தூங்கியது போதும் எழுந்திருங்க!!!

ஹாய் ஹாய் ஹாய்... அறுசுவை முழுசா கொரட்டை விட்டு தூங்கும்போது வனி முழிச்சிருக்கான்னு சொல்றதுல ஒரு சின்ன சந்தோஷம்... ;) ஹிஹிஹீ. யாரப்பா அங்க?? அரட்டை, சமையல், கைவினை'னு எந்த பக்கமும் யாரையும் காணோம்??? எல்லாரும் புது வருஷத்துல கேக் சாப்பிட்டு தூங்கிட்டீங்களா ;) வாங்க வாங்க வாங்க வாங்க....

இந்த புது வருஷத்துல என்ன செய்ய போறீங்கன்னு முடிவு பண்ணிருக்கீங்க??? என்ன செய்ய கூடாது இனின்னு முடிவு பண்ணிருக்கீங்க? எதை மாத்திக்க போறீங்க?- வழக்கமான கேள்வி தான்... சொல்லி சொல்லி போர் அடிச்சிருக்கும் உங்களுக்கு. அதனால் புதுசா கேட்போம். இது வரைக்கும் இது மாதிரி எத்தனை முறை ரெசலுஷன் எடுத்திருக்கீங்க? அதுல எத்தனைய சரியா கடைபிடிச்சீங்க? எத்தனை ஊத்திகிச்சு? ஏன் ஊத்திகிச்சு?? - இதுக்கு பதில் சொல்லுங்க. :)

புது வருஷம் பிறந்ததும் தூங்கினா வருஷம் முழுக்க தூங்குவீங்களாமே!!! அச்சச்சோ... வாங்கப்பா, தூங்கினது போதும். ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் சொல்லட்டா??? நமக்கு இந்த வருஷ பிறக்கும் போது தான் முடிவுகள் எடுக்கனும்'னுலாம் கிடையது.... தப்புன்னு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே மாத்திக்கலாமே... வருஷ பிறப்பு வரை காத்திருக்கனுமா??? ;) அதனால் எப்பலாம் கோவ வருதோ அப்பலாம் கோவத்தை விடனும்'னு முடிவு பன்னிடுவேன். அடுத்த முறை கோவம் வரும் வரை அதை சரியா ஃபாலோ பண்ணுவேன். மீண்டும் கோவம் வந்தா மீண்டும் கோவத்தை குறைக்கனும்'னு முடிவு எடுப்பேன். இப்படியே எனக்கும் வயசாயிடுச்சு. என் கோவத்துக்கும் வயசு ஆயிடுச்சு. கத்தும்போதெல்லாம் கத்தவே கூடாதுன்னு நினைப்பேன்... ஆனா அடுத்த முறை கத்தின பிறகு தான் நாம இப்படி கத்தகூடாதுன்னு முடிவு பண்ணிருந்தோமே'னு நினைவுக்கு வரும். ரொம்ப நியாபக மறதி. ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சில நாட்களாக எனக்கும் இது தோணிச்சு,அறுசுவை கொஞ்சம் டல்லடிக்குது,எனக்கு என்ன தோணுதுன்னா,தேவையில்லாத நிறைய இழைகள் ஒப்பன் பண்றதுனால சில நல்ல இழைகள்,எல்லாரும் பார்க்குறதுக்குள்ள உள்ள போயிடுது.தோழிகள் ஒரு இழையை ஆரம்பிக்கும் முன் கொஞ்சம் மன்றத்தில் போய் பாருங்க, அப்புறமா ஒபன் பண்ணுங்க,ப்ளீஸ்.
என்னோட புத்தாண்டு உறுதிமொழி,வீண்விரயம் செய்யக்கூடாது.[தண்ணீர்,உணவு,மின்சாரம்,பணம்,]

அன்பு வனிதா, அன்பு ரீம்

எனக்கும் சில நாளாகத் தோணிச்சு ஏன் இப்படி ஒரே டல்லாக இருக்குன்னு.

