புதினா,மல்லி அழுகாமல் இருக்க என்ன செய்வது தோழிகளே ?

புதினா,மல்லி இலை தனி தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்தாலும் காய்ந்து அல்லது அழுகி விடுகிறது...அழுகாமல் இருக்க என்ன செய்வது தோழிகளே ?

ஹாய் ரேகா,
புதினா,மல்லி அழுகாமலிருக்க அதனை வாங்கியவுடன் கழுவி ,பொடியாக நறுக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விட்டால் எத்தனை நாளானாலும் அழுகாமல் ஃப்ரெஷாக இருக்கும்.தேவையான அளவு ஸ்பூனினால் சுரண்டி உபயோகிக்கவும்.நானும் பலமுறை முயற்சி செய்ததில் இதுவே பலனளிக்கிறது.
அன்புடன் அனு

புதினா, மல்லி அழுகாமலிருக்க மல்லித் தழையின் வேர் பகுதியை மட்டும் அகற்றி ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கவும். ஃப்ரிட்ஜில் கீழ் ரேக்கில் ( ஃப்ருட்ஸ் ரேக் அதுல ஆல்ரெடி குளோஸ்டு கவர் இருக்கும்) வைக்கவும். புதினாவும் ஒரு கவரில் போட்டு அங்கேயே வைக்கலாம். அல்லது இழையை தனியே எடுக்காமல் டபர்வேர் பாக்ஸில் வைக்கலாம். எனக்கு பதினைந்து நாளுக்கு மேல் ஃப்ரஷா இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க.

Don't Worry Be Happy.

புதினா, மல்லி அழுகாமலிருக்க புதினா ,மல்லித் தழையின் வேர் பகுதியை மட்டும் அகற்றி ஒரு News paper போட்டு கவரில் வைக்கவும்.ஃப்ரஷா இருக்கும்.

I love India

குளிர் சாதன பெட்டி இல்லாதவர்கள் புதினா ,மல்லி,ரெண்டையும் வேரை மட்டும் கட் பண்ணி விட்டு நமது சமையல் மேடையில் ஒரு ஓரத்தில் வைத்து அதன் மேல் நல்ல கனமான பாத்திரத்தால் காற்று புகாமல் மூடிவைக்க வேண்டும் .இப்படி வைத்து தேவை படும்போது மட்டும் அதை திறந்து எடுத்து கொள்ளவேண்டும்.இந்த முறையில் ரெண்டு மூன்று நாள்வரைக்கும் நாம எப்படி பிரெஷா வாங்கினோமோ அந்த மாதிரியே .இருக்கும்.இது எனது தோழி அவள் விகடனில் பார்த்து தெரிந்து கொண்டு உபயோகிப்பது.நானும் இப்படி பயன்படுத்துவேன்.

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்