என் சமையல் அறையில் - அம்முலு (ஜெர்மனி)

அம்முலு சமையலறை


என் சமையல் அறை - வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான இடம். எங்கள் வீடு நிலம் வாங்கி திட்டமிடப்பட்டு கட்டிய வீடு என்றபடியால், என் விருப்பத்திற்கு ஏற்ப என் சமையல் அறை கட்டப்பட்டது. என் பேவரிட் கலரான ஓரேஞ் கலர் டைல்ஸ் பதிக்கப்பட்டிருக்கிறது. ஜன்னலில் ஒரேஞ் கலர் செம்பருத்தி, ஐந்தூரிய பூமரங்கள். மேடையில் ப்ரெஷ் காப்பி குடிக்க காஃப்பி மெஷின், ப்ரெட் டோஸ்டர். இங்கே உள்ள ஜன்னலினூடாக காலை வெயில் பளிச்சென வரும். {சம்மரில் மட்டுமே அதிக நேரம் கிடைக்கும்}. ஜன்னலுக்கு வெளியே தெரிவது, பக்கத்து வீட்டினரின் மழை நீர் சேகரிக்கும் தாங்கி.

my kitchen
 

இது Breakfast nook. ஆனால் டைனிங் டேபிளாகவும் பாவிக்கலாம். இழுத்து, மடிக்க கூடிய வசதி உள்ளது. முழுக்க கண்ணாடியால் ஆனது. க்ளீனிங் சுலபம். இடதுபக்கம் ப்ரிட்ஜ், படத்தில் தெரியும் கதவிற்கு அந்தப்பக்கம் அறை இருக்கிறது. உண்மையில் அது டைனிங்ரூமாகதான் ப்ளான் இருந்தது. பின் அது சாத்தியப்படாமல் ஆபிஸ் அறையாக மாற்றப்பட்டுள்ளது. மேலே மாசாலா வகை அடங்கிய ஒரு படம்.

my kitchen
 

இக்கதவைத்திறந்தால் சின்னதாக டெராசா(terrace). தடுப்பு பலகை போட்டுள்ளோம். ஏனெனில் பக்கமாக வீதி(road) இருக்கிறது. அத்துடன் குப்பைகளை போட பெரிய containers 4 இருக்கின்றது. நான்கு பிரிவாக பேப்பர், பிளாஸ்டிக், உணவு, இதரவகை எனத் தனிதனியாக போடவேண்டும். நான் உடனுக்குடன் குப்பைகளை டிஸ்போஸ் செய்துவிடுவேன். ஒவ்வொரு கிழமையும் வந்து குப்பைகளை எடுத்துப்போவார்கள். இக் கதவினூடாக மாலை வெயில் வெளிச்சம் தாராளமாக கிடைக்கும். பக்கத்து வீட்டு ஜேர்மன்காரர் பலவிதமான குருவிகள் {லவ்பேர்ட்ஸ் உட்பட சுமார் 300 குருவிகள்} வளர்க்கிறார். அவைகள் எழுப்பும் ஒலிகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

my kitchen
 

சிம்னி பக்கம் இருக்கும் கப்போர்டில் ஒரு பக்கம் செரமிக்கால் ஆன ப்ளேட்ஸ், தேனீர் கோப்பைகள், கப் அண்ட் ஸோஸர்கள். மறுபக்கம் கண்ணாடி glasses வைத்திருக்கிறேன். கதவிலும் glass {milk glass என்று இங்கு கூறுவார்கள்.} பொறுத்தப்பட்டிருக்கிறது. சிம்னி ஸ்டையின்லஸ் ஸ்டீலால் ஆனது. சமைத்து முடித்ததும், {உள்ளே பில்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.} பில்டர் உட்பட முழுவதையும் வினிகர் க்ளீனிங்கால் (vinegar cleaning) துடைத்துவிட்டால் பளிச் பளிச்.

my kitchen
 

இதுவும் என் விருப்பபடி மேலே அமைக்கப்பட்ட ”அவன்”(oven). அனேகமான வீடுகளில் ஸ்டவ் உடன் oven இருக்கும். எனக்கு அதில் விருப்பமில்லை. ப்ளானில் இப்படி அமைக்க செய்துவிட்டேன். அதன் மேலே இருக்கும் கப்போர்ட்டில் மைக்ரோவேவ் வைத்திருக்கிறேன். ஆனால் அதில் மிக அவசரம் எனில் மட்டுமே சூடுபடுத்துவேன். காலண்டர் ஒன்று. இதுதான் சமையலறை வாசல். கதவிற்கு glass பொருத்தப்பட்டிருக்கு.

my kitchen
 

வேஸ்ட்பின் 3 இருக்கிறது. இதில் முன்னால் இருப்பது உணவு சம்பந்தப்பட்ட குப்பைகளுக்கானது. மற்றையது பிளாஸ்டிக் & பேப்பர் போடுவது. கதவிற்கு பின்னால் கார்னரில்(corner) இருக்கும் கப்போர்ட் சுற்றும் வசதியுடையது. அதில் பாத்திரங்களை வைத்திருக்கிறேன். மற்றைய கப்போர்ட்டில் தேவையான மளிகை சாமான்கள் இருக்கின்றன. மற்றும் டிஷ்வாசர் (dishwasher) இருக்கிறது. நான் வினிகரைதான் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்துகிறேன். சுத்தம் செய்வதற்கென இங்கு க்ளீனிங் வினிகர் என்றே மார்க்கெட்டில் இருக்கிறது. {வினிகர் பற்றி வானதியும் அவருடைய சமையலறையில் குறிப்பிட்டிருக்கிறார்.} இதுதான் “என் சமையல் அறை” :-)

my kitchen
 

Comments

ரொம்ப அருமை அம்முலு, நேர்த்தியாக இருக்கு, சூப்பர் , எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,
ஜலீலா

Jaleelakamal

இந்த கிச்சனை பார்த்ததும் சமைத்து கொண்டே இருக்கலாம் போல இருக்கு.எந்த இடமுன்னு எழுதலையே
ஜலீலா

Jaleelakamal

மிகவும் அழகான கிட்சன் அம்முலு. பார்க்க வித்தியாசமா இருக்கு, அழகாவும் இருக்கு. சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அழகாக ,நேர்த்தியாக,திட்டமிட்டு வடிவமைத்திருக்கிரீங்க அம்முலு.
இந்த சமையலறையில உக்காந்து குடிக்க ஒரு Coffee கிடைக்குமா?

அன்புடன்

றஹீமா பைஷால்

உங்க கிட்சன் ரொம்ப அழகா இருக்கு.

ஹாய் அம்முலு....அப்பப்பா...வச்ச கண்ணு வாங்காமா பார்த்து கொண்டே இருக்கலாம் என்று உள்ளது உங்களுடைய கிச்சன்.
நீங்களே சொந்தமாக அமைத்தது போன்று சொல்லி இருக்கின்றீர்கள்.
தாங்கள் இருக்கும் ஊர் எதுவென்று தெரிந்துகொள்ளலாமா...?
நிஜமாவே எனக்கு நீண்ட நாளாக(அதுவும் சமீபகாலமாக மிகவும்...)கிச்சனை இது போன்று நல்ல அமைப்பில் கட்டியபடி வீடு அமைய வேண்டும் என்று மனதில் ஆசை உள்ளது.இப்போது உங்கள் கிச்சனை பார்க்கும் போது அந்த ஆசை இன்னும் அளவுக்கு அதிகமாயிற்று.
கப்போர்டும்,குப்பை போடும் விதமும்,பூந்தொட்டிகளும் நல்லதொரு அமைப்பு.

சூப்பர்...சூப்பர்....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அட்டகாசமா இருக்குங்க உங்க கிச்சன்..எல்லாமே பளிச் பளிச்..
கிடைச்ச வீட்டில் இருக்கறதவிட..நமக்கு பிடிச்சமாதிரி பார்த்து கட்டின வீட்டு சமயலறைன்னா சும்மாவா...சூப்பரோ சூப்பர்...வினிகர் க்ளினிங் நல்ல டிப்ஸ்..
குப்பை தொட்டியும் RECYCLING படி ஐடியா சூப்பர்..
ரசிக்கும்படி இருக்கு....வந்து சாப்பிடலாமா :-
ஆரஞ்சு வண்ண பூக்கள் அம்சமா இருக்கு..வாழ்த்துக்கள்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

அன்பு அம்முலு,

ரொம்ப அழகாக வடிவமைச்சிருக்கீங்க. மிகவும் பிரமாதம்.

எந்த ஊர்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

என் சமையல் அறை படங்கள் அறுசுவையில் பிரசுரித்தமைக்கு அட்மின் அண்ணாவிற்கும்,அறுசுவை குழுவினருக்கும் ரெம்ப நன்றிகள்.

ஜலீலாக்கா நலமா?ரெம்ப நன்றிகள் ஜலீலாக்கா.அதுவும் நீங்க முதலாவதாக வந்து பாராட்டியிருக்கிறீர்கள்.வாருங்கள் என் வீட்டிற்கு. நான் இருக்கும் நாடு
ஜேர்மனி.

வனிதா நலமா? ரெம்ப நன்றிகள்.என்னில் கோபமாக இருப்பீர்களோ என நினைத்தேன்(.நிச்சயம்கோபம் இருக்கும்)ச.அசத்தலாம் நிச்சயம் வருவேன்.மன்னிக்க.யாழினி,குமரன் நலமா?

றஹீமா பைசல் நலமா? கண்டிப்பாக வாருங்கள்.காப்பி கிடைக்கும்.உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றிகள்.

சுப்பர். அழகாக ரசிச்சு எழுதி இருக்கிறீங்க. நீங்க எந்த நாட்டில இருக்கிறீங்க?

உங்கள் சமையலறையில் டிஷ்வாசர் ஐடியா, கிச்சன் கதவையும் கிளாஸ்ஸ கொண்டு வடிவமைச்சிருப்பது, ஆரஞ்சு கலர், பூத்தொட்டி என்று ரொம்பவே அழகாக இருக்கு அம்முலு.

reem உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி.

ஹாய் அப்சரா நலமா.நான் ஜேர்மனியில் இருக்கேன்.அதில் இடம் போடமறந்துவிட்டேன். நாங்கள் ப்ளான் செய்து கட்டியபடியால் {காணிவாங்கி}
எங்களுக்கு ஏத்தமாதிரி கட்டமுடிந்தது.உங்க ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துகிறேன். உங்க பாராட்டுக்கு நன்றி அப்சரா.

இளவரசி உங்க பாராட்டுக்கு நன்றிகள். நலமாக இருக்கீங்களா? தாராளமாக வாருங்கள் எங்க வீட்டிற்கு சாப்பிட. என்னவருக்கு சுத்தம் சுத்தம் இதுதான் தாரக மந்திரம். ஆரஞ்சு செம்பருத்திபூ தற்செயலாக கிடைத்தது. கிச்சனுக்கும் பொருத்தமாகிவிட்டது.

உங்க பாராட்டுதல்களுக்கு ரெம்ப நன்றிகள் வினோஜா.

ரெம்ப நன்றிகள் சீதாக்கா. நலமா இருக்கீங்களா. நான் இருப்பது ஜேர்மனியில்.

ரெம்ப நன்றிகள் புனிதா. எந்த நாடு என நீங்க கண்டுபிடிங்க.

hello ammu madam ungal kitchen supero super.itumathiri kitchen vendum endru asai thodrukirathu.

Hello ammulu, how r u? Unga kitchen ivalo alaga? Varnika varthaigale ilai. Unga planingku muthala,congrats! Ivalo cleana pathukarathu,oru thani kalai than. Unga kitchen unga manasa pola avolo clean &perfect. En mobilela tamil type pana mudiyathu. Adjust my thanglish.

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

ரெம்ப நன்றி ராதிகா.

உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றி சங்கீசெந்தில்.

உங்க கிச்சன் மிக்க அழகு,நல்ல வசதியும் கூட,டிப்ஸ் அருமை.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரெம்ப நன்றி ஆசியாக்கா. நலம்தானே.
உங்க எம்டி சால்னாவையும், தக்காளி வெங்காயச்சட்னியையும் மறக்கமுடியாது.
ஆல்டைம் பேவரிட்.நன்றி.

அம்முலு உங்க கிச்சன் சூப்பர்ங்க. மிகவும் அழகாக உள்ளது. உங்கள் புது கிச்சனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதை இப்படியே மெயின்டைன் பண்ணி புதுசாகவே வைத்துக்கொள்ளுங்கள்.

அம்முலு, உங்க கிட்சன் பார்க்க அழகா இருப்பதோடு,அருமையான விளக்கமும் கொடுத்திருப்பது சூப்பர்.

என்னுடைய கிச்சனும் கிட்டத்தட்ட இதே வடிவமைப்புதான்.கிட்சன் தான் பெண்களின் முக்கியமான இடம்.
இந்த ஊரில் நல்ல விதமாகவே வடிவமைத்து விடுகின்றார்கள்.
அது எனக்கு பிடித்தமான ஒன்று.எனவே பார்த்து பார்த்து அழகாக வைத்திருப்பேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரெம்ப நன்றி வின்னி. நீங்க கூறியபடி புதுசாக வைத்திருக்கிறேன்.தொடர்ந்தும் அப்படி வைத்திருக்கவேணும் என்பதே என் விருப்பமும். நன்றி.

hello.. ellorum eppdi irukinga.. nan indha araitku,,, pudusu.. ennayum varaveripigala