உதவி தேவை.pls சொல்லுங்க

என் மகனுக்கு 16 மாதங்கள் ஆகிரது. நான் போன வாரம் தான் singapore லிருந்து india வந்தேன். அவன் சாப்பிடுகிறான். ஆனால் சாப்பிட்ட உடனே or சாப்பிடும் போது motion போயிடுகிறான். ஒரு நாளைக்கு 4 to 5 times கொஞ்சம் கொஞ்சமா போகிறான். gravy மாதிரி நுரைச்சு போறான். wateryஆ loose motion இல்ல. சளி வேற இருக்கு.இது நார்மலா. சொல்லுங்க தோழிகளே. கொஞ்சம் whiteஆ அங்க அங்க இருக்கு motionல.என்ன செய்வது. pls help

ஹாய் தோழி ஜெயா...,குழந்தை பிறந்து இப்பதான் இந்தியா தூக்கி கொண்டு வருகின்றீர்களா...?அப்படி இருந்தால் கிளைமேட் மாற்றத்தினால் குழந்தைக்கு இந்த மாதிரி உடம்பு ஏதும் படுத்தும்.குழந்தைக்கு சளி ஏதும் இருக்கின்றதா...?
அப்படி இருந்தாலும் மெடிசன் எடுத்து இருந்தீர்களேயானால் அந்த சளி மோஷன் மூலம் வெளியாகும்.
இன்னொன்று குழந்தை கீழே கிடப்பதை பொறுக்கி சாப்பிட்டால் அது வெளியாகும் வரை இது போல் படுத்தவும் வாய்ப்புகள் உண்டு.குழந்தையை கவனமாக கவனிக்க வேண்டும் இல்லையேல் அவர்கள் இருக்கும் இடத்தில் ஏதும் தூசு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.ஒரு துளியளவுதான் எதையும் விழுங்கியிருப்பார்கள்.ஆனால் அது அப்படி படுத்தி எடுக்கும்.
நுரைத்தாற்போல் போகிறான் என்கிறீர்கள்.உடம்பு சூடாக கூட இருக்கலாம்.இடம் சூழ்நிலை எல்லாம் குழந்தைக்கு மாறுபடுவதால் ஏற்படுவதுதான்.டாக்டரிடம் கொண்டு போய் காட்டுங்கள்.இது போன்ற மோஷன் போனால் பொட்டுக்கடலை மாவை செரலாக் போல் கலக்கி ஊட்டுவார்கள் .அதை வேண்டுமானால் கொடுத்து பாருங்கள்.உடனடியாக நிற்கவில்லையென்றால் டாக்டரிடமே காட்டுங்கள்.பாவம் குழந்தைக்கு இப்படி போய் கொண்டே இருந்தால் அந்த இடமே வெந்து விடும்.
நிறைய தண்ணீர் கொடுங்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்