கர்ப்ப கால வாந்தியினால் 6.5 கிலோ எடை குறைந்து விட்டது.

அன்பு தோழிகளே நான் அறுசுவைக்கு புதிது. என் பெயர் கலைவாணி. சென்னையில் வசிக்கிறேன்.

நான் இப்பொழுது 16 வாரம்(4மாசம்) கர்ப்பமாக உள்ளேன். 3 மாதமாக அதிக வாந்தி மயக்கம். சாப்பிட முடியாமல் தண்ணீர் குடிக்கமுடியாமல் வைட்டமின் மாத்திரைகளையும் சாப்பிட முடியாமல் அவஸ்தை பட்டேன். டாக்டர் வாந்தி வராமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இருந்தும் பலனில்லை. 53கிலோ எடை 46.5 ஆக குறைந்துவிட்டது. இப்பொழுது 2 வாரமாக மாத்திரை சாப்பிட்டால் வாந்தி வருவதில்லை. ஓரளவிற்கு சாப்பிட முடிகிறது. ஆனால் தண்ணீர் நிறைய குடிக்க முடியவில்லை. அரை லிட் மட்டுமே குடிக்கிறேன். வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட முடியவில்லை. உடனே வாமிட்.

கான்ஸ்டிப்பேஷன், காஸ், ஒய்ட் டிஷ்சார்ஜ், ஸினஸ், தொடை வலி அத்தனை கொடுமைகளையும் அனுபவிக்கிறேன். எனக்கு நல்லது கெட்டது கூற பெரியவர்கள் உடன் இல்லை. கணவர் மட்டுமே அருகில் உள்ளார். சிறிது நடந்தாலும் நின்று கொண்டு சமையல் செய்தாலும் கால் வலிக்கிறது. டாக்டரிடம் என் ப்ராப்லம் எதை சொன்னாலும் பலனில்லை. மிகவும் பிரபலமான ஹாஸ்பிட்டல்தான். எனக்கு பயமாக உள்ளது. நான் ஆரோக்கியாமான எதையுமே சாப்பிடாமல் என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு என்ன சத்து கிடைக்கும். நான் ஆரோக்கியாமான குழந்தையை எப்படி பெற்றெடுப்பேன்? 2 மாத லீவுக்கு பின் 1 வாரமாக ஆபீஸ் செல்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும் என்று எனக்கு வழி காட்டுங்கள். ப்ளீஸ்...

உங்களுக்கு உதவ நிறையா உறவுகள் இந்த தளத்தில் உள்ளன. நீங்க உங்க தலைப்ப எல்லாருக்கும் புரியற மாதிரி போட்டா, மேலும் பலர் உங்களுக்கு உதவி பண்ண ஈஸி ஹ இருக்கும் இல்லையா?

உங்க தலைப்ப பாத்து, நான் கூட diet இருந்து ஒடம்பு குறைஞ்சு இருக்கு போல, அப்படின்னு நினைச்சுட்டு வந்தேன். இங்க வந்து பாத்தா நீங்க இவளோ பெரிய விஷியம் சொல்லி இருக்கீங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நன்றி சுகந்தி. நான் தலைப்பை மாற்றிவிட்டேன்.

தலைப்பை மாத்துனதுக்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். கண்டிப்பா நம்ம தோழிகள் உதவி செய்வாங்க. எனக்கு இத பத்தி எதுஉம் தெரியாது, அதான் என்னால பதில் போடா முடியல.மன்னிக்கவும்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வாழ்த்துக்கள். முதலில் மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.வாழைப்பழம், ஆப்பிள், மாதுளம் பழம் சாப்பிடுங்கள். ஆப்பிஸில் வேலையின் போது கொஞ்சம் கொஞ்சமாக் தண்ணீர் குடியுங்கள். இந்த நேரத்தில் கால் வலி இருக்கும். அதற்கு, இரவு படுக்கும் போது காலுக்கு அடியில் தலையணை வைத்து கொள்ளுங்கள்.

மனதை அமைதியாக வைத்து கொள்ள உங்களுக்கு பிடித்த பாட்டு கேளுங்கள்.
மேலும், இங்குள்ள கர்ப்பிணி பெண்கள் பகுதியை நேரம் இருக்கும்போது பாருங்கள். நிறைய தோழிகளின் பதில்கள் உள்ளது.

இந்த லின்க் பாருங்கள்,
http://www.arusuvai.com/tamil/node/9520
http://www.arusuvai.com/tamil/node/16120

அன்புடன்
மகேஸ்வரி

நன்றி மகேஸ்வரி. எனக்கு இந்த லிங்கில் உள்ள குறிப்புகள் உபயோகமாக இருந்தது.

நன்றி எல்லாம் வேண்டாம். நானும் உங்களைப்போல் தான் உதவிக்கு யாரும் இல்லாமல் இருந்தேன். கர்ப்பிணிப்பெண்கள் பகுதியில் படித்து தெரிந்து கொண்டேன்.

