உதவி: சிறிய தையல் மிஷின் (Portable Sewing Machine) பற்றி...

நான் அருசுவையின் புதிய மெம்பர். எனக்கு டிவியில் வரும் போர்ட்டபிள் தையல் மிஷின் (பேட்டரி & மின்சாரத்தில் இயங்குவது) வாங்க ஆசை. அதில் என்ன என்ன தைக்க முடியும்? தையலாலேயே பூ போடுவது அதில் முடியுமா? அதன் PROs, CONs பற்றி தயவுசெய்து சொல்லமுடியுமா? உழைக்குமா?

ப்ளீஸ், தெரிந்தவர்கள், பயன்படுத்தியவர்கள் தயவுசெய்து பதில் தரவும்.

நன்றி.

எனக்கும் இதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் .இதை யாரேனும் வாங்கி இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் .மற்றவர்களுக்கும் உதவியாய் இருக்கும்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

ஹாய் வாணி... நான் கடந்த வாரம் சென்னைல ஒரு exhibition போயிருந்தேன் அங்க இந்த உஷா தையல் மிஷின் பார்த்தேன் எனக்கு பாத்ததும் ரொம்ப ஆசையா இருந்துச்சு வாங்கனும்னு ஆனால் எனக்கு தையல் தெரியாது... :( அவுங்க சொல்லி குடுத்தாங்க... அதனால ஆசைக்கு கொஞ்சம் தச்சு பாத்துட்டு வந்துட்டேன்..
இந்த லிங்க் வேணும்னா பாருங்க எதாச்சும் ஐடியா கிடைக்குதாணு...
நான் பார்த்த தையல் மிஷின் Allure
http://www.ushainternational.com/usha-indian-automatic-zig-zag-sewing-machines-exporter.html

நான் உஷா தான் வாங்கி இருக்கேன்..எம்ப்ராய்ட் எல்லாமே போடலாம்...அட்டோமிட்டிகாகவும் சில எம்ப்ராய்ட் மாடல்ஸ் இருக்கும்...நூல் கூட பக்கத்துல வைத்தால் போதும் அதுவா உள்ளே இழுத்துக்கும்..விலைக்கு ஏற்றாற்போல வித்தியாசபடும் அவ்லோதான் மொத்ததுல உஷா ஸ்விம்க்கு நான் கேரண்டி பயப்படாமல் வாங்கலாம் :)))

அன்புடன்,
மர்ழியா நூஹு

Thank you friends.

So, no one buy or use that portable sewing machine (as on TV)??

ok.

வாணி, நீங்கள் சொல்லும் மெஷின் எந்த மாடல் என்று தெரியவில்லையே.

இப்போது வரும் அனேகமான தையல் மெஷின்கள், சாதாரண அளவானவை கூட, ஸ்டான்ட் இல்லாமல் தான் வருகின்றன. எங்கு வேண்டுமானாலும் எடுத்து வைத்துத் தைக்கலாம்.

என்ன வகைத் தையல்கள் தைக்கலாம் என்பது நீங்கள் தான் பார்த்து வாங்க வேண்டும். நிறைய செலெக்க்ஷன்ஸ் இருக்கிறது. உங்கள் தேவையையும் பஜட்டையும் பொறுத்து தெரிவு செய்யலாம். மற்றப்படி, தரமான ப்ராண்ட் பார்த்து வாங்குங்க. உழைப்பு... அவரவர் பாவிக்கும் விதத்திலும் இருக்கிறது.

என்னிடம் சாதாரண தையல்களோடு உள்ள ஒன்று இருக்கிறது. நிறையவே வேலை வாங்கி விட்டேன். எந்தப் பிரச்சினையும் தந்ததில்லை.

எம்பிராய்ட்டரி செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

வாணி சொல்ர தையல்மிஷினைத்தான் நேற்று நான் டிவியில் பார்த்தேன்.எனக்கு தையல் தெரியாதுஆனால் இது போன்ர மிஷினை வாங்கினால் என்னால் தைக்க முடியுமா,இதுபோன்ர அனுபவம் யாருக்காவது இருக்கா சொல்லுங்கள் தோழிஸ்

நானே இந்த இழை தேடிட்டு இருந்தேன், சரியான நேரத்தில் மேலே கொண்டு வந்ததுக்கு இனியா க்கு நன்றிகள்.

ஒரு வழியா, நானும் தெச்சு பழகிட்டேன். நம்புங்கப்பா :)
நேத்து போய், மெசின் பாக்கலாம்ன்னு போனேன். நான் பழகினது, நார்மல் மெசின் தான். கடைல, நார்மல் மெசின் வெச்சு இருக்காங்க.அதுலயே மூணு ப்ரண்ட் பாத்தேன், (சிங்கர்,மெரிட், உஷா) இந்த மூணுமே சின்ன மெசின் 5000 குள்ள வருது, பெருசு எடுத்தா 7500 -8000 வருது.வீட்டு உபயோகத்துக்கு சின்னது போதும் ன்னு நினைக்கறேன்.

