சோன்பப்டி செய்வது எப்படி?

எங்களிடம் மின்னஞ்சல் மூலம் வாசகர்கள் கேட்ட கேள்வி இது. இந்த மன்றத்தினைப் பயன்படுத்துவதை அவர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வரை அவர்களின் சார்பாக நாங்கள் இந்த கேள்விகளை வெளியிடுகின்றோம். உங்களுக்கு பதில் தெரிந்திருந்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

தள்ளுவண்டியில் விற்றுக் கொண்டு செல்லப்படும் பஞ்சுப் போன்ற சோன்பப்டி செய்வது எப்படி?

Ingredients
1 1/4 cup gramflour
1 1/4 cup plain flour (maida)
250 gms. ghee
2 1/2 cups sugar
1 1/2 cup water
2 tbsp. milk
1/2 tsp. cardamom seeds crushed coarsely
2 tsp. charmagaz (combination of 4 types of seeds)
4" squares cut from a thin polythene sheet

Method

Sift both flours together.
Heat ghee in a heavy saucepan.
Add flour mixture and roast on low till light golden.
Keep aside to cool a little, stirring occasionally.
Prepare syrup simultaneously.
Make syrup out of sugar, water and milk as shown in introduction.
Bring syrup to 2 1/2 thread consistency.
Pour at once into the flour mixture.
Beat well with a large fork till the mixture forms threadlike flakes.
Pour onto a greased surface or thali and roll to 1" thickness lightly.
Sprinkle the charmagaz seeds and elaichi and gently press down with palm.
Cool, cut into 1" squares, wrap individually into square pieces of thin plastic sheet.
Store in airtight container.

Making time: 45 minutes
Makes: 20 pieces (approx.)
Shelflife: 2 weeks

I have done tried this but got the recipe from another site. You can try this and see how it works. I am defenitely going to try this.

சோன்பப்டி எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பண்டம் என்பதால் உங்களின் குறிப்பை ஆவலுடன் பார்த்தேன். ஆனால், ஏமாற்றம்! ஒரு தமிழ் இணைய தளத்தில் ஆங்கிலத்தில் குறிப்பு கொடுத்தால், என்னைப் போன்றவர்கள் எப்படி புரிந்துக் கொள்வார்கள்?
தயவு செய்து இனிய தமிழில் மீண்டும் தரவும்!

உங்களுக்கு தமிழில் வராது என்றால், இதற்கு இணைய தள நிர்வாகி உதவி செய்வாரா? (இதை அவரிடம்தான் கேட்கவேண்டும் என்கிறீர்களா?).எப்படியோ தமிழ் குறிப்பு கொடுத்தால் போதும்!

பங்களிப்பவர்கள் தமிழிலேயே எல்லாவற்றையும் அளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். இதனை முதல் பக்கத்திலேயே வலியுறுத்தியுள்ளோம். இதற்காகவே <a href="http://www.arusuvai.com/tamil_help.html">தமிழ் உதவிப் பக்கம் </a> ஒன்றையும் கொடுத்துள்ளோம். இருப்பினும் பலரால் அதனைப் பயன்படுத்த இயலவில்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

மேலே உள்ளக் குறிப்பை தமிழாக்கம் செய்வது எளிது. அப்படிச் செய்தால் மேலும் பலரை அது ஆங்கிலத்திலேயே குறிப்புகளைக் கொடுக்கச் செய்யும். அதனை ஊக்குவிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் ஆங்கிலத்தில் கொடுக்கப்படும் பதிவுகளை அப்படியே விட்டுவிடுகின்றோம்.

மேலும் இந்தக் குறிப்பு கடைகளில் கிடைக்கும் "சோன்பப்டி" க்கான செய்முறை என்று தெரிகின்றது. தள்ளுவண்டி சோன்பப்டி செய்முறை சற்று வித்தியாசமானது. அந்தக் குறிப்பை கூடிய விரைவில் படங்களுடன் வெளியிடுகின்றோம்.

திருமதி. சித்ரா ரகுநாதன் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். மற்றத் தளங்களில் உள்ள குறிப்புகளை அவர்களின் அனுமதி இல்லாமல் வெளியிடுவது தவறு. Content ஐ copy செய்து போடுவதற்கு பதிலாக அந்தப் பக்கத்திற்கான link ஐ மட்டும் கொடுங்கள். அதில் பிரச்சனை கிடையாது.

தள்ளு வண்டி சோன்பப்டி பற்றி கூடிய விரைவில், அதுவும் படங்களுடன் வெளிடப்போவதாக நீங்கள் கூறியிருப்பது மிக்க சந்தோஷம்! ஆவலுடன் எதிர்ப்பார்த்திருக்கிறேன்.Lot of thanks!

