வீட்டுத் தோட்டம் & செல்லப் பிராணிகள் வளர்ப்பு. [பாகம்-4]

அறுசுவை குடும்பத்தின் வீட்டுத் தோட்டம் இழை உங்களின் அமோக ஆதரவுடன் மூன்று பாகங்கள் நிறைவு பெற்று நான்காவது பாகத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். வாரம் ஒரு உபயோகமான விவசாயக் குறிப்புகள் உங்களுக்கு வழங்க இருக்கிறோம்.
வீட்டுத் தோட்டம் அமைப்பது, மற்றும் பராமரிப்பது குறித்தும், செல்லப் பிராணிகள் வளர்ப்பு குறித்தும் உங்களின் சந்தேகங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

வீட்டுத் தோட்டம் இழையின் நான்காவது பாகம் ஆரம்பித்துள்ளேன் இனி வீட்டுத் தோட்டம் சம்பந்தமான உங்கள் கேள்விகளை இங்கே கேளுங்கள்.

அன்புடன்
THAVAM

hi, davamani.
how r U??
ok..ennaku pura(dove) valarpathil than santhegam niraya eruku.. so can you give that details.
thank you...

சகோதரி,
நான் நலமே. புறா வளர்ப்பில் உங்கள் சந்தேகங்கள் என்ன என்பதை தெளிவாக கேளுங்கள்.

அன்புடன்
THAVAM

போன்சாய் மரங்கள் வளர்ப்பு குறித்து விளக்கமாக தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக இணைய தளத்தில் காணலாம். அவர்களை தொடர்பு கொண்டால் போன்சாய் மரங்கள் எங்கு கிடைக்கிறது என்ற தகவலும் கிடைக்கும். தொடர்புக்கு 1551 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முயற்சித்து பாருங்கள்.

அன்புடன்
THAVAM

எங்கள் வீட்டில் வளரும் வாழை மரத்தின் இலை காய்ந்து போகிறது (சருகு ஆகிறது). என்ன செய்யலாம் அண்ணா.

All is well

சகோதரி,
நான்கு நாட்களாக உங்களின் கேள்வியை பார்க்​கவில்லை, வாழையில் நோய் தொற்று இருந்தால் இலைகள் மஞ்சள் கலராக மாறி சருகு போல காய்ந்து விடும். இலைகளில் மிகச் சிறிய பூச்சிகள் (பேன்களை போல இருக்கும்), தென்பட்டால் பூச்சிக் கொல்லிகளை உபயோகப் படுத்துவது பயனளிக்கும். ஆகவே பூச்சிகள் இலையின் அடிப்பாகத்திலோ அல்லது மேல்புறத்திலோ தென்பட்டால் தெரிவியுங்கள். என்ன மருந்து அடிக்கலாம் என்பது பற்றி சொல்கிறேன்.

அன்புடன்
THAVAM

எங்கள் வீட்டில் வளரும் ரோஜா செடியில் மலர்கள் முதன்முரைதான் பெரிதாக மலர்ந்தது, அதன்பின் பெரிதாக மலர்வது இல்லை, என்ன காரணம் பெரிதாக மலர என்ன செய்ய வேண்டும்

உங்கள் ரோஜா செடியில் நுண்ணூட்ட சத்துக்கள் குறைந்ததாலும் இது போல் ஏற்படலாம். நுண்ணூட்ட சத்து 50கிராம் மண்ணில் கலந்து தண்ணீர் விடுங்கள். சரியாகும்.

அன்புடன்
THAVAM

நுண்ணூட்ட சத்து 50கிராம்! Please Give Some Brand or Product?

Thanks

I live in a small apartment in first floor. Iam growing a small garden in the second floor open space which includes thulasi, turmeric, Lily ( Nandhya vattai), Omavalli, Manathakkali etc. How to take care of them? They wilt easily. I only water them regularly. At times, I miss that too. But, I am eager to start a routine maintenance schedule from now on. PLS ADVICE.

மேலும் சில பதிவுகள்