கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 4.

கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி மூன்று,200 கும் மேற்பட்ட பதிவுகள் வந்துவிட்ட படியால், கொஞ்சம் மூளையை கசக்குங்க பகுதி நாலுக்கு எல்லோரையும் அழைக்கின்றேன்.

இந்திய விமானப் படையில் உயர் அதிகாரிக்கான வேலை ஒன்று காலியாக இருந்தது. அதை நிரப்புவதற்காக நடந்த தேர்வில் பலர் கலந்துகொண்டார்கள். மிகச் சிறப்பாகத் தேர்வு எழுதியிருந்த 12 பேர்களை சிறப்பு நேர்கானல் பேட்டிக்காக அழைந்த்தார்கள்.
நேர்கானல் நடைபெற்ற அறையில் படைத் தளபதி,மற்றும் பல்துறை வல்லுனர்கள் அமர்ந்திருந்தார்கள்.
ஒவ்வொருவராக நேர்கானலுக்கு அழைக்கப்பட்டார்கள்.
முதலில் வந்தவரைப் பார்த்த தளபதி, " நான் சிக்கலான சூழ்நிலை ஒன்றைக் கூறுகிறேன்.அந்த சூழ்நிலையில் நீங்கள் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று கூறுங்கள். சரியாகச் சொன்னால் இந்த வேலை உங்களுக்குத்தான்." என்றார்.
"என்ன சூழல் கூறுங்கள்" என்றார் வந்தவர்.
"குளிர்ந்த காற்று வேகமாக வீசிக்கொண்டிருக்கும் முன்னிரவு நேரம்..இரண்டே இரண்டு பேர் மட்டும் அமரக்கூடிய சிறிய கார் ஒன்றை
நீங்கள் ஓட்டிச் செல்கிறீர்கள்...வழியில் பேருந்து நிற்குமிடம் ஒன்று உள்ளது. அங்கே உமக்குத் நன்கு தெரிந்த மூன்று பேர்கள் பேருந்திற்காகக் காத்திருக்கிறார்கள்.
ஒருவர், உங்களுக்கு அடுத்த வீட்டில் குடியிருக்கும் பெண்மணி. அவருக்கு ஆஸ்த்துமா வியாதி உண்டு.அந்தக் கடுமையான குளிர் காற்றில் மேலும் நின்றால், வியாதி மேலும் அதிகமாகிவிடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இன்னொருவர் மருத்துவர்.நீங்கள் ஒருமுறை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியபோது, அவர் தமது காரில் உங்களைத் தூக்கிக்கொண்டுபோய், மருத்துவ சிகிச்சை கொடுத்துக் காப்பாற்ரியவர்.
மூன்றாமவரோ உங்களது காதலி.
அந்த மூவருமே குளிரில் நடுங்கிக்கொண்டு நிற்கிறார்கள்.உங்களைக் கண்டதும், "பேருந்து இந்த வழியாக எப்போது வருமோ தெரியவில்லை.குளிர் அதிகமாக இருக்கிறது. என்னை உங்கள் காரில் அழைத்துச் செல்லுங்கள்" என்று கேட்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நீங்கள் யாரை காரில் ஏற்றிச் செல்வீர்கள்......??????...இதுதான் எங்கள் கேள்வி" என்றார் தளபதி.
தேர்வுக்கு வந்திருந்த 12 பேரில் ஒருவர் மட்டுமே சரியான பதிலைக் கூறி வேலையைத் தட்டிச் சென்றார்.

அவர் என்ன பதில் கூறியுருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்??????????.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

காரை அவர்களிடம் கொடுத்து, அவரை காப்பாற்றியவரையும் ஆஸ்துமா நோயில் கஷ்டபவரையும் போக சொல்லி விட்டு அவர் தன் காதலியுடன் பஸ் வந்ததும் ஏறி சென்றிருப்பார். பின்னர் போய் அவரது காரை வாங்கிப்பார்.

அவர் அந்த பெண்மணியை தான் காரில் ஏற்றி சென்றிருப்பார். ஏன் என்றால் அந்த மருத்துவரிடம் அந்த பெண்மணியை பற்றி பின்னர் தெரிவித்தால் ஒரு நோயாளியை பற்றி அவர் புரிந்து கொள்வார். பின் தன்னோட காதலியும் அவரை புரிந்து கொள்ளுவார்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

குறைந்த பட்சம் ஒரு காரில் நான்கு பேர் பயணம் செய்யலாம் ,எனவே முன்னாள் இருவர்,பின்னால் இருவர்,எல்லோரையும் ஏற்றி செல்லலாம் .உங்களுடைய கூற்றின் படி இருவர் மட்டும் அமரக்கூடிய மகிழுந்து(கார்) எனில் ,முதலில் ஆஸ்துமா உள்ள பெண்ணையும் ,பின் தன் காதலியையும் அழைத்து சென்று விட்டு வந்து ,மருத்துவரும் அவரும் இறுதியில் செல்வார்கள் ,என்று கூறி இருப்பார் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மூவரில் அந்த ஆஸ்மா உள்ள பெண்மணியே முதலில் காப்பாற்ற வேண்டும் .ஏனெனனில் மற்ற இருவரும் ஆரோக்கியமானவரே .ஆதலால் ஆஸ்மா உள்ள பெண்மணியையே கூடி செல்வேன்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

1. காரை டாக்டரை செலுத்த சொல்லி ஆஸ்துமா நோயாளியை உடன் அனுப்பி இருக்கலாம். காதலியோடு தான் காத்திருந்து இரண்டாவது முறை காதலியை அனுப்பி இருக்கலாம்.

2. டாக்டரிடம் சொல்லி ஆஸ்துமா நோயாளிக்கு முதலுதவி செய்ய சொல்லி விட்டு காதலியையும் ஆஸ்துமா நோயாளியையும் காரில் அனுப்பி இருக்கலாம்.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

asthuma noyaliyai docter car la poi erupanga

LIFE IS LONG LIVE IT UP

யாழினி, அனிதா சொன்ன பதில் சரியானது.

அதாவது கார் ஓட்டத் தெரிந்த மருத்துவரிடம் என் காரை கொடுத்து, அந்த வயதான பெண்மணியை அவரது வீட்டில் விட்டு விட சொல்வேன்.

நானும், என் காதலியும், அந்த குளிர் இரவில் டூயட் பாடிக் கொண்டே, நடந்தே வீடு வந்து சேர்வோம்.என்றும் சொல்லியிருப்பான்.

சரி அடுத்த புதிருக்குப் போவோம்..............

தமிழ்நாட்டின் சட்டசபைக்கு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
ஒரு தொகுதியில், அரசியலுக்கே புதுமுகமான ஒரு இளைஞன் போட்டியிட்டான்.
அங்கே அவனுடன் போட்டியிட்ட பழம்பெருச்சாளியான ஒரு அரசியல்வாதியை சுலபமாக வென்று சட்டசபை அங்கத்தினர் ஆனான்.
தேர்தலில் வெற்றி அடைந்ததற்காக அவனது ஆட்கள் சார்பில் நடைபெற்ற வெற்றிவிழாக் கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு தனது வீடு திரும்பியவன் அதிர்ச்சியடைந்தான்....ஏனென்றால் அவனது வீட்டில் அவனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அரசியல்வாதி அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்.

அவனைக் கண்டதும் எழுந்து " இளைஞனே தேர்தலில் வெற்றியடைந்த உனக்கு எனது வாழ்த்துக்கள்..நீ அரசியலுக்குப் புதியவன்...இங்கு உனக்குப் பல சோதனைகள் உண்டாகும். எதிர்ப்புகள் உருவாகும். இப்படிப் பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட எனக்கு முன்னே இருந்த அரசியல்வாதிகள், தங்களது அறிவுரைகள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டியை எனக்குக் கொடுத்தார்கள். இப்போது அதே பெட்டியை நான் உனக்குத் தருகிறேன். இந்தப் பெட்டிக்குள் மூன்று சிறிய பெட்டிகள் உள்ளன.. உனக்கு ஏதேனும் அரசியல் சிக்கல் ஏற்படுமானால் முதல் பெட்டியைத் திற. நீ எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி நடந்துகொள்.
அதன்பிறகும் சிக்கல் தொடர்ந்தால், இரண்டாவது பெட்டியைத் திற..அதில் மேலும் நல்ல வழிமுறை கூறப்பட்டிருக்கும்.. அதை கருத்தில் கொண்டு நட." என்று கூறிவிட்டு அவனிடம் பெட்டியைக் கொடுத்துவிட்டுப் போனார்.

