தேவா எப்படி இருக்காங்க என்று யாருக்காவது தெரியுமா?

எல்லோருக்கும் வணக்கம். அறுசுவையில் நான் பங்கேற்று நிறைய நாட்கள் ஆகிவிட்டது. என்னை யாருக்கும் ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.

இங்கே ஆஸ்திரேலியாவில் Queensland stateil பயங்கர வெள்ளம். மக்கள் அனைவரும் மிக மோசமான நிலைமையில் இருக்கின்றார்கள். Brisbane சிட்டி கூட தப்பிக்கவில்லை. நம் தேவா அங்குதான் இருக்கிறார். எனக்கு இங்கே வரும் செய்திகளை பார்த்து மிகவும் மனம் கஷ்டப்படுகிறது :( நம் தேவா எப்படி இருக்கிறார் என்று யாருக்காவது தெரியுமா?

அட்மின் சகோதரரிடம் தேவாவின் தொலைபேசி நம்பர் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் பேசி இருப்பார் என்றும் நம்புகிறேன். தயவு செய்து தேவாவும் அவர் குடும்பத்தினரும் எப்படி இருக்கின்றார்கள் என்பதை தெரியப்படுத்தினால் மிகவும் நன்றி உடையவளாக இருப்பேன்.

அங்கே நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மிகவும் கவலை ஆக உள்ளது.

அன்புடன்
உமா

பட்டி தலைப்பு இழையை துவக்கினதே நீங்க தானே. மறந்துடுவோமா? கவலை வேண்டாம் தேவா நலமாக இருப்பார்கள். அண்ணா உங்க பதிவு பார்த்துட்டு பேசுவார். நிச்சயம் பதில் சொல்வார். கவலைபடாம இருங்க. நாங்க பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் நியூஸ் பார்த்தேன்,, மிகவும் பாதிக்க பட்டு இருக்குன்னு சொன்னாங்க. நம்ம தேவா மேடம் அங்கேயா இருக்காங்க? அவங்க ஒரு ஏழு மாசமா அறுசுவைக்கு வரவே இல்ல. என்ன ஆச்சுன்னு தெரியல. அட்மின் அண்ணா கிட்ட கேட்டா தான் தெரியும், அவங்களுக்கு ஒன்னும் அக கூடாதுன்னு இறைவனை வேண்டுவோம்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

என்னை ஞாபகம் வைத்து இருப்பதற்கு நன்றி. அட்மின் என் மெசேஜ் பார்த்து பதில் அதுவும் நல்ல பதிலா சொல்லணும்னு ஆண்டவன் கிட்டே வேண்டிக்கறேன்.

சுகந்தி ஆமாம். அவங்க அங்கே தான் இருக்காங்க.

அன்புடன்
உமா

//என்னை யாருக்கும் ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.//

உங்களை மறப்பது அறுசுவையையே மறப்பது போன்றது.. எனது சகோதரியை யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். :-)

தேவா அவர்கள் நன்றாக இருக்கின்றார். அவர் இருக்கும் இடத்தில் வெள்ள பாதிப்பு இல்லையாம். அந்த நேரத்தில்தான் அவர் இந்தியா புறப்பட்டு வந்தார். தற்போது சென்னையில், தேனாம்பேட்டை கொசுக்களுடன் சுகவாசியாய் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கின்றார். இந்த மாதக் கடைசியில்தான் ஆஸ்திரேலியா திரும்புவார். எனவே, அவரைப் பற்றின கவலை வேண்டாம். (அவங்கெல்லாம் சுனாமியிலேயே ஸ்விம்ங்க் போறவங்க.. இந்த வெள்ளமெல்லாம் வெல்லம் மாதிