சமைத்து அசத்தலாம் பகுதி - 4

சமைத்து அசத்தலாம் பகுதி - 4

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

ammujan24 - 35
mdf - 38
Nithyagopal - 39

இவற்றில் இருந்து வரும் Dec 27ஆம் தேதி முதல் Jan 3 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

இம்முறை கணக்குபிள்ளை யாழினி(நான் தாங்க)... செல்ல கொட்டு வாங்காமல் கணக்கெடுக்க தயாராக காத்திருக்கிறேன். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

சமைத்து அசத்தலாம் பகுதி - 4 அசத்தலாக ஆரம்பம் ஆகியாச்சு தோழிகள் அனைவரும் கல்ந்துக்கோங்க சீக்கிரம் வாங்க இன்று வந்து முதலாவதாக கணக்கு கொடுப்பவருக்கு ஒரு ஸ்பெஷல் நியூ இயர் கேக் பார்சல் செய்து தரப்படும். எங்க எல்லாரும் சீக்கிரம் வாங்க பார்க்கலாம்.

இம்முறை கலந்துக்கொள்கிறேன் யாழினி.....
(முடிந்தால் :))

செய்துட்டு சொல்றேன். கலந்துக்க போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமி நிச்சயம் கலந்துக்கனும் நீங்க இந்த முறை உங்களை எதிர்பார்க்கிறேன்பா. முடிந்த போது செய்து அசத்துங்க. முதல் பதிவிட்டதுக்கு நன்றி ஆமி.

ஹாய் யாழினி நலமா...?
என்னடா...இன்னும் 4- ம் பகுதியின் எக்ஸ்பிரஸ் இன்னும் ரெடியாகவில்லையே என்றிருந்தேன்.ஒரு வழியாக ஆரம்பிச்சுட்டீங்க.
எங்கே நம்ம தல வனி?சரி வந்து எப்படியும் ஜாயின் பண்ணிடுவாங்க....
இந்த தடவை எக்ஸ்பிரஸை ரன் பண்றதும்,கணக்கு எடுப்பதும் சேர்ந்தே பாக்க போறீங்க...பலே பலே.....
ஆல் த பெஸ்ட் யாழினி.....
நானும் முடிந்த அளவு உலாவருகின்றேன் சரியா...?
கலந்து கொள்ள இருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.
எல்லாருக்கும் இந்த கிளைமேட்டுக்கு சூடா டீயோட வந்து இருக்கேன்.எல்லோரும் வந்து குடிச்சிட்டு தெம்பா சமைங்க பார்ப்போம்....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

எல்லோரும் நலமா தோழிகளே?????????.
யாழினி...........எங்கே இன்னும் காணல்லையே என்று பார்த்தேன்.ஆரன்பித்தாச்சா..சந்தோசம்.
இந்த கிழமை சமைக்க இருக்கும் சமையல் ராணிகளின் குறிப்புக்களிலிருந்து, குறிப்புக்கள் தெரிவு செய்து விட்டேன்.
இனி சமைக்க வேண்டியதுதான்.சமைத்து ருசிபார்த்துவிட்டு வருகின்றேன் பதிவு போடுவதற்கு.
கலந்துகொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் அப்சரா, எப்படி இருக்கீங்க நிச்சயம் வந்து கலந்துக்கனும். எதிர்பார்க்கிறேன். முடியும்போது வந்துட்டு போங்களேன். வாழ்த்துக்கு நன்றிபா. தல இல்லாம நான் மட்டும் எப்படி சமாளிக்க போறேனோ தெரியல.

யோகராணி மேடம் பகுதி -2 ல் கலந்துகிட்டு அசத்துனீங்க அதுபோல் இந்தமுறையும் உங்கள் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

நானும் கலந்து கொள்கிறேன்.என் பேரையும் சேர்த்துக்கோங்க.உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வாங்க ரீம் நிச்சயம் உங்கள் பெயரையும் சேர்த்துட்டேன் சமைத்து அசத்துங்க. வாழ்த்துக்களுக்கு நன்றி.

என்ன தோழிகளே நேற்று யாரும் சமைத்து அசத்தலாம் குறிப்புகள் ஒன்று கூட செய்து பார்க்கவில்லையா? எங்க இன்னக்கி எல்லாரும் வேகமா வாங்க பார்க்கலாம். இது உங்கள் பகுதி நீங்க தானே அதை நடத்தி செல்லனும். கணக்கெடுக்க நான் ரெடியாகிட்டேன் நீங்கலாம் ரெடியா?

என் கணக்கு:
அம்மு மது - மொறுமொறு அடை, மதியத்துக்கு சிம்பிள் ப்ரைட் ரைஸ்
நித்யா - எண்ணெய் கத்திரிக்காய்

யாழினி நேற்றைய சமையல் இது குறித்துக்கொள்ளுங்கள்.
ப்ரெட் பக்கோடா - mdf
உடுப்பி ஹோட்டல் வொய்ட் சட்னி, காரட் ஜூஸ் - அம்முமது
பீட்ரூட்-காரட் சூப் - நித்யா கோபால்

மேலும் சில பதிவுகள்