சளி பிடித்திருந்தால்...

சளி பிடித்திருந்தால்...

குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது பெற்றவர்களுக்கு சவாலான விஷயம். ஏன், எப்படி சளி பிடிக்கும் என்றேக் கூற முடியாது.

சில குழந்தைகளுக்கு சளி பிடித்ததும் உடனடியாக காய்ச்சலும் வந்து விடுகிறது.

உடனடியாக மருத்துவரிடம் போய் அவர் கொடுக்கும் அனைத்து மருந்துகளையும் குழந்தையின் வாயில் ஊற்றினாலும், மருந்துதான் காலியாகுமேத் தவிர... குழந்தையின் சளி அப்படியேத்தான் இருக்கும்.

சளியைக் கட்டுப்படுத்த சிறந்த கை வைத்தியம் உள்ளது-

அதாவது சளி பிடித்ததும் அல்லது சளி பிடிக்கும் என்று தெரிந்ததும் உடனடியாக அதற்கு ஏற்ற மருந்தினை அளித்திட வேண்டும்.

மருந்து என்றதும் மருத்துவர் அளிக்கும் மருந்து அல்ல, வீட்டிலேயே இருக்கிறது அதற்கான சிறந்த மருந்து.

பல வீடுகளில் தொட்டிகளில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் கற்பூரவல்லிச் செடி தான் அந்த மாமருந்து.

கற்பூரவல்லி இலைகள் பார்ப்பதற்கு தடிமனாகவும், மிகவும் மிருதுவாகவும் இருக்கும்.

உங்கள் குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.

இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.

அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள்.

குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.

கற்பூரவல்லிச் செடி இல்லாதவர்கள் செடிகள் விற்பனை மையத்தில் இருந்தோ அல்லது தெரிந்தவர்களின் வீடுகளில் இருந்தோ வாங்கி வந்து வளர்ப்பது சிறந்தது.

உங்களுடைய பயனுள்ள பதிவுக்கு மிகவும் நன்றி, என் மகளுக்கு இப்பொழுது 11 மாதம் ... பிறந்து 3 மாதத்தில் அவளுக்கு நெஞ்சு சளி ஆரம்பிச்சுது...அத்தோடு இருமலும்.... ரொம்ப கஸ்டப்பட்டேன். நெஞ்சு சளி கிட்டத்த 2 மாசத்து மேல இருந்துச்சு... அப்புறம் இங்க சமர் வர சரியாயிடுச்சு.இப்ப திரும்பி குளிர் ஆரம்பிச்சிடுச்சு... பயமாயிருக்கு.... நெஞ்சு சளி லைற்றா ஆரம்ம்பிச்சிடுச்சு...இங்கெல்லாம் கற்பூரவள்ளி இலை கிடைப்பது சரியான கஸ்டம்... நெஞ்சு சளிக்கு வேற ஏதும் டிப்ஸ் கிடைக்குமா ...?

மேலும் சில பதிவுகள்