இந்த பேசிக் மாடல் க்கு அடுத்த மாடல் பாக்கலாம்னா, Zig Zag, பட்டன் தைக்கறது, அப்படி இப்படி ன்னு 15 -20 டிசைன் ல இருந்து 50 டிசைன் வரைக்கும் இருக்கு. இந்த மாடல் பேசிக் ரேட் 8500 ன்னு சொன்னாங்க. இந்த மாதிரியான மாடல் எல்லாமே, இன் - பில்ட் - மோட்டார் ன்னு சொல்றாங்க, அதாவது மோட்டார் அதுக்குள்ளயே இருக்குமாமா. எங்க வேணும்னாலும் தூக்கிட்டு போய்க்கலாம். ஒரே ஒரு defect , கரண்ட் இல்லேன்னா பிங்க்ளிபி-பியாப்பி தான், தைக்க முடியாதுன்னு சொல்ல வந்தேன். இந்த மாதிரி மாடல் மெசின் 86 வாட்ஸ், அதாவது 10 மணிநேரம் ஓடுனா 1unit வரும்.

இப்ப என்னோட டவுட்: இந்த மாதிரி டிசைன் இருக்கற மெசின் வாங்கலாமா? அது எந்த அளவு லைப் கிடைக்குது? எனக்கு கிளாஸ் எடுத்தவங்க என்ன சொன்னாங்கன்னா, இப்ப வரது எதுமே தரம் கிடையாது. நீங்க சாதாரண மெசின் வாங்கிக்கோங்க. எனக்கு என்ன தோணுச்சுன்னா, சாதாரண மெசின் வாங்குனா, சாரீ உருட்டி அடிக்கறது, Zig Zag,ஏலல்த்துக்கும் வெளிய தரணுமே. :-) அதான் ஒரே யோசனையா இருக்கு. எக்ஸ்ட்ரா டிசைன் இருக்க மெசின் ல எந்த ப்ரண்ட் நல்லா இருக்கு ன்னு சொல்லுங்களேன்.
சிங்கர்,மெரிட், உஷா - இதுல அனுபவசாலிகளின் ஓட்டு எதுக்கு???சீக்கரம் சொன்னீங்கன்னா, இந்த வாரத்துக்குள்ள வாங்கலாம்ன்னு இருக்கேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

எல்லாரும் எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா. ரொம்ப குழப்பத்துல இருக்கேன்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் சுகந்தி நீங்கள் பார்த்ததில் என்னைபோன்ர தையல்தெரியாதவர்கள் ஒரெ நாளில் அதன்மூலம் கத்துக்கமுடியுமா?

சுகந்தி, இனியா... சத்தியமா நான் முறையா தையல் கத்துக்கல. ஆனா என் பெண்ணுக்கு ஃப்ராக், ஸ்கெர்ட் திஅப்பது, பில்லோ கவர் தைப்பது, ஓரம் அடிப்பது, புடவை ஃபால்ஸ், ஜிக் ஜாக் என சின்ன சின்ன வேலை எல்லாம் நானே 1 வாரத்தில் கத்துக்கிட்டேன். எனக்கு ப்ளவுஸும் தைக்க நானே கத்துகிட்டு ஒன்னு தெச்சும் இருக்கேன். நீங்க முறையா கத்துகிட்டவர்'னா சிங்கர் தான் பெஸ்ட். ஏன்னா தையல் தெரியாத நான் வாங்கி கத்துகிட்டது அதில் தான். நான் விசாரித்த போதும் கடைகளில் சிங்கருக்கு அப்பறம் தான் மற்ற எல்லாமே'னு சொன்னாங்க. கரன்ட் வேணும். போர்டபில். நாங்க வாங்கி 2 வருடம் ஆகுது. அப்போ 7500. இப்போ என்ன விலையோ தெரியல. இதுவரைக்கும் எந்த பிரெச்சனையும் அதில் இல்லை. 2 வருடத்தில் இப்ப தான் முதன் முறையா ஆயில் ஓட்டு சுத்தம் செய்து தர சொல்லி வாங்கிய கடைக்கே கொண்டு போகலாம்'னு இருக்கேன். சிங்கர் ஆடோமேடிக் மெஷின்'கு நான் காரண்ட்டி. ஏன்னா நாங்க வாங்கினதை பார்த்துட்டு உறவினர் ஒருவர் [தையல் க்ளாஸ் எடுப்பவர்] தன் சொந்த தேவைக்கு வைத்திருந்த மிஷினை மாற்றி இதே மிஷினை வாங்கிட்டார்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்