இனியொரு பணி செய்வோம் - 10 (நிறைவுப் பகுதி)

Modeling


Work from homeஅன்புத் தோழிகளுக்கு வணக்கம்.

இந்தப் பகுதியில் நான் பேசப் போவது மிகவும் சுவாரசியமான, ஒரு பகுதி நேர வேலையைப் பற்றி. புகழ், பிரபலம், பணம் என்று எல்லாம் தரும் வேலை இது.

கிட்டத்தட்ட சரியாக ஊகித்திருப்பீங்க என்று. நினைக்கிறேன். இது சின்னத் திரையில் தோன்றும் வாய்ப்பைப் பற்றி.

சின்னத் திரை என்றால் சீரியல்களில் நடிப்பது அல்ல, விளம்பரங்களில் தோன்றும் மாடலிங் பற்றிதான் சொல்லப் போகிறேன்.

விளம்பரங்களை ”30 வினாடி அதிசயம்” என்று சொல்வார்கள். ஆமாம், பல கோடிகள் செலவு செய்து, எடுக்கப்பட்டு, இரண்டரை மணி நேரம் ஓடும் முழு நீள திரைப்படங்களை விட, சில பல லட்சங்கள் செலவில், அரை நிமிடமே ஓடும் இந்த விளம்பரப் படங்கள், சின்னத் திரையில் மீண்டும் மீண்டும் தோன்றி, பெரியவங்க முதல் குழந்தைகள் வரை எல்லார் மனசிலும் இடம் பிடித்து விடுகிறதே.

குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போதே, ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரப் பாடல்களைத்தானே கற்றுக் கொள்கிறார்கள்! செல்ஃபோன் விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டியை ரசிக்காதவங்க யார்? கடைக்குப் புடவை எடுக்கப் போனால், விளம்பர மாடல் கட்டியிருந்த புடவையைத்தான் தேடிப் பார்க்க தோணுது, இல்லையா.

ஒரு திரைப்படத்துக்கு தேவைப்படும் அத்தனை உழைப்பும், விளம்பரப் படத்துக்கும் தேவைப்படும். சொல்ல வரும் விஷயத்தை, 30 வினாடியில், பார்ப்பவர் மனதில் பதிய வைக்க வேண்டும். பல நூறு முறை, எல்லா சானலிலும், திரும்ப, திரும்ப ஒளிபரப்பப் பட்டாலும், பார்க்கும்போது சலிப்பு தோன்றக் கூடாது, ரிமோட்டைத் தேடி, சானலை மாற்றத் தோன்றாமல், ஆர்வத்துடன் பார்க்கும்படி இருக்கணும்.

விளம்பரப் படங்கள் எப்படி எடுக்கிறார்கள், என்பதைப் பற்றி, அதன் சுவாரசியத்தைப் பற்றி, ஒரு புத்தகமே எழுதலாம். ஆனால், நாம் இங்கே தெரிந்து கொள்ளப் போவது, விளம்பரங்களில் தோன்றும் மாடலாக முடியுமா, அதற்கு என்ன செய்ய வேண்டும், வருமானம் எப்படி? இதெல்லாம்தான்.

மாடல் ஆகணும்னா, ரொம்ப அழகாக இருக்கணுமா? பாட்டு, டான்ஸ் தெரியணுமா? எத்தனை வயது வரைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்? பல கேள்விகள் ...

80 வயது தாத்தா பாட்டியிலிருந்து, 30 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை வரை விளம்பரங்களில் தோன்றுகிறார்கள். இவர்களெல்லாம், சினிமாவிலோ, சீரியலிலோ வர்றதில்லையே, ஒரு வேளை, விளம்பரங்கள் எடுப்பவங்களுக்கு சொந்தக்காரங்களாக இருப்பாங்க, இப்படியெல்லாம், உங்களுக்குத் தோன்றியிருக்கும். நம்ம வீட்டுக் குட்டிகள், அதே மாதிரி, நடித்துக் காட்டும்போது, அட, நாம கூட திரையில் வரலாமேன்னு தோன்றியிருக்கும்.

உங்களுக்கு இந்த ஆர்வம் இருந்தால், இந்தப் பகுதி உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.

விளம்பரப்படங்கள் எடுத்துக் கொடுப்பதற்காக, நிறைய ஏஜென்சிகள் இருக்கின்றன. சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் டைரக்டர்கள் இருக்கிறார்கள். சினிமாவைப் போலவே, இதிலும், தயாரிப்பு, டைரக்‌ஷன், கதை, வசனம், பாடல்கள், இசை, டான்ஸ், நடிகர்கள், எல்லாம் உண்டு.

இந்த நடிகர், நடிகைகளைத்தான் நாம் மாடல்கள் என்று சொல்கிறோம்.

மற்ற விஷயங்களை முடிவு செய்த பின், தேவைப்படும் மாடல்களைப் பற்றி, தீர்மானிப்பார்கள்.

உதாரணமாக, ஒரு குடும்பமாக திரையில் வர வேண்டும் என்றால், எந்த எந்த வயதில் கதாபாத்திரங்கள் தேவை என்பதைப் பார்ப்பார்கள்.

பிறகு மாடலிங் கோ ஆர்டினேட்டர்களை அணுகுவார்கள். இவர்களிடம் இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து, தேர்வு செய்து கொள்வார்கள். ஒரு கதாபாத்திரத்துக்கு, நான்கைந்து பேரை வரவழைத்து, ஃபோட்டோ, வீடியோ ஷூட் செய்து, பின், ஒருத்தரை மட்டும் தேர்வு செய்வதும் உண்டு.

தேர்வு செய்யப்பட்டவர்களை, தகவல் சொல்லி வரவழைத்து, அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா, நடித்தார்களா, என்பதை உறுதி செய்து கொண்டு, மாடல்களுக்கான சம்பளப் பணத்தையும், விளம்பர கம்பெனியிலிருந்து பெற்றுத் தருவது மாடல் கோ ஆர்டினேட்டர்கள்தான். ஆமாம், மாடல்களுக்கும், விளம்பர கம்பெனிகளுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. இவர்களுக்கிடையில் பாலமாக செயல்படுவது, மாடலிங் கோ ஆர்டினேட்டர்கள்தான்.

அதாவது, கோ ஆர்டினேட்டரிடம் புகைப்படம் இருந்தால், அவர் மூலமாக சான்ஸ் கிடைக்கும், அதானே, உடனே, அந்த கோ ஆர்டினேட்டர் அட்ரஸ் கொடுங்க, என்னோட பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ பர்ஸில் இருக்கு, கொடுத்து விட்டு வர்றேன், என்று கேட்கிறீர்களா?

அவசரப்படாதீர்கள். ஒவ்வொன்றாக சொல்கிறேன்.

உங்கள் புகைப்படத்தை மாட்லிங் கோ ஆர்டினேட்டரிடம் கொடுப்பதற்கு முன்னால், நீங்கள் போர்ட்ஃபோலியோ எனப்படும் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

போர்ட்ஃபோலியோ என்றால் என்ன? யார் எடுப்பார்கள் இதை? எவ்வளவு செலவாகும்?

சென்னை, மும்பை போன்ற நகரங்களில், இந்த வகை ஃபோட்டோக்கள் எடுப்பதற்காகவே, தனிப்பட்ட ஸ்பெஷல் ஃபோட்டோகிராஃபர்கள் இருக்கிறார்கள். பல வசதிகளுடன் கூடிய, ஃபோட்டோ ஸ்டுடியோவும் வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை, முதலில் அணுக வேண்டும். எந்தத் தேதியில் எடுக்க வேண்டும், என்னென்ன காஸ்ட்யூமில் எடுக்க வேண்டும் என்று பேசி டிசைட் செய்து கொள்ளுங்கள்.

ஆறு அல்லது ஏழு காஸ்ட்யூம்கள் வரை, உபயோகிக்கலாம். ஆண்களாக இருந்தால், கோட் சூட், பைஜாமா ஜிப்பா, பாண்ட் ஷர்ட், ஜீன்ஸ் டி ஷர்ட், வேஷ்டி சட்டை, ஸ்போர்ட்ஸ் ட்ரஸ் என்று எடுக்கலாம்.

இளம்பெண்களும் இதே போல, பட்டுப் புடவை, சுடிதார், ஜீன்ஸ் என்று பல காஸ்ட்யூம்களில் எடுக்கலாம். ஹேர் ஸ்டைல் மாற்றிக் கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு - உங்கள் கற்பனைத் திறனைப் பொறுத்து, பல விதமான உடைகளில் எடுக்கலாம்.

வயதானவர்களுமே, முடிந்தவரை, மூன்று அல்லது நான்கு விதங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். நம் விருப்பத்தைப் பொறுத்தது இது.

அனேகமாக ஃபோட்டோகிராஃபரே, மேக்கப் மேனையும் புக் செய்து விடுவார். இதற்கும் சேர்த்துதான் சார்ஜ் செய்வார்கள்.

மேக்கப் எதுக்கு, நாமே ஃபவுண்டேஷன் கிரீம், பௌடர், என்று அழகாக செய்து கொள்ளலாமே என்ற கேள்வி எழுகிறதா. நீங்கள் செய்து கொள்ளும் மேக்கப், இந்த வகை புகைப்படங்களில் ப்ரைட்டாக இருப்பது சாத்தியமில்லை. மேக்கப் சாதனங்களின் உதவியுடன், அதற்கென்று பயிற்சி பெற்ற மேக்கப் மேன் ஒப்பனை செய்து விடும்போது, புகைப்படங்களில் நீங்கள் அசத்தலாக தோற்றமளிக்க முடியும்.