இளைஞன் பதவி ஏற்றுச் சில மாதங்கள் கழித்து, அவனுக்கு பிரச்சினைகளும் அதனால் எதிர்ப்புகளும் அதிகரித்தன.அதை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தினறினான். அப்போது தன்னிடம் இருக்கும் பெட்டியின் நினைவு வந்து, அதில் இருந்த முதல் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதில் ஒரு தாளில், 'எல்லாப் பிரசினைக்கும் காரனம் இந்தத் தொகுதியில் இருந்த முன்னாள் அங்கத்தினர்தான் என்று குற்றம் சுமத்து' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இளைஞனும் அதன்படியே நடந்துகொண்டான்.தொகுதியை முன்னாள் அங்கத்தினர் மிகவும் கெடுத்து வைத்துள்ளார். அதைச் சீர்திருத்த தனக்கு கால அவகாசம் தேவை என்று பேசிச் சமாளித்தான். அதனால் எதிர்ப்புகள் கொஞ்சம் குறைந்தன.
நாட்கள் வெகு விரைவில் ஓடியது.....பதவியைப் பயன்படுத்தி பணம் சேர்ப்பதில் மும்முரமாக இருந்ததினால், மீண்டும் புதுப் புதுப் பிரச்சினைகள் தோன்றியது.அவனால் சமாளிக்க முடியாமல் போனதால், இரண்டாவது பெட்டியைத் திறந்தான்.

அதில் எதிர்க் கட்சியினர்தான் தொகுதிக்கு நன்மை செய்யவிடாமல் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சியைத் தாக்கிப் பிரசாரம் செய்யும்படி குறிப்பிட்டிருந்தது. அவனும் அதன்படி பிரசாரம் செய்தான் பலனில்லை எதிர்ப்புகள் வலுத்து வந்தன.
இந்த நிலையில் அடுத்த தேர்தல் வர இருப்பதை உணர்ந்த இளைஞன், தொகுதியில் தனக்கு இருக்கும் பலத்த எதிர்ப்பைச் சமாளித்து தன்னால் வெற்றிபெற இயலாது என்பதை உணர்ந்தான்.

அப்போதுதான் மூன்றாவதாக ஒரு பெட்டி இருப்பது நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி, பெட்டியைக் கொடுத்தவர் ஏதும் கூறாமல் சென்றுவிட்டாரே!!!! அதைத் திறந்து பார்ப்போம். அதில் நிச்சயமாக ஒரு நல்ல வழி கிடைக்கும் என்று நினைத்து மூன்றாவது பெட்டியை ஆவலுடன் திறந்தான்.

அதில் எழுதியிருந்ததைப் படித்த இளைஞன் அதிர்ச்சி அடைந்தான்.!!!!!

தோழிகளே.................அந்த மூன்றாவது பெட்டியில் என்னதான் எழுதப்பட்டிருந்தது????????கூறுங்களேன்!!!!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மூன்றாவது பெட்டியில் இனி ,நீ அந்த பதவிக்கு எந்த காலத்திலும் போட்டி போடாமல் இருந்தால் நல்ல வழி கிடைக்கும் என்று எழுதி இருந்து இருக்கும்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மூன்றாவது பெட்டியில் “முதல் இரண்டு பெட்டியில் இருப்பது போல் நடக்காதே,, அப்படி நடந்தால், மக்களுக்கு உன் மீது நல்ல அபிப்பிராயம் போஇ விடும். எனவே உன் சுய புத்தியை வைத்து பிழைத்துக்கொள் ” என்று இருந்ததா.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்