அதை மன்றத்தில் வெளியிடுவீர்களா? அல்லது பொது குறிப்பான " புதுசு கலா புதுசு " - ல் பார்க்க வேண்டுமா? அறிவிக்கவும், Please!

படங்களுடன் கூடிய குறிப்புகளுக்கென ஒரு புதியப் பகுதி விரைவில் (இன்றோ, நாளையோ) தொடங்கப்பட உள்ளது. அதில் தினமும் ஒரு குறிப்பினை கொடுக்க இருக்கின்றோம். அதில் இடம் பெறும். இன்னும் அந்த சோன்பப்டி தயாரிப்பினை படம் எடுக்கவில்லை. அதை தயாரிக்கக் கூடிய ஆட்களுடன் பேசி இருக்கின்றோம். விரைவில் அறுசுவை நேயர்களுக்காக அவர்கள் சிறிய அளவில் தயாரிப்பது எப்படி என்பதை செய்து காண்பிப்பார்கள். சிறிது நாட்களில் அதனை வெளியிடுகின்றோம்.

மீண்டும் நன்றிகள் & வாழ்த்துக்கள்!

கீழ்க்கண்ட இணையத்தள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.bawarchi.com/cookbook/sweet20.html

சோன் பப்டி செய்முறை:

கடலை மாவு 1 1/4 கப்
மைதா மாவு 1 1/4 கப்
250 கிராம் நெய்
2 1/2 கப் சீனி
1 1/2 கப் தண்ணீர்
பால் 2 மேஜைக்கரண்டி
1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
2 தேக்கரண்டி சாரைப்பருப்பு

செய்முறை

இரு மாவுகளையும் சேர்த்து சலித்துக்கொள்ளவும்.
நெய்யை சூடு செய்யவும்.
மாவுக்கலவைகளை பொன்னிறமாக வறுக்கவும். கிளறியபடி இறக்கி ஆற வைக்கவும்.
சர்க்கரை, தண்ணீர் பால் சேர்த்து இரண்டரை கம்பி பதம் வரும் வரை பாகு வைக்கவும். மாவுக்கலவையில் விடவும். பெரிய முள்கரண்டியால் நீள வாட்டில் கிளறி விடவும்.(கலவை திரித்திரியாக வரும்வரை). தட்டில் கொட்டி சமமாகப்பரப்பவும். சாரைப்பருப்பு, ஏலக்காய் தூவி லேசாக அழுத்தவும். சதுரமாக வெட்டவும்.

நான் செய்து பார்த்த பின் எழுதிய செய்முறை இது. வண்டியில் கொண்டு வரும் சோன் பப்டி சற்றே வித்தியாசப்படும்.

பிழை பொறுத்தருள இணையத்தாரையும் வேண்டுகிறேன். ஆர்வக்கோளாறினால் வந்த வினை இது.

Sellamma தாங்களும் பிழை பொறுத்தருள வேண்டுகிறேன்.

உங்களது ஆர்வம் பாராட்டுதலுக்குரியது. ஆங்கிலத்தில் குறிப்பினை கொடுப்பது பெரியப் பிழை அல்ல. தங்களால் தமிழில் டைப் செய்ய இயலவில்லை எனில் ஆங்கிலத்தில் கொடுக்கலாம். ஆனால், நீங்கள் தூயத்தமிழில் மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். இதனையேத் தொடரவும்.

மற்றபடி பிறத் தளங்களில் இருந்து அவர்களின் அனுமதி இல்லாமல் படைப்புகளை எடுத்து வெளியிடுதல் சட்டரீதியாக தவறு என்பதால் அதனைத் தவிர்க்குமாறு குறிப்பிட்டோம். தவறுணர்ந்து பொறுத்தருள வேண்டுகின்ற தங்களின் மனப்பாங்கு மிகவும் போற்றுதலுக்குரியது. 20 வருடம் சமையலில் அனுபவம் உள்ளத் தாங்கள், தங்களின் திறனை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

என்னுடைய அரைகுஅறை ஆங்கிலத்தினால் உங்களின் ஆங்கில ரெசிப்பியை என்னால் சரியாக புரியமுடியாத ஆதங்கத்தை உங்களிடம் சொன்னேன், இதற்கு பிழை பொறுப்பு கேட்கவேண்டியதில்லை!Take it easy policy! சாதாரண விஷயம்!
உங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு thank u very much!

தள்ளுவண்டி சோன்பப்படியை விளக்கபடங்களுடன் நீங்கள் தரப்போவதாக சொல்லி முழுமையாக 6 மாதங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் சோன்பப்படியின் மீதுள்ள ஆர்வம் இன்னும் சோந்துபோகவில்லை. எப்போது படத்துடன் தருவீர்களோ தெரியலபோங்க :(

மேலும் சில பதிவுகள்