அறுசுவையை சுறுசுறுப்பாக்க ஏதாவது செய்யணும்னு நினைச்சேன், ஆனா என்ன செய்யறதுன்னுதான் தெரியலை!

இன்னொன்னு, இப்ப ஒரு வாரமாக, தேவையில்லாத சில விஷயங்களுக்கு புதுசாக சில இழைகள் ஓபன் ஆகியிருந்தது கண்ணில் பட்டது. ரீம் சொல்ற மாதிரி, நல்ல இழைகள் முகப்பில் இல்லாம காணாம போயிடுது. இப்ப முகப்பில் இருக்கற டிரஸ் டிப்ஸ் இழையை இன்னிக்குதான் பார்க்கிறேன். ரொம்ப நல்லா இருக்கு.

2 வாரமாக நானும் கொஞ்சம் பிஸி:) அதனால் அப்பப்ப வந்து பார்த்துட்டு, அவசரமாகப் பதிவுகள் கொடுத்துட்டுப் போயிட்டேன். ஒரு நாள் மட்டும், ஒரு பழைய இழையைத் தேடி, மேலே கொண்டு வந்தேன்.

தேவையில்லாத இழை முகப்பில் இருந்தால், தோழிகள் அவங்களால் முடிந்த உதவியாக, சில பழைய நல்ல இழைகளை முகப்புக்குக் கொண்டு வந்து, உதவி செய்யுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

ரீம், சீதாலஷ்மி... வாங்க வாங்க. நீங்க சொல்றதை பற்றி எனக்கு அவ்வளவா தெரியல. ஏன்னா நான் ஒரு வாரமா அதிகம் வரல. முகப்பில் இருந்த தலைப்பையும் சரியா பார்க்கல. இது நம்ம அறுசுவையில் அடிக்கடி நடப்பது தான்.. புது மக்கள் வரும்போது தெரியாம செய்வது தான். சரியாயிடும் இன்னும் சில நாட்கள் போனா.... பழக்கமான நீங்கலாம் சொல்றீங்க இல்லையா, இனி தெரிஞ்சுக்குவாங்க :)

ரீம்... புத்தாண்டு உறுதி மொழி எல்லாம் சரி, இதுவரை இது மாதிரி எத்தனை உறுதிமொழி எடுத்திருக்கீங்க? எல்லாம் சரியா செய்தீங்களா'னு சொல்லுங்க ;)

சீதாலஷ்மி... உங்க உறுதிமொழி கதையை சொல்லவே இல்லையே... ;) அறுசுவை தூங்கினா நம்ம என்ன செய்ய முடியும் ??? ஒன்னும் பண்ண முடியாது. ஆனா விடாம 4 இடத்துல பதிவு போட்டா பேச ஒருத்தறாவது வந்து மாட்டிக்குவாங்க... அப்படியே பிக்கப் பண்ணி போயிட்டே இருக்க வேண்டியது தான்... ஹிஹிஹீ ;) இப்போ நான் காலையில் இருந்து பதிவு போட்டேன், நீங்க 2, 3 பேர் வந்து மாட்டிக்கிட்டீங்களே... அப்படி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

*******ரீம், சீதாலஷ்மி... வாங்க வாங்க. நீங்க சொல்றதை பற்றி எனக்கு அவ்வளவா தெரியல. ஏன்னா நான் ஒரு வாரமா அதிகம் வரல. முகப்பில் இருந்த தலைப்பையும் சரியா பார்க்கல. இது நம்ம அறுசுவையில் அடிக்கடி நடப்பது தான்.. புது மக்கள் வரும்போது தெரியாம செய்வது தான். சரியாயிடும் இன்னும் சில நாட்கள் போனா.... பழக்கமான நீங்கலாம் சொல்றீங்க இல்லையா, இனி தெரிஞ்சுக்குவாங்*********

நீங்க சொல்லுவது சரிதான்,ஆனாலும் மக்கள் திரும்ப திரும்ப அதே கேள்விகளை கேட்கும் போது கடுப்பாகுது.ஒருவாரமா வந்த இழைகளை முடிஞ்சா பாருங்க. புத்தாண்டில் கோபபடக்கூடாது என்று வருஷா வருஷம் நினைப்பது,ஆனால் முடியாதது.அதே மாதிரி உடற்பயிற்சி ரெகுலரா செய்யணும்என்று நினைப்பது,அதுவும் ப்ளாப்.நிறைய நல்லதும் செஞ்சு இருக்கிறேன்{நம்புங்க ப்ளீஸ்}பெருமை அடிக்கிற மாதிரி ஆகிவிடும் ஸோ வேண்டாம்.

