கார அடை

தேதி: December 27, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (5 votes)

 

புழுங்கல் அரிசி - அரை படி
துவரம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
வர மிளகாய் - இருபது நம்பர்
சோம்பு - இரண்டு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
பல்லாரி - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
மல்லித்தழை - விருப்பத்திற்கு


 

முதலில் வெங்காயம், மல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்.
அரிசி பருப்பு வகைகளை மூன்று மணி நேரம் ஊற வைத்து பிறகு கிரைண்டரில் அரைக்கவும். அதனுடன் மிளகாய், சோம்பு, உப்பு போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவில் நறுக்கின வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும். இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் தளர்த்தியாக இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கரண்டியால் மாவை எடுத்து ஊற்றி நன்கு வெந்ததும் திருப்பி போட்டு சிவக்க எடுக்கவும்.
சுவையான கார அடை தயார். இதனுடன் தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.

எண்ணெய் விரும்பாதவர்கள் தண்ணீர் ஊற்றி நீர்க்க கரைத்து தோசைக்கல்லில் அடையாக வார்த்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கார அடை செய்முறை நன்றாக உள்ளது ஸ்வர்ணா.
கடலைபருப்பு போடாமல் உளுத்தம் பருப்பு போட்டு செய்யலாமா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பாக்கும் போதே சாப்பிட சொல்லுது

செய்து பார்க்கணும்

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு ஸ்வர். நிச்சயம் நிச்சயம் செய்வேன். அதுவும் நீங்க டிஸ்ப்ளேக்கு வச்சியிருக்கற தேங்காய் சட்னி காம்பினேஷன் அடைய பார்க்கும் போது வாய் ஊருது.

ஸ்வர்ணா கார அடை நல்ல நிறமா பஜ்ஜி மாதிரி இருக்கு. விரைவில் செய்து பார்க்குறேன்.

நீங்க சொன்னபடி கொஞ்சம் லூசா கரைத்து தோசைக்கல்லில் பண்ணினேன். அதுவும் நல்லாவே வந்தது.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாவுக்கு நன்றி நன்றி நன்றி.

(அண்ணா மற்றும் தோழிகள் அனைவருக்கும் தாமதாமான நன்றிக்கு மன்னிக்கவும்
இன்று நான் வெளியில் போயிருந்தேன் அதான் உடனே நன்றி தெரிவிக்க முடியல)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி யோகா உளுத்தம் பருப்பு சேர்த்தால் அது வடை மாதிரி போயிடும், உ.பருப்பு சேர்த்தால் என்னையும் இழுக்கும்.கடலை பருப்பு சேர்ப்பதால் அடை மிருதுவாக இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி ஆமினா நீங்கல்லாம் வாழ்துதுவதில் எனக்கு சந்தோசமே மீண்டும் நன்றி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

யாழி எனது குறிப்புக்கு விடாம வந்து பின்னூட்டம் குடுக்குறீங்கப்பா ரொம்ப ரொம்ப நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நன்றி வினோ செய்து பாத்துட்டு சொல்லுங்கப்பா.மிளகாய் சேக்குரதுனால நல்ல கலரா இருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப நன்றி கோமு.எண்ணெய் ஒத்துக்காதவங்க இப்படி செய்துக்களாம் ரொம்ப நல்லாருக்கும்.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஸ்வர்ணா உங்கள் கார அடை பார்க்கும் போதே நன்றாக உள்லது.
நாங்கள் அரைக்கும் போது பச்சைமிளகாயும்,இஞ்சி சின்ன துண்டும் சேர்ப்போம்.
நீங்கள் காய்ந்த மிளகாய் சேர்த்திருக்கின்றீர்கள்.பார்க்க கலஃபுல்லா இருக்கு.
இந்த முறைபடியும் ஒரு நாள் செய்துட வேண்டியதுதான்.
பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் ஸ்வர்ணா...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி அப்சரா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்ணா..
கார அடை சூப்பர்.. இனிக்கு சாயுங்காலம் டீயும் கார அடையும் தான்.. என்னவர் ரசித்து ருசித்து சாப்பிட்டார்.. ரொம்ப அருமை உங்க கார அடை..

புன்னகையுடன்...
சிவகாமி சுப்ரமணியன்.

ஸ்வர்,நல்ல நல்ல குறிப்பா கொடுக்கறீங்க.வாழ்த்துக்கள்,ஸ்வர்.கார அடை,பார்க்கறப்பவே சாப்பிடத் தூண்டுதே!விருப்ப பட்டியல்ல சேர்த்துட்டேன்,ஸ்வர்.செஞ்சு பார்க்கிறேன்,ஸ்வர்.நிறைய குறிப்புகள் கொடுத்து அசத்த வாழ்த்துக்கள்,ஸ்வர்.

அன்புடன்
நித்திலா

சுவா, அந்த உரப்படை தான் இந்த கார அடையா பா? சூப்பரா இருக்குப்பா. சுவா, எனக்கு மட்டும் மூணு கார அடை பண்ணியிருக்கீங்களே, நம்ம மத்த கோழிகளுக்கு பண்ணலயா பா? ;)) சரி போனா போகட்டும் நான் கொஞ்சூண்டு கிள்ளி நம்ம கோழிகளுக்கும் தர்றேன். சுவா, நிச்சயமா வீட்ல செய்து பார்க்கிறேன் பா. தொடர்ந்து குறிப்புகளை தந்துட்டே இருங்க. வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நன்றி சிமி அப்படியே அடையை ரசித்து ருசித்து சாப்பிட்ட அண்ணாவுக்கும் என் நன்றியை சொல்லிடுங்க சிமி.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா.செஞ்சு பாருங்கப்பா:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்களுக்கு நன்றி கல்ப்ஸ்.வீட்டுல செய்து பாத்துட்டு சொல்லுங்கப்பா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

உங்க கார அடை சூப்பரா இருக்கு பா . நான் கண்டிப்பா சண்டே மார்னிங் டிஃபன் என் வீட்டில் இது தான் பா செய்யபோரேன் இதுக்கு எந்த சட்னி நல்லா இருக்கும்

அன்புடன்
ஸ்ரீ

ஸ்வர்ணா தொடந்து குறிப்பு கொடுத்துட்டே இருக்கிங்க. போற போக்க பாத்த கோல்ட் மெடல் வாங்கிடுவிங்க போல வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.....

உன்னை போல பிறரையும் நேசி.

நீங்க குடுத்த குறிப்ப பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்குபா.கண்டிப்பா எனக்கு நேரம் கிடைக்கும் போது செஞ்சு பார்த்து உங்ககிட்ட சொல்றேன்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ரொம்ப நன்றி ஸ்ரீ.கண்டிப்பா செஞ்சு பாருங்கப்பா இந்த அடைக்கு தேங்காய் சட்னி செம மேட்ச்பா.

சாரிப்பா தாமதமான பதிலுக்கு:(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிப்பா:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நேரம் கிடைக்கும் போது செஞ்சு பாருங்க சுபா ரொம்ப நன்றிப்பா.

உங்க ஓஓஓஓ க்கு மீண்டும் ஒரு நன்றி:)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

வாழ்த்துக்கள் சுவர்ணா..
தாமதமாக பின்னூட்டம் தருவதர்க்கு வருந்துகிறேன்.வெளியூர் சென்றதால் பார்க்க முடியவில்லை..கார அடை செய்து சாப்டுகிட்டே குளிருக்கு டீயும் குடிச்சா அடடா சூப்பரா இருக்கும் போல . வாழ்த்துக்கள் சுவர்ணா...

வாழு, வாழவிடு..

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ருக்சானா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.