ஜவ்வரிசி போண்டா

தேதி: January 11, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (6 votes)

 

ஜவ்வரிசி - ஒரு கப்
புளித்த தயிர் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி - ஒரு துண்டு
கடலை மாவு - ஒரு மேசைக்கரண்டி
அரிசிமாவு - ஒரு மேசைக்காண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஜவ்வரிசியில் தயிர் உப்பு சேர்த்து ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின் ஊறிய ஜவ்வரிசி கலவையில் நறுக்கியவற்றை போட்டு பெருங்காயம் சேர்த்து கடலைமாவு, அரிசிமாவு சேர்த்து பிசையவும்.
கலவை கெட்டியாக இருக்க வேண்டும். உருண்டையாக பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்..
மாலை நேர மொறுமொறு சிற்றுண்டி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பாக்க சிக்கன் மாதுரி இருக்கு மேடம்

Boiled food are good to health compare to fried foods

Be happy

நல்ல குறிப்பு ருக்‌ஷானா

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம்,நலமா,
பார்க்கவே சாப்பிட தோணுது ருக்ஸானா.
வாழ்த்துக்கள்.

ஹசீன்

வணக்கம், உங்க குறிப்பு பார்க்கும் போதே சாப்பிடுனும் போல இருக்கு.புதுமையான குறிப்பு. வாழ்த்துக்கள்..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு என் நன்றிகள் ..நன்றி
பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் என் நன்றிகள்.. நன்றி..
ருகசானாமம்மு...

வாழு, வாழவிடு..

சூப்பர் சூப்பர் வித்தியாசமாகவும்,சுவையாகவும் இருக்கும்னு நினைக்கிரேன் வாழ்த்துக்க்ள் ருக்சானா.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஜவ்வரிசின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஜவ்வரிசி பாயசம்,ஜவ்வரிசி அப்பளம் இதென்ன! ஜவ்வரிசியை வெருமனே சாப்பிடுவேன்,உங்க குறிப்பை பார்த்ததும் செய்து சாப்பிடனும்னு ஆசை வந்திரிச்சி,ஆனால் ஒரு சந்தேகம்,ஜவ்வரிசியில் சிறியது,பெரியது என் இருக்குமே,அதில் எந்த ஜவ்வரிசியை போடனும்?பொடி ஜவ்வரிசி மாவு போல் கரைந்திடும்,ஆனால் பெரியது ஊற வைத்தால் ரப்பர் போல் இருக்கும்,ஊற வைத்த ஜவ்வரிசியை மிக்ஸியில் ஒரு சுற்று விடலாமா?

Eat healthy

சலாம் ருக்சானா நல்ல குறிப்பு வாழ்த்துக்கள்டா

ருக்சனா... வித்தியாசமான சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. பார்க்கவே செய்யணும் போல இருக்கு. இன்று மாலை கண்டிப்பா செய்துடறேன். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஃபாத்திமாம்மா வனி அக்கா ஹசீனா சுவர்ணா ரசியா அனைவரின் பின்னூட்டத்திர்க்கு என் நன்றிகள்..கண்டிப்பா செய்ங்க வனிதாக்கா..
ரசியா இப்படி சாப்பிடுவிங்களா ஜவ்வரிசியை.. நான் போட்டது பெரிய ஜவ்வரிசிதான் நீங்கள் நன்கு தயிரில் ஊறவைய்யுங்கள்.. நான் மிக்சியில் அரைக்கவில்லை அரைத்தால் எப்படி இருக்கும்னு தெரியலையே ரசியா.. என்ன பன்றது கொஞ்சமாக ஒரு சுற்றுசுற்றி அரைத்துதான் பாருங்களேன் .... சரியா செய்துட்டு சொல்லுங்க ..நன்றி ரசியா..

வாழு, வாழவிடு..

----

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

என்ன எழுதாமல் விட்டுட்டிங்க அட (பாராட்ட வார்த்தையே இல்லைன்றதை சிம்பாளிக்கா சொல்றிங்களா ஹி ஹி ஹி) பரவாயில்லை நீங்கள் வந்ததே போதும் நன்றி கல்பனா..

வாழு, வாழவிடு..