என்ன வனிதா...,மற்ரவர்களை விடுங்க.இத்தனை நாள் நீங்க எங்கப்பா காணும்.நானும் தினமும் தேடி பார்த்துட்டேன்.சமையல் குறிப்பு வருது ஆனால் அந்த பக்கம் கூட உங்களை காணும்.நீங்களும்,வீட்டில் அனைவரும் நலம்தானே?
சரி வனி விஷயத்திற்க்கு வரேன். நீங்க சொன்னது போல் தான் என் சுபாவமும்.வருஷ பிறப்பு அப்பதான் இந்த மாதிரி நல்ல விஷயங்களை செய்யணும்,தேவையில்லாததை தவிர்க்கணும்னு என்ற உறுதிமொழி எடுக்கிரது எல்லாம் கிடையாது.எப்ப தப்புன்னு தோணுதோ...அப்ப அதை மாத்திக்கணும்.
நான் அதிக நேரம் கடவுளை வேண்டுவதெல்லாம்...கோபத்தை குறைக்கணும்னு தான்.குறிப்பா குழந்தைகள்ட்ட கத்துறத நிப்பாட்டணும்னு.... கத்துணதுக்கு அப்புறம் தான் அவர்களை பார்த்தா பாவமா தெரியும்.என் மேலே எனக்கே எரிச்சலா வரும்.வயசு ஆக ஆக தானே வனி இந்த கோபமும் அதிகமாகுதோன்னு ஒரு நினைப்பு எனக்கு.
எனது அம்மா,அக்கா கூட சொல்வாங்க... முன்பெல்லாம் நீ பேசுறதே சில சமயங்களில் காதில் விழாது.இப்ப எங்கிருந்து டீ இவ்வளவு பெரிய குரல் வந்துடுச்சுன்னு.அப்பதான் எனக்கு கவலை அதிகமாகும்.
எனவே இவை தான் மாறணும்னு நினைக்கிறேன்.
இது புது வருட உறுதிமொழி அல்ல...நீண்ட நாள் வேண்டுதல்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரீம்... மிக்க நன்றி. சில விஷயங்களை செய்ய முடியலன்னாலும் சிலதை செய்யறீங்க பாருங்க... அதுவே பாராட்டுக்குறியது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

போன வருடம் ஒரு 3 விஷயம் நடக்கனும்னு ஆசைப் பட்டேன்! அது இன்னும் நடக்கல So.. இந்த வருடமும் அதேதான். நடத்திக் காட்டிடனும் அந்த மூன்று விஷயங்களையும்.. டைரில தான் இத எழுதனும்னு நினைத்துக் கொண்டு இருந்தேன்.. ஆனா இன்னும் டைரி என் கைக்கு வரலை. அதுனால உங்களோட இந்த இழைல தான் என்னுடைய இந்த வருட டைரியின் ரெசலூஷன் பேஜ்.. :)

அப்சரா... படிச்சதும் சிரிப்பு வந்துடுச்சு. நானும் அப்படி தான். அதுவும் பொண்ணாவது திட்டினதும் அழுவா பார்க்க பாவமா இருக்கும், பையன் செவத்துல போய் முகத்தை மூடிகிட்டு எட்டி எட்டி பார்ப்பான்... சிரிப்பு வந்துடும். முடிஞ்ச வரைக்கும் குழந்தைங்ககிட்ட கோவபடாதிங்க.... பாவம் நாம அடிச்சாலும் நம்மகிட்டயே வந்து அழும் அவங்க முகத்தை பார்த்தா கோவம் காணாம போதில்ல. நானும் மாத்திக்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்