கலாட்டா கிச்சன் - அசத்தலான பகுதி - 5

நம்ம சமைத்து அசத்தலாம் பகுதிக்கு நாம வைத்த புது பெயர் இது தான். :) நல்லா இருக்கா?

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

pavithra_ram - 25
DEVA - 41
Renuka - 40
caroline - 42

இவற்றில் இருந்து வரும் Jan 10ஆம் தேதி முதல் Jan 17அம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

இம்முறை நமது கணக்குபிள்ளை யாழினி.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

சமைத்து அசத்தலாம் - இதுவரை

***************

முதல் பகுதி:

குறிப்பு கொடுத்தவர்கள்: இந்திரா, மைதிலி பாபு, தயாபரன் வஹிதா, சுமதி

பங்குபெற்றவர்கள் - 17 பேர் (வனிதா, யோகராணி, ஹர்ஷா(அன்பரசி), ஆமினா, பவித்ரா, சங்கீதா, லாவண்யா, கெளரி, கவிசிவா, வினோஜா, யாழினி, மகேஷ்யுவா, இளவரசி, சுஸ்ரீ, வின்னி, பொன்னி, சீதாலஷ்மி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. லாவண்யா (22)

அசத்தல் இளவரசி திருமதி. பொன்னி (20)

அசத்தல் இளவரசி திருமதி. அன்பரசி பாலாஜி (16)

***************

இரண்டாம் பகுதி:

குறிப்பு கொடுத்தவர்கள்: மஹிஸ்ரீ, சாந்தி, சந்தியாரவி, ரஸியாநிஸ்ரினா

பங்குபெற்றவர்கள் - 19 பேர் (இளவரசி, நித்திலா, கோமு, மஞ்சுளா அரசு, ரீனா, ஹமீது பாத்திமாம்மா, மகேஷ்யுவா, அப்சரா, சுஸ்ரீ, சீதாலஷ்மி, சாந்தினி, பவித்ரா, யோகராணி, லாவண்யா, மீராகிருஷ்ணன், வினோஜா, சுந்தரி அர்ஜுன், யாழினி, வின்னி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. கோமு (46)

அசத்தல் இளவரசி திருமதி. இளவரசி (28)

அசத்தல் இளவரசி திருமதி. லாவண்யா (25)

***************

மூன்றாம் பகுதி:

குறிப்பு கொடுத்தவர்கள்: ஸ்ரீவித்யா, ஹர்ஷா, இந்திரா, ஜுபைதா.

பங்குபெற்றவர்கள் - 21 பேர் (சித்ரா, உமா, சந்திரா, சிவாகீதா, வினோஜா, இளவரசி, ருக்சனா, கல்பனா, அப்சரா, ஸ்வர்ணா, ரீம், ஹசீனா, வனிதா, பாத்திமாம்மா, பிரபா, சுஸ்ரீ, வின்னி, சீதாலஷ்மி, சுமி, ஸ்ரீவித்யா, யாழினி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. சித்ரா (50)

அசத்தல் இளவரசி திருமதி. ருக்சானா (46)

அசத்தல் இளவரசி திருமதி. ரீம் (41)

***************

4ஆம் பகுதி:

குறிப்பு கொடுத்தவர்கள்: அம்முஜான், நித்யாகோபால், mdf.

பங்குபெற்றவர்கள் - 11 பேர் (வினோஜா, ரீம், சீதாலஷ்மி, சுஸ்ரீ, அப்சரா, யோகராணி, வனிதா, ருக்சானா, வின்னி, ஸ்ரீவித்யா, யாழினி)

வெற்றி பெற்றவர்கள்:

அசத்தல் ராணி திருமதி. ரீம் (25)

அசத்தல் இளவரசி திருமதி. ருக்சானா (19)

அசத்தல் இளவரசி திருமதி. யாழினி (11)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழிகளே நாளை முதல் நீங்க சமைத்து சொல்லலாம்... இன்றே பார்த்து வாங்க வேண்டிய பொருட்கள் எல்லாம் வாங்கி வைங்க. சரியா? கண்டிப்பா இம்முறை நிறைய பேர் கலந்துக்கனும்'னு அன்போடு கேட்டுகொள்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சகோதரி வனிதா அவர்களே,
எனக்கு உங்களின் கலாட்டா கிச்சனில் கலந்துக்கொள்ள விருப்பம். ஆனால் குறிப்புகளை எடுத்து செய்யும் விதம் நீங்கள் சொல்லி யுள்ளது எனக்கு புரியவில்லை. அவை கூட்டாஞ்சோறு பகுதியில் எப்படி எடுப்பது. விளக்கம் தேவை.