அன்புடன்
மகேஸ்வரி

நான் அறுசுவை.காம் பார்த்துதான் சமைக்கவும் கற்றுக்கொண்டேன். இப்பொழுது எல்லாவற்றிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கான குறிப்புகள் எல்லாமே பயனுள்ளதாக இறுக்கிறது. ஆனால் என்னால் அவற்றில் பல உணவுகளை சாப்பிட முடிவதில்லை.தினமும் என்ன சமைத்து சாப்பிடுவது என்று தெரியவில்லை. ஆப்பிள் என்றாலே பிடிக்கவில்லை. தோல் இல்லாமல் கூட பாதி சாப்பிட்டு விடுவேன். அப்படியே என்றால் முடியவில்லை.

இந்த பகுதியில் இப்பொழுதெல்லாம் யாரும் அதிகமாக பதிவுகள் போடுவதே இல்லையே...

நீங்கள் சென்னையில் தான இருக்கீகளா ?நானும் சென்னை தான்...அழகான குழந்தையைப் பெற முதல்ல எனோட வாழ்த்துக்கள் ...எனக்கு இப்போ 7 வது மாசம் ..எனக்கும் 5 மாசம் வரை ஏதும் சாப்ட முடில ...இப்போ வரை எனக்கு வாந்தி இருக்கு..5 மாசம் அப்புறம் வாந்தி ரொம்ப இருக்காது..நல்லா சாப்டலாம் ...தினமும் சாத்துக்குடி ஜூஸ்,காரட் ஜூஸ் ,மாதுளை ஜூஸ் நல்லா குடிங்க ...வாந்தி வந்தாலும் சாப்டுங்க ...சுடு தண்ணீர் குடிங்க...5 மாசம் அப்பரம் நல்லா எடை கூடும் ...கவலை வேண்டாம் ....மனசை ரிலாக்ஸ் ஆக வைத்து கொள்ளுங்கள் ...உங்களுக்கு என்ன என்ன பிடிக்குமோ சாப்டுங்க ....தினமும் இளநீர் குடிங்க..எதாவது கேள்வி இருந்தா கேளுங்க.. பல சகோதரிகள் இங்க உதவுவாங்க

Hope is necessary in every condition:)

நண்பி கவலை வேண்டாம் .எனக்கும் இப்படிதான் இருந்தது ஆனால் எனக்கு பிடித்தமானவற்றை சாப்பிட ஆரபித்த போதுதான் இந்த வாந்தி கட்டுக்குள் வந்தது .வாந்தி வருகிறது என்பதற்காக நான் சாபிடாமலோ தண்ணீர் குடிகாமலோ இருக்க மாட்டேன்.நான் செய்வதை செய்வேன் ,வாந்தி வந்தால் வரட்டுமே .பாதியாவது வயிற்றில் இருக்குமே .ஆதலால் தோழி நீங்கள் உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள்.வாந்தி வந்தாலும் கவலை வேண்டாம் .கவனிக்கவும் தோழி உங்களுக்கு பிடித்ததை மட்டும் தான் சாப்பிடவேண்டும் அபோளுதுதான் வாந்தி குறையும்.பிடிக்காததை சாபிட்டால் வாந்தி கூடத்தான் செய்யும் குறையாது.நீங்கள் சாகலேட் சாபிடலாம் .ஒரு சாகலேட் ரெண்டு இட்லி கலோரிக்கு சமம்மாம் இன்று sunnews ladydoctor சொன்னார்கள் .மகிழ்ச்சியாய் இருங்கள்.அது உங்களை வழிநடத்தும் .!!!!!!

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ரேகா... நீங்களும் சென்னையா? எந்த ஏரியா? எனக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது. இரவெல்லாம் தும்மல், மூக்கடைப்பால் அவஸ்தை படுகிறேன். அதனால் இளநீர், ஜூஸ் குடிக்க பயம்.(இளநீர் சளி பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியவும் இல்லை). இளநீர் எனக்கு ரொம்ப பிடிக்கும். கிளைமேட் வேறு சரி இல்லை. குடிக்கலாமா என்று சொல்லுங்கள்.

அஸ்வதா, நீங்கள் சொல்வது போல் எனக்கு இல்லை. வாந்தி வந்தால் ஒரே அடியாக அடி வயிறு வரை இருப்பது எல்லாம் வந்து விடுகிறது. தொடர்ந்து 10 நிமிடம் புரட்டி புரட்டி எல்லாமே வந்துவிடும். எனக்கு அதை பார்த்து மனசே வெறுத்து விடும். வாந்தி நிற்க மாத்திரை சாப்பிட கூடாது என்று சொல்கிறார்களே. இது எந்த அளவிற்கு உண்மை.

யாருமே பதில் போடவில்லையே என்று வருத்தப்பட்டேன்.யாராவது இப்படி அக்கறையாக சொல்லும்போது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது.

மேலும் சில பதிவுகள்