பெண்களுக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட், புடவை கட்டி விடும் அஸிஸ்டெண்ட் பெண், தேவைப்பட்டால், அதையும் மேக்கப் மேன் உடன் வர வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விடலாம்.

சிறப்பான லைட்டிங்கில், சின்ன சின்ன ஆனால் வித்தியாசமான முக பாவங்களை காட்டச் சொல்லி, மிகவும் ப்ரொஃபஷனலாக புகைப் படங்கள் எடுப்பார்கள்.

இந்த ஃபோட்டொ செஷனுக்கு, மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும்.

மறு நாளோ, அல்லது ஓரிரு நாட்களிலோ, இரண்டு செட் புகைப்படங்கள், அவை காப்பி செய்யப்பட்ட சி.டி.யும் உங்களிடம் தந்து விடுவார்கள். நீங்கள் தேவைப்படும்போது, அருகாமையில் உள்ள எந்த ஸ்டுடியோவிலும் அதிக ப்ரிண்டுகள் போட்டுக் கொள்ள, இந்த சி.டி.வசதியாக இருக்கும். உங்கள் சிஸ்டத்திலும் காப்பி செய்து வைத்துக் கொண்டால், மெயிலில் அனுப்பவும் முடியும்.

எவ்வளவு செலவாகும்?

குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாய் வரை ஆகும். இது எனக்குத் தெரிந்து லேட்டஸ்ட் நிலவரம்.

இவ்வளவா? என்கிறீர்களா. இந்த செலவு சென்னையில் எடுத்தால்தான். மும்பை என்றால் இன்னும் பந்தாவாக, இன்னும் பல ஆயிரங்கள் ஆகலாம்.

இவ்வளவு செலவு செய்து ஃபோட்டோக்கள் எடுத்தால், அந்த அளவுக்கு வருமானம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதற்கு பிறகு வருவோம். புகைப்படங்கள் எடுத்த பின்னர், அடுத்த ஸ்டெப் என்ன என்று பார்ப்போம்.

ஏற்கனவே சொன்னது மாதிரி, உஙக்ள் புகைப்படங்களை, மாடல் கோ ஆர்டினேட்டர்களிடம் கொடுக்க வேண்டியதுதான் அடுத்த வேலை.

சென்னையில், நீண்ட நாட்களாக, இந்தத் துறையில், மாடல் கோ ஆர்டினேட்டர்களாக, வெற்றிகரமாக சாதித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் – திருமதி பிஜ்ஜு ஜெயதேவ், திருமதி தாரா உமேஷ், திருமதி ருக்மணி, திருமதி லஷ்மி சிவகுமார், திரு மனோஜ் கிருஷ்ணா. ஆம், பெண்கள் மிக சிறப்பாகவே இந்தத் துறையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். இவர்களை காண்டாக்ட் செய்யுங்கள். நேரில் சென்று புகைப்படங்களைக் கொடுக்கலாம். அல்லது அவர்களுக்கு, மெயிலிலும், உங்கள் புகைப் படங்களை அனுப்பலாம்.

அதற்குப் பிறகு?

அதற்குப் பிறகு, சான்ஸ் கிடைப்பது எப்போது என்பதை தீர்மானிப்பது நீங்களோ, கோ ஆர்டினேட்டரோ கிடையாது. மாடலிங் ஏஜென்ஸியை அணுகும் விளமபரப் பட டைரக்டர், உங்கள் புகைப்படத்தைப் பார்த்து, உங்களை தேர்வு செய்தால், நீங்கள் மாடல் ஆகி விடுவீர்கள்.

உதாரணத்துக்கு, சாக்லேட் விளம்பரத்துக்காக, எட்டு வயது சிறுவன் தேவைப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். விளம்பர ஏஜென்ஸி இதைத் தெரிவித்ததும், கோ ஆர்டினேட்டர், தான் வகைப் படுத்தி வைத்திருக்கும் புகைப்படங்களிலிருந்து, இந்த வயது சிறுவர்கள் அனைவரது ஃபோட்டோக்களையும் காட்டுவார். டைரக்டர் யாரை செலக்ட் செய்கிறாரோ, அவருக்கு சான்ஸ் கிடைக்கும்.

இது போல, நீங்கள் செலக்ட் செய்யப்பட்டால், கோ ஆர்டினேட்டர், உங்களுக்கு ஃபோன் செய்து, நீங்கள் நடிக்கத் தயாரா, அந்தத் தேதிகளில் ஊரில் இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வார். பிறகு, ஷீட்டிங் நடைபெறும் இடம், தேதி, யாரை அங்கு தொடர்பு கொள்ளணும், என்று, எல்லாத் தகவல்களும் உஙகளிடம் சொல்லி விடுவார்.

நீங்கள் அந்த இடத்துக்கு சென்று, ஷீட்டிங்கில் டைரக்டர் சொன்ன மாதிரி, சரியாக நடித்து விட்டால், சக்ஸஸ்தான்.

இதுதான் மிகக் கஷ்டமான ஒரு விஷயம். ஏற்கனவே சொன்னது போல, திரையில் விளம்பரம் வருவதென்னவோ, ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரம்தான். ஆனால், மிகப் பொருத்தமாக, டைரக்டர் எதிர்பார்க்கும் பெர்ஃபார்மன்ஸ் தருவது என்பது, உங்களிடம்தான் இருக்கிறது.

ஒரு நிமிடம் திரையில் வருவதற்கு, எவ்வளவு நேரம், படம் பிடித்து விடப் போகிறார்கள் என்று தோன்றலாம். ஒரு நாள் முழுவதும் படப் பிடிப்பு நடைபெறும். சில சமயம் அதற்கு மேலும் நடைபெறலாம். வீடியோ ஷீட்டிங்குடன், ஃபோட்டோ செஷனும் நடைபெறும். பத்திரிக்கைகளில் விளம்பரங்களில் வெளியிட வேண்டும் அல்லவா.

நீங்கள் நடித்ததற்கான சம்பளத்தை, உங்கள் கோ ஆர்டினேட்டரிடம் தந்து விடுவார்கள். அவர்கள் தங்களுக்குரிய சர்வீஸ் சார்ஜ் எனப்படும் தொகையை எடுத்துக் கொண்டு, மீதியை உங்களுக்குத் தருவார்கள். சாதாரணமாக 10% முதல் 15% வரை கோ ஆர்டினேட்டர்கள் சார்ஜ் செய்வார்கள்.

நீங்கள் நடித்த விளம்பரத்தில், நல்ல பெயர் கிடைத்தால், தொடர்ந்து வாய்ப்புகள் வரும். சின்னத்திரை, வெள்ளித் திரை வாய்ப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இன்றைய நட்சத்திரங்கள் பலரும் மாடல் ஆகத்தான் தங்கள் எண்ட்ரியைத் துவக்கியிருக்கிறார்கள்.

எனக்கு அதெல்லாம் வேண்டாம், சினிமா, சீரியல் இதெல்லாம் எனக்கு இஷ்டமே கிடையாது. விளம்பரங்களிலும், எல்லாவற்றிலும் என்னால் தோன்ற முடியாது. எனக்குப் பிடித்த விளம்பரங்களில் மட்டும் நான் நடிக்க முடியுமா? என்று ஒரு கேள்வியை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

பதிலையும் நானே சொல்கிறேன். தாராளமாக நீங்கள் உங்கள் கருத்தை முதலிலேயே கோஆர்டினேட்டர்களிடம் சொல்லி விடுங்கள். அதே போல, நீங்கள் செலக்ட் செய்யப் படும்போது, என்ன விளம்பரம், உங்கள் காஸ்ட்யூம் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு, பிறகு ஒப்புக் கொள்ளுங்கள். முதலிலேயே சொல்லாமல், ஷீட்டிங் ஆரம்பித்த பின் சொல்வது என்பது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

சரி, எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

இது உங்களை வைத்து படம் எடுக்கும் ஏஜென்ஸியையும், நீங்கள் தோன்றும் பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தையும் பொறுத்தது. அவர்களின் பட்ஜெட், தாராளமாக இருந்தால், உங்கள் வருமானமும் அதிகமே. குறைந்தபட்சம் ஒரு விளம்பரப் பட ஷீட்டிங்குக்கு ஐந்தாயிரம் முதல் எதிர்பார்க்கலாம். இது உத்தேசமான தொகைதான். பெரிய கம்பெனிகள் என்றால், கூடுதலாகவே கிடைக்கும்.

இந்தத் துறையில் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போமா?

இந்தப் பகுதியை எழுதுவதையே நான் ரொம்ப ரொம்ப யோசித்துதான் எழுதுகிறேன். காரணம், மிக எளிதில் ஏமாற்றப்படவும், கண்ணியக் குறைவாக மதிப்பிடப்பட்டு விடவும் வாய்ப்புகள் அதிகம். அதே சமயம், நல்ல வருமானம், பிரபலம், புகழ் இவற்றின் காரணமாக இந்தத் துறை அதீதமாக கவர்ந்திழுக்கவும் செய்யும்.

போர்ட்ஃபோலியோ எடுக்கும்போதே, நன்றாக விசாரித்துத் தெரிந்து கொண்டு, நல்லதொரு ப்ரொஃபஷனல் ஃபோட்டோகிராபரிடம்தான் புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.

கோ ஆர்டினேட்டர் என்ற பெயரில் நிறைய போலிகள் உண்டு. ஜாக்கிரதை, ஜாக்கிரதை, ஜாக்கிரதை.

நான் மேலே குறிப்பிட்டிருக்கும் கோ ஆர்டினேட்டர்கள், ஃபோட்டோக்களைப் பெற்றுக் கொள்ள, உங்களிடம் எதுவும் பணம் கேட்க மாட்டார்கள். ஃபோட்டோக்களை அவர்களிடம் தரும்போது, அவற்றின் பின்னால், உங்கள் பெயர், தொலைபேசி எண், செல்ஃபோன் எண், இவற்றை, தெளிவாக எழுதிக் கொடுங்கள். உங்கள் பெயரை ரிஜிஸ்தர் செய்து கொள்வது போன்ற அவசியம் எதுவும் இல்லை. உங்கள் புகைப்படஙகளை வாங்கி வைத்துக் கொள்வார்கள். நீங்கள் செலக்ட் செய்யப்பட்டு, வேலை பார்த்தால், சம்பளம் உங்களுக்கு. குறிப்பிட்ட சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் அவர்களுக்கு. அவ்வளவுதான்.

எங்களிடம் பணம் கொடுத்து, பதிவு செய்து கொள்ளுங்கள் என்று யாராவது சொன்னால், யோசித்து செயல்படுங்கள். அது வேண்டாம் என்றே சொல்வேன்.

திரும்பவும் சொல்கிறேன். கவனமாக செயல்பட்டால், நல்ல வருமானமும், புகழும் கண்டிப்பாகக் கிடைக்கும். அதே சமயம், எந்த வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாமல், ஜாக்கிரதையான உள்ளுணர்வுடன் இந்தத் துறையில் இறங்குங்கள். இது முழுக்க, முழுக்க, உங்கள் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

இதில் நான் ஒரு முக்கியமான விஷயத்தை இன்னும் சொல்லவேயில்லையே, கவனித்தீர்களா?

இந்த மாடலிங் ப்ரொஃபஷன் சென்னையில் வசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஏனென்றால், இரண்டு தினங்களில் ஷீட்டிங், அல்லது நாளை காலையில் ஷீட்டிங் என்றால், சென்னையில் இருக்கும் மாடல்கள்தான் வந்து நடிக்க முடியும்.

சரி, தோழிகளே, இந்தத் தகவல்களுடன் நான் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.

கடந்த எட்டு மாதங்களாக, இந்தப் பகுதி மூலம், உங்களிடம் பேசியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்திருக்கிறது.

நான் பல முறை சொன்னது போல, நான்தான் உங்கள் எல்லோரிடமும் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

அன்பான பின்னூட்டங்கள் தந்து, என்னை உற்சாகப் படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த, மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படியெல்லாம் பல விஷயங்கள் எழுத முடியும் என்று எனக்குத் தோன்றியதே இல்லை. என் மேல் நம்பிக்கை வைத்து, வாய்ப்பு தந்து, என்னை எழுத வைத்த, நமது மதிப்பிற்குரிய அட்மின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மனதில் இருக்கும் நிறைவையும், மகிழ்ச்சியையும், நன்றியையும், அழகாகச் சொல்ல, எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அன்புத் தோழி வனிதாவின் வைர வரிகளை, கடனாகப் பெற்று, இங்கே பதித்து, மனம் நெகிழ்கிறேன்.

அறுசுவை... ஒரு அரிய சுவை !!!

சில தினங்கள் காணாமல் இருக்க திட்டங்கள் தீட்டினாலும் தோற்றுத்தான் போகிறேன். என்ன செய்து என்னை இங்கு சிறை பிடித்தாய்??

உன்னுடன் கூடிய நட்புக்கு வயது இரண்டு தான்... ஆனால் ஈரேழு ஜென்ம பந்தம் போல் உணர்கிறேன்.

தனிமையில் அமர்ந்து உன்னிடம் பேசாத போதெல்லாம் சுற்றி பலர் இருந்தும் தனிமையை உணர்ந்த மாயம் என்ன?!

எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்.

வீடுவிட்டு, நாடுவிட்டு தனிமையில் வாடியபோதெல்லாம் தோழிகள் பல தந்து மனதில் நிம்மதி தந்த உனக்கு நான் தர... என் எழுத்தும், நன்றியும் மட்டுமே

”எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்”

”அறுசுவைக்கு நான் தர ... என் எழுத்தும், நன்றியும் மட்டுமே”

இந்த வரிகள் மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன!!!

நன்றி அட்மின், நன்றி தோழிகளே!

இப்போதைக்கு, இந்தப் பகுதியிலிருந்து விடை பெறுகிறேன்.

மீண்டும் அறுசுவையின் அற்புத சுவையுடன் கூடிய மற்ற பகுதிகளில் சந்திப்போம்.

வணக்கம்.

அன்புடன்
சீதாலஷ்மி

Comments

நிச்சயமா,ஒரு நிமிடத்தில் வந்து போகும் விளம்பரங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்கும் ஒன்று.அந்த துறையில் உள்ள சாதக ,பாதகங்களை தெளிவா சுட்டி காட்டி இருக்கீங்க.நிறைவுப்பகுதி என்று படித்தவுடன் கவலையாக இருந்தது,இந்த பகுதி மூலம் நான் அறிந்து கொண்ட விஷயங்கள் ஏராளம்.நன்றிகள் பல உங்களுக்கு.விரைவில் மற்றொரு புதிய பகுதியில் புதிய செய்திகளை எதிர்பார்கிறேன்.வாழ்த்துக்கள் சீதாமேடம்.

Dear Madam,
Ini Oru Pani Seivom is really superb. You say some ideas and works doing from home. But more ideas and suggestions like Tution Teachers, Creche are use to us. I am also searching suitable work.

அன்பு ரீம்,

இந்தப் பகுதியில் தொடர்ந்து பின்னூட்டங்கள் தந்து, உற்சாகப்படுத்தி வருகிறீர்கள். அதற்கு முதல்ல என் நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.

ஒவ்வொரு முறையும் தோழிகள் தரும் பின்னூட்டங்கள், அடுத்த பகுதியைத் தொடர்வதற்கு என்னை உற்சாகப் படுத்தியது. உங்க அனைவரின் கருத்துக்களின் மூலம், நானும் நிறையக் கற்றுக் கொண்டேன்.

இந்தப் பகுதி தொடங்கி, எட்டு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. எனக்குத் தெரிந்த விஷயங்கள், ஓரளவுக்கு சொல்ல முடிந்ததைப் பற்றி எனக்கும் மகிழ்ச்சி.

படிப்பு, வேலை வாய்ப்பு, பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்,புதுமையான துறைகள், இப்படி நிறைய எழுதக்கூடிய தோழிகள் நிறையப் பேர் இருக்கீங்க. நீங்க எல்லோரும் எழுதுவதைப் படிக்க, எனக்கும் ஆர்வமாக இருக்கு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் சிறப்பாக இருக்கீங்க. அறுசுவையில் நாம் எல்லோரும் நமக்குத் தெரிந்ததை, பகிர்ந்து கொள்ள முடிவது சிறப்பான அம்சம். உங்க அனைவருடைய படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வெங்கடேஸ்வரி,

அறுசுவையின் புதிய உறுப்பினரான உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

உங்களுடைய முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அழகா,அருமையா இந்த பணியில் இருக்கும் சாதக பாதகங்களை கச்சிதமா நுணுக்கமா சொல்லியிருக்கீங்க..வாழ்த்துக்கள்

எப்படிம்மா உங்களுக்கு இவ்வளவு நுணுக்கமா பல துறைகளை பற்றிய விவரங்கள விலாவரியா விளக்க முடியுது...ரியலி க்ரேட்

உங்க கவிதையும் உங்களைப்போலவே மனதை நெகிழ செய்கிறது

என்றும் ப்ரியமுடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு இளவரசி,

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.

இந்தத் துறையைப் பற்றி, என் பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு டிடெயிலாக சொல்லி, உதவி செய்தேன். இப்ப நம் அறுசுவை தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சி.

அந்தக் கவிதை என்னுடையதல்ல. வனிதா எழுதினது. எனக்கு ரொம்பப் பிடிச்சதால், கடன் வாங்கி, இங்கே பதிவு செய்து விட்டேன்.

