35 நாள் கர்பம் உதவுங்கள் தோழிகளே!

நான் இன்று(35th day) home pregnancy test எடுத்தேன். possitive result வந்தது. இனி என்ன செய்ய வேண்டும். டாக்டரிடம் appointment போட்டுள்ளேன். நான் பஹ்ரைனில் இருக்கிறேன். இங்குள்ள யாராவது நல்ல Gynachologist கூறுங்கள். மிகவும் பயமாக உள்ளது. இதற்குமுன் இப்படி நடந்து மீண்டும் periods ஆகி விட்டேன்.

பெயர் சரிதானே?முதலிம் உங்களுக்கு வாழ்த்துகள் :) வீணான பயம் வேனாம் பயமே பீரியட் ஆக வழிவகுக்கும்....எனவே மனசை லேசாக வைத்துகொள்ளுங்கள்...3 மாசம் வரை அதிக கவனம் வேண்டும் இது பற்றி ஏற்கனவே இந்த இணையதளத்தில் நிறைய பேசி இருக்கோம் டைம் கிடைக்குறப்ப பாருங்க...அதிகம் சிஸ்டம்லயும் உட்கார வேண்டாம்

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் அக்சரா வாழ்த்துகள். நானும் பஹ்ரைன் தான்பா. நீங்க எங்க இருகிங்க. எனக்கு தெரிந்து ரொம்ப நல்ல டாக்டர் அமெரிக்க மிசன் ஆஸ்பத்தில டாக்டர் பானு. ரொம்ப எக்ஸ்பிரியன்ஸ் உள்ளவங்க. ஆனால் ரொம்ப காஸ்ட்லியா இருக்கும்பா. நானும் இப்போது கர்ப்பமாக இருக்கேன். நான் கிம்ஸ்ல காட்டுரேன். அங்கு லீமா டாக்டர் கிட்ட. அடுத்த மாததில் இருந்து டாக்டர் பானு கிட்ட தான் காட்ட போரேன். நீங்கள் டெலிவரி எங்க பார்க்க போரிங்கனி முடிவு எடுத்தாச்சா. டெலிவரி இங்க பார்கிரதா இருந்தா அமெரிக்க மிசன் ஆஸ்பத்திரிதான் நல்லது. ஊர்ல டெலிவரி பார்க்கிரதா இருந்தா நீங்க கிம்ஸ்ல கூட காட்டலாம். நான் முதலில் இந்தியாவில் பார்க்கிரதா இருந்து. இப்போது இங்கு பார்கிரதா இருக்கேன், அதான் ஹாஸ்பிட்டல் மாத்துரேன். இங்கே டெலிவரி பார்பதாக இருந்தா அமெரிக்க மிசன் ஆஸ்பித்திரிதான் ஓகேபா. டாக்டர் பானு நல்லா தமிழ் பேசுவார்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

முதலில் என்னுடைய வாழ்த்துகள்.பயப்படவே வேண்டாம் தோழி.மூன்று மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருங்கள்.weight தூக்காதீர்கள்.strain பண்ண வேண்டாம்.முதலில் ஒரு சகோதரி கூறியதை போன்று அதைப் பற்றியே நினைக்கமல் உங்கள் வேளையை பாருங்கள்.கடவுளை கும்பிடுங்கள்.சாமி பாட்டு படியுங்கள், கேளுங்கள்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
நானும் பஹ்ரைனில் தான் இருக்கிறேன்.என் மகனுக்கு 2.8 வயது.அவன் பிறந்தது பஹ்ரைனில் தான்.நான் காண்பித்தது இங்குள்ள health center மற்றும் salmaniya hospital.Delivery ஆனது salmaniya hospital.தோழி சோனியா சொன்னது போல அமெரிக்கன் மிஷன் மற்றும் கிம்ஸ் hospital நல்லாயிருக்கும் என்று சொல்லுவாங்க. டாக்டர் சொல்லற மருந்தை தவிற வேற மருந்து எதையும் சாப்பிடாதீங்க. சூட்டை கிளப்பும் பொருட்களை சாப்பிடாதீங்க. மனசு முழுக்க கடவுளை நினைச்சுட்டு இருங்க. அதிக பேரிடம் நீங்க கர்ப்பமாக இருப்பதை சொல்லவேண்டாம். all the best தோழி.take care. very soon i will see u with ur child.Be Happy. ok.

Expectation lead to Disappointment

நானும் டாக்டர் லிமாவிடம்தான் நேற்று சென்று காண்பித்து வந்தேன். Conform செய்து injection, tablets கொடுத்தாங்க. பிரசவம் இந்தியாவில்தான் பார்ப்பதாக இருக்கிறேன். நான் பஹ்ரைனில் exhibition road ல் இருக்கிறேன். நீங்கள்?

அன்பு தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருடனும் தோழமை கொள்ள சில நிமிடங்களுக்கு முன் அறுசுவையில் இனைந்து உள்ளேன் என்னை உங்க தோழியாக ஏற்றுகொள்ளுவிர்களா

அன்பு தோழிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருடனும் தோழமை கொள்ள சில நிமிடங்களுக்கு முன் அறுசுவையில் இனைந்து உள்ளேன் என்னை உங்க தோழியாக ஏற்றுகொள்ளுவிர்களா

ஹாய் அக்சரா நீங்க குதைபியாவா. நான் மனமா பக்கத்தில சக்லால இருக்கேன். உங்களுக்கு இது முதல் குழந்தையா இல்ல 2டாவதா. எனக்கு முதல் பேபி இது.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் ப்ரோஷா உங்களை வரவேற்கிறேன். நீங்க அசையாக பழக வந்து இருகிங்க என்று புரிகிறது. அதற்க்கு நீங்கள் அரட்டை பக்கம் போங்க. உடனே எல்லாரும் பழகிடுவாங்க. பழக ஆள் இல்லை என்று கத்திகொண்டு இருக்காங்க, இப்பம் நீங்க போனிங்கனா நல்லா பழகலாம்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்