கோவக்காய் பொரியல்

தேதி: January 6, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

கோவைக்காய் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று.
வெங்காயம் - ஒன்று
ஆலிவ் எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
உப்பு, கடுகு, காய்ந்தமிளகாய் - தேவைக்கு
கத்திரிக்காய் புளி சம்பல்:
கத்தரிக்காய் - ஒன்று
சிறிய வெங்காயம் - ஐந்து
பச்சை மிளகாய் - ஒன்று
புளி - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கோவக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் சட்டியை வைத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்தமிளகாய் போட்டு வெங்காயம் போட்டு வதக்கவும்..
பின் அதில் தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
அதில் கோவைக்காயை போட்டு உப்பு போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்..
இதோ ஆலிவ் கோவைக்காய் பொரியல் ரெடி. மற்ற எண்ணெயிலும் இந்த பொரியலை செய்யலாம்.
கத்திரிக்க்காய் சம்பல்: வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கத்தரிக்காயை கழுவி துடைத்து தீயில் சுட்டு ஆறியவுடன் மசித்து அதில் நறுக்கின பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, புளி போட்டு பிசையவும்.
கத்தரிக்காய் சம்பல் தயார். பழைய சாதத்திற்கு சூப்பர் காம்பினேசன் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா....நலமா?
என்னபா ரெண்டு ரெண்டு சமையலா கொடுத்து அசத்துறீங்க.
ரெண்டு சமையலுமே சூப்பர்.
கோவக்காயை இது வரை வாங்கியது இல்லை.
ஹோட்டலில் தான் சாப்பிட்டு இருக்கேன்.ஏன் ஆலிவ் ஆயிலில் செய்ததற்க்கு ஏதும் ஸ்பெஷல் காரணம் உண்டா...?மற்ற ஆயிலிலும் செய்யலாம் என்று சொல்லியிருக்கீங்க.இருப்பினும் தெரிந்து கொள்ளலாமே என்று ஒரு நப்பாசை.
கத்திரிக்காய் சம்பல் தான் ரொம்ப சூப்பர்.
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும் ருக்சானா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சலாம் ருக்சானா ரெண்டு சமையலா குடுத்து அசத்துற சீக்கிரம் கூட்டாஞ்சோறுல சேர வாழ்த்துக்கள்டா

எனது குறிப்புகளை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு என் நன்றிகள் .நன்றி...

வாழு, வாழவிடு..

அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா.. முதலில் வந்து பின்னூட்டம் கொடுத்ததர்க்கு என் நன்றிகள்.
ஆலிவ் எண்ணெய் உடம்புக்கு ரொம்ப நல்லதுதானே அதான் நான் அது சேர்த்து செய்தேன் .ஆலிவ் எண்ணெயை ரொம்ப சூடுபடுத்தக்கூடாது அப்சரா .எண்ணெய் ஊற்றியவுடன் கடுகு வெங்காயம் போன்றவற்றை போட்டுவிட வேண்டும்
சிலருக்கு இந்த எண்ணெய் பிடிக்காமல் போகலாம் அதனால்தான் மற்ற எண்ணெயிலும் இதை செய்யலாம் என்று போட்டேன்..கத்தரி சம்பல் செய்து பாருங்க சூப்பரா இருக்கும் ப.மிளகாய்க்கு பதிலா காய்ந்த மிளகாய் சுட்டு சேர்த்து பிசைந்தாலும் சுவை சூப்பரா இருக்கும் .
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அப்சரா .

வாழு, வாழவிடு..

உங்கள் வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றிம்மா ..உங்கள் வாழ்த்து எப்பவும் எனக்கு வேனும்மா..ரொம்ப நன்றிம்மா..

வாழு, வாழவிடு..

கோவக்காய் கத்திரிக்காய் இரண்டுமே சுப்பர். சுலபமாவும் இருக்கு ருக்சனா. வாழ்த்துக்கள். கத்திரிக்காய் இன்னும் இரண்டு நாளில் செய்துட்டு சொல்றேன். கோவக்காய் இங்க கிடைக்காது. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாலுவில் கோவக்காய் கிடைக்காதா ஆமாம் இங்கும் சில காய்கறிகள் கிடைக்காது உதாரனம் சிறியபாகற்காய் போன்றவை கிடைக்காது ..நன்றி செய்து பாருங்கள் மீண்டும் நன்றி உங்கள் பின்னூட்டத்திர்க்கு..

வாழு, வாழவிடு..

சலாம் ருக்ஸான,நலமா?

விதவிதமா குறிப்பு கொடுத்து அசத்துறீங்க.கோவக்காய் சுகருக்கு நல்லது தானே.

கத்தரிக்காய் சம்பல்,இது செய்ததே இல்லை.பார்க்கவே நல்லா இருக்கு.கத்தரிக்காயும் இருக்கு.இன்ஷா அல்லா இன்று உங்க குறிப்பு தான்.செய்துவிட்டும் சொல்லுகிறேன்.வாழ்த்துக்கள்.

ஹசீன்

ருக்சானா,கோவக்காய் பொரியல் எளிமையாகவும் ஈசியாகவும் இருக்கு

செய்து பார்த்துட வேண்டியது தான்.

கத்தரிக்காய் சம்பல் நானும் இந்த முறைப்படிதான் செய்வேன். நான் இவற்றுடன் கருவேப்பிலையும் நறுக்கிப் போடுவேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.