா? முதல் நாள் 1oz, 2வது நாள் 2oz என்று அதிக படுத்தலாமா?
pediatrician தாய்பால் உம் formula உம் மிக்ஸ் பண்ண வேண்டாம் என்று சொன்னதால் நான் வெறும் போர்முல மட்டும் கொடுத்தேன். இரண்டையும் கலந்து கொடுத்தால் ஒத்துகொள்ளுமா? pls help.

மேலும் சில பதிவுகள்