என்றும் அன்புடன்
நூரி சையத்

அகத்தின் அழகு முகத்திலே!....

என்றும் அன்புடன்
நூரி சையத்

கூட்டாஞ்சோறு பகுதிக்கு போய் கீழே இருக்கும் நாள்வரின் குறிப்புகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்.

pavithra_ram - 25
DEVA - 41
Renuka - 40
caroline - 42

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இந்த முறை நிச்சயமா கிச்சன் கலாட்டாவுல என்னோட கரண்டியும் கலக்கபோகுது;-)

Don't Worry Be Happy.

நூரி... நான் கொடுத்திருக்கும் 4 தோழிகள் பெயரும் கூட்டாஞ்சோறு பக்கத்தில் இருக்கும். அருகில் இருக்கும் எண், அவர்கள் தந்திருக்கும் குறிப்புகளின் எண்ணிக்கை. இவர்கள் 4 பேரின் குறிப்புகளில் இருந்து எதை விரும்பினாலும் செய்து இங்கே சொல்லலாம். நான் குறிப்பிட்டிருக்கும் தேதிக்குள் தோழிகள் அனைவரும் செய்த குறிப்புகளை இங்கே சொல்வார்கள். அதில் யார் அதிக எண்ணிக்கை குறிப்புகளை செய்திருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். போட்டியின் முடிவு வரும் 17 அன்று வெளி வரும். நீங்க ஆர்வமோடு கலந்து கொள்ள விரும்புவது மிகுந்த மகிழ்ச்சி. அவசியம் செய்து சொல்லுங்க. குறிப்பு கொடுத்தவருக்கும் பின்னூட்டம் கொடுங்க. மிக்க நன்றி. என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுவர்ணா நேரத்துக்கு வந்து நூரிக்கு பதில் கொடுத்திருக்கீங்க... மிக்க நன்றி :)

ஜெயலக்ஷ்மி... அவசியம் வரணும். இல்லன்னா வீடு தேடி வந்து அழைத்து வந்திடுவோம். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலாட்டா கிச்சனில் நிட்சயம் நானும் கலந்து கொள்வேன்.ஒரு முறை என்றாலும் அசத்தல் ராணியாக வரவேண்டும் என நெடுநாள் ஆசை பார்ப்போம்.
கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய் சொல்லிக்கிறேன்.
இந்த முறையும் கலகலப்பாக வண்டி செல்ல வேண்டும்.
வாழ்த்துக்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வனி *** கலாட்டா கிச்சன் *** கலக்கலான தலைப்பு போங்க.
இந்த முறை இன்னும் நல்லா கலக்கலாக வண்டி போக போகுதுன்னு நினைக்கிறேன்.
கலந்து கொள்ளவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்...
வழக்கம்போல் நானும் முடிந்தவரை வந்து கலந்து கொள்கிறேன்.
யோகா மேடம் சொன்னதுபோல் நானும் ஏதும் ஒரு பட்டம் வாங்கலாமுன்னு பார்த்தா முடியலையே வனி.....(படிக்கும் போது தான் வாங்கலையே இதுலையாவது வாங்க மாட்டோமான்னு ஒரு நப்பாசைதான்...ஹீ...ஹீ...)

சரி வண்டியை நாளை அமர்க்கலமாக தொடங்குங்க....
எங்கே நம்ம கணக்கு யாழினி காணும்.வாங்க வாங்க.....
நாளை எல்லோரும் சந்திப்போம்....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நானும் கலந்து கொள்கிறேன்.கணவரை கொடுமைப்படுத்த நல்ல சான்ஸ் விடுவோமா??{ஹி ஹி சும்மா}

மேலும் சில பதிவுகள்