இதற்கு முந்தின இரண்டு பகுதியும் பார்த்தீங்களா? அந்த இரண்டு பகுதியிலும் உங்களுடைய பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா, நீங்க டீச்சிங் ப்ரொஃபஷனில் இருந்தவங்க, அத்துடன் அது தொடர்பான ஆன்லைன் டீச்சிங் ஜாப் பற்றி, தகவல்கள் தேடிட்டு இருந்தீங்க, இல்லையா? அதனால், பிரிட்டிஷ் கவுன்சிலின் வேலை வாய்ப்பு தகவல்கள் ஒரு வேளை உங்களுக்குத் தேவைப்படும் என்று நினைத்தேன். நேரம் இருக்கும்போது, அவற்றைப் பாருங்க. உங்களுடைய கருத்துக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலஷ்மி... என்னடா இதையும் நிறைவுப்பகுதின்னு போட்டுட்டீங்கன்னு ஓடி வந்து பார்த்தேன்... இது நான் மிஸ் பண்ணாம படிச்சு எங்க அம்மாவிடமும் பகிர்ந்து கொண்ட பகுதி... அத்தனை அருமையான பயனுள்ள தகவல்கள், நம்பிக்கையூட்டும் வரிகள். கண்டிப்பா ரொம்பவே மிஸ் பண்ணுவேன் இனி. ஆனாலும் கடைசியா (கவிதைன்ற பெயரில்) என் வரிகளை சேர்த்து என் மனசை விட்டு இந்த பகுதி எப்பவும் நீங்காம இருக்க வெச்சுட்டீங்க. உங்க அங்கீகாரமே அந்த வரிகளுக்கு கிடைச்ச வெற்றியா நினைக்கிறேன். மீண்டும் எந்த பகுதியில் எழுதுவீங்கன்னு காத்திருக்கோம்... வாங்க சீக்கிரம், புது பகுதியில். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனிதா,

உங்கள் அனைவருடைய உற்சாகமான பின்னூட்டங்கள்தான் இவ்வளவு நாட்களும் இந்தப் பகுதிகளை வழி நடத்தின. அதற்கு என் மனப்பூர்வமான நன்றி.

இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் கனவு கூட கண்டதில்லை. அட்மினுக்கும், நம் தோழிகள் அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வது என்று யோசித்தபோது, மனதிற்குள் உடனே வந்தது உங்கள் வரிகள்தான். உங்ககிட்ட முன் அனுமதி வாங்காமலே(!) அவற்றை இங்கே பதித்து விட்டேன். அழகான கவிதை வரிகளைத் தந்ததற்கு நன்றி, வனிதா.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்

சீதாலஷ்மி

its really super and very useful....... indha pagudhi padichi neraya per payan adainjirupanga...........

அன்பு மஹிகார்த்தி,

வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

தோழிகளுக்கு இந்தப் பகுதியினால் பயன் கிடைத்திருந்தால், அதுவே இந்தப் பகுதியை எழுதியதற்கான மன நிறைவைத் தரும்.

அன்புடன்

சீதாலஷ்மி

செம்ம அழகாக தெளிவாக எழுதியிருக்கீங்க..சில சிலவாரங்களுக்கு முன் தான் படித்தேன்..அப்பொழுது தான் நீங்கள் தொடர்ச்சியாக எழுதியது தெரிந்தது...ஒவ்வொரும் தெளிவாக உபயோகமாக தகவல்களாக இருந்தது.உங்க பேரனுக்கு சூப்பர் பாட்டி கெடச்சிக்காங்க.கொடுத்து வச்ச பேரப்பிள்ளை:-)

வீட்டிலிருந்தெ வியாபாரம் செய்ய பெயரை sms செய்து அனுகவும் 9486575112

மேடம் இன்றுதான் அனைத்து பகுதிகளையும் படித்தேன்.எங்கள் கண்களை திறந்தது மட்டும் இன்றி வழியையும் காட்டிவிட்டீர்கள்.very useful to us.thankyou verymuch.

நிச்சயமா,ஒரு நிமிடத்தில் வந்து போகும் விளம்பரங்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோரும் ரசிக்கும் ஒன்று.அந்த துறையில் உள்ள சாதக ,பாதகங்களை கவலையாக இருக்கீங்க.மற்றொரு புதிய செய்திகளை i will tel you how now naam vetil obayohikum porul kalai nan narediyaha vanginal (if we by dirctly we can save more money and helthi good blesed income so please akka go to this site and please check i am member i am new but i am monthly minium 500 dirham like 150$ if i can work more time i can get more benefit

Fathima john
mem id :-141071282

www.dxn2u.com

or www.dxnusa.com

கனோடெர்மா (ஆர்.ஜி

விரிவான தகவல்:
கனோடெர்மா (ஆர்.ஜி) (ஜி.எல் )

கனொடெர்மா என்பது சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகையாகும். இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக சீனா, ஜப்பான், கொரியா, போன்ற ஆசிய நாட்டு மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

M.Fathima john
dxn mem id:-141071282
e-mail:-dxnmohamedali@gmail.com
unitedarab emirates dubai (alain)

சீதாலஷ்மி
http://www.iimsam.org/benefits.php

வெற்றியடைய வாழ்த்துக்கள்.

