குழந்தைக்கு எந்த மாதத்தில் walker வாங்கணும்?

ஹாய் தோழிகளே,
குழந்தைக்கு எந்த மாதத்தில் walker வாங்கணும்?
இப்போ என் மகனுக்கு ஆறு மாதம் முடிவடைந்தது. இப்போ வண்டி வாங்கலாமா?
இன்னும் தவலவில்லை. வயிற்றில் நகருகிறான்.எந்த மாதம் வாங்கணும்? please guide me.

walker அவசியமே இல்லாதது. ஒரு வேளை நடக்க அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளும் பிள்ளைகளுக்கு அதை உபயோகப்படுத்தலாம். உங்கள் மகன் தானாக எல்லாமே செய்கிறான் எனில் அவனாகவே நடக்க பழகுவான். சுவற்றின் மூலையில் அதாவது இரு சுவர்கள் சந்திக்கும் இடத்தில் நிற்க வைத்தாலே போதும். நிற்க பழகிவிட்டால் தானாக நடக்க பழகிவிடுவார்கள்.

பொதுவாகவே 7 மாதம் முதல் வாங்கிவிடலாம் ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்பவும் கட்டுப்படுத்த முடியாமல் வேலை செய்ய விடாமல் இருந்தால் மட்டும் வாக்கர் வாங்கவும்..இரண்டு காலும் வாக்கரில் இருந்து கீழே தரையில் பதியும் அளவு வளர்ந்தால் மட்டும் வாங்கவும்..சதா என்னேரமும் அதில் விட வேண்டாம்.
அதிலிருந்து எழும்ப அல்லது குதிக்கமுயற்சிக்கும் பருவத்தில் வாக்கரை நிறுத்தி விடவும்.வாக்கர் நல்லதல்ல

தெளிவான பதிலைதந்த ஆமினா மற்றும் தளிகா உக்கு என் நன்றி.

god is great

ஆசையாக 6 ம் மாதம் வாங்கினேன்.ஊஞ்சல்,ஆடும் நாற்காலி, வாக்கர் எல்லாம் சேர்ந்த 3இன் 1. அது இப்போ பரணில்.:-) எனது 9 மாத மகள் சோபா,சுவர்,நமது கைகளை பிடித்து நிற்கிறாள். பொதுவாக வாக்கர் தேவை இல்லை.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்