கடலை மாவு லட்டு

தேதி: April 20, 2006

பரிமாறும் அளவு: 8

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதிய கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப் ( அளந்த பின் பொடிக்கவும்)
நெய் - 1/2 கப் அளந்து விட்டு 2 தேக்கரண்டி எடுத்து விடவும்.


 

உருக்கின நெய்யைக் கடலைமாவுடன் கட்டியில்லாமல் கலக்கவும்.
வாணலியில் வைத்து, சிறிய அடுப்பில் கைவிடாமல் கிளறவும்.
விரைவில் பொரபொரவென்று ஆகும்.
உடனே கீழே இறக்கி பொடிசெய்த சர்க்கரையைக்கொட்டிக் கிளறவும்.
இறுக ஆரம்பித்ததும், சூடு தணியு முன்னரே உருண்டைகள் பிடிக்கவும்.
தேவையானால், பொடியாக நறுக்கின முந்திரிப் பருப்புகள் கலந்து கொள்ளலாம்.


இது ஒரு குஜராத்தி இனிப்பு வகை. கடலை மாவு புதிதாகத் திரித்ததாக இருக்க வேண்டும். வாசனைப் பொருட்கள் சேர்க்காமல் செய்தால், மைசூர் பாகு மணத்துடன் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்