M.Fathima john
dxn mem id:-141071282
e-mail:-dxnmohamedali@gmail.com
unitedarab emirates dubai (alain)

அன்பு தளிகா,

இன்னிக்குதான் உங்க பதிவைப் பார்த்தேன். உங்க பாராட்டுக்களுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு காமினிசெல்வி,

பாராட்டுக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

iniyoru pani seivom s really fantastic and usefull. naan oru illatharasi, yenaku veetil iruntha padiye work pana aasai, b;sc computer science padithirukiren, data entry work ithu ponra computer sambantha pata work details thevai padukirathu, atharkana valimuraikalaium,atu ponra job offer um irunthal thayavu seithu therivikavum, ithanal yennai ponra palar payanadaivar. yethir paarpudan...............

life can give us hundred reasons to cry,but god can give us hundred reasons to smile, SO SMILE FOREVER!!!

setha madam has given a good suggestion.

naan ennapandrathunnu theriyama irithen.nethikku than pattithen mikavum arputham.

god is great

hai,iam nandhiya.enakku suyathozhil seyanumnu aasai adhanala redymade idly,dosai maavu buissines seyalamunu ninaikiren adhai patthi terinja konjam solunga please

hai sir,

I want know the job details, can you send the me details for following email krajee2311@gmail.com

Tks
Rajalakshmi kumaran

K.Rajee

I know this is not right place to post this comments but
everybody like to earn some extra money from home.so just go through it.
If you wish you can continue to read the remaining.
You can get paid by playing games, posting comments on youtube,
facebook and tweeting on twitter etc. No experience is required and you can start the work immediately.The jobs are very simple and they will pay directly on your account. Very simple works and you can work as much as you like. Try the trial version which cost you only 1$.
Best investment for your lifetime earning. Try today itself
http://goo.gl/PQtXx

Hello,

I am a new member of our site.Wish you a happy new year and happy pongal.

I am interested in making of imitation jewelry(Hand made).

So I need some mail ID for that.

Thanks,

A.shunmugalakshmi

vanakkam madem,
Naan arusuvai website adikadi parppen.But internet vasathi konjam kuraivu. So recent a than intha paguthi parkka mudinthathu. But neenga complete pannitu porenga. Ella part um nan parthuten. Now i feel sad bcoz i miss u. Ellaroda pathivugalai um parthen. 2 sisters solliruntha pola nanum BE(engineering ECE) mudichathum marriage. ippo oru piyan 1 & 1/2 age ahuthu.Etavathu pannanum nu oru periya aasai veri nu sollalam But experience illama enna pandrathu nu than yosikiren . Home la iruthu than pannalam nu ninaikiren enna pannalam nu idea kodunga. paguthi mudinjutathala nan epdy therinjukirathu nu theriyala but please help me.

thanks

Anbey kadavul

மேடம் எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தர இயலுமா.நான் படிக்கும் போதே வீட்டு சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் நிருத்திவிட்டேன் மேற்கொன்டு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் உள்ளேன் எனக்கு யோகா படித்தும் உள்ளேன் மனது பெரும் குழப்பதில் உள்ளது மேடம் பிளீஸ் ஹெல் மீ

கவிதை என் சுவாசமும் நேசமும்

எனக்கு வீட்டில் இருந்து தட்டச்சு செய்யும் வேலை வேண்டும். யாராவது நம்பிக்கையான வேலை இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.. எனக்கு Corel draw designing, தமிழ் இங்கிலீஷ் தட்டச்சு தெரியும்.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான்.

அன்பு நண்பர்களே! வணக்கம்!

இண்டர்நெட் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிவீர்களா?
அதுவும் எந்த முதலீடும் இன்றி!

இதில் யாரும் யரையும் ஏமாற்றபோவதில்லை என்பதை மட்டும் உறுதியாக கூறுகிறேன்.

உங்களின் ஓய்வு நேரத்திலும், முதலீடு இல்லாமலும், இணையத்தில் பணம் சம்பாதிக்க இந்த தளம் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

►►► http://tamilptc.blogspot.in/ ◄◄◄

இது ஒரே நாளில் உங்களை பணக்காரன் ஆக்கி விடாது.

நீங்கள் தனியே செயல்பட்டால் சிறு தொகைதான் கிடைக்கும்.

ஆனால் நண்பர்களோடு இணைந்து நாம் செயல்படும்போது நீங்களே எதிர்பார்க்காத அளவு பெறும் தொகை கிடைக்க வாய்ப்புள்ளது.

வாருங்கள் நண்பர்களே ஒன்றுபடுவோம்!உயர்வோம்!

பணம் சம்பாதிப்பது குறித்து மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் கீழ்க்கண்ட மின்னஞ்சல்,செல் போன் வாயிலாக நீங்கள் என்னைத் தொடர்புகொள்ளலாம்.

pratheep.onlineearnings@gmail.com

+91 8608750546

என்றும் அன்புடன்,
அ.பிரதீப்

super market vakurathuku yanalam pananum kojam idea kuda madam plz..