என் இரண்டு வயது குழந்தை ...

அன்பு தோழிகளே வணக்கம் ...நான் இந்த இனயதளத்திற்கு புதிது .. எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது ..என் குழந்தயை சிரு வயதிலுருன்தே தொட்டிலில் ஆட்டி தூங்கவைத்து பழக்கிவிட்டோம் .. இப்பொழுதும் அவள் தொட்டிலில் தான் தூங்குகிறாள்... பெட்டிள் உறங்க மறுக்கிறாள் .. இந்த பழக்கம் நாளடைவில் மாறிவிடுமா ... என் குழந்தையை பெட்டிள் உறங்க வைக்க சில யோசனை கூருங்களேண்..ப்ளீஸ் ....தோழிகளே ப்ளீஸ்...

என் குழந்தையும் இப்படிதான் இருந்தான்.. நீங்கள் இரவில் இனி பெட்டில் படுக்கவையுங்கள். அருகில் படுத்து இருக்கி அனைத்து குழந்தையை தூங்க வையுங்கள். முதலில் முரண்டு பிடித்தாலும் நாளடைவில் சரி ஆகிவிடும்.. இனிமையான பாடல்களை பாடி அவளை அனைத்து படுத்துக்கொள்ளுங்கள்.. குழ்ந்தையின் மனது ஒருமைபடும்போது தானாக தூங்கிவிடும்.. முயர்சிக்கவும்

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

அன்பு சிவகாமி அக்கா, உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி ..நான் நீங்கள் கூறியபடி முயர்சி செய்து பார்கிறேன் அக்கா ...

அன்புடன்,
ஷகியா இஸ்ஹாக்

Express Yourself .....

அக்கானுலாம் கூப்ட வேண்டாமே.. சிவகாமினே கூப்டுங்க போதும் பா..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

சரி, உங்கள் விருப்பப்படி சிவகாமி ணே கூபிடுறேன் ........ :))))

Express Yourself .....

முதலில் குழந்தை விரும்பும் படியே தொட்டிலில் இட்டு நித்திரையாக்குங்கள் அவர் நன்கு நித்திரயானதும் பெட்டிற்கு மாற்றுங்கள் , எழும்பி அழுதால் மீண்டும் தொட்டிலில் இடுங்கள் நன்கு நித்திரையானதும் மீண்டும்பெட்டிற்கு மாற்றுங்கள் இவ்வாறு நான்கைந்து நாட்கள் செய்தீர்களென்றால் அவர் இரண்டிலுமே நித்திரை கொள்ள பழகிவிடுவார்

அன்புள்ள ப்ருந்தா ... தற்பொழுது அப்படிதான் செய்து கொண்டிருக்கிரேன் ..... மாற்றம் வரும் என நம்புகிறேன் ...
உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி மா ..

Express Yourself .....

மேலும் சில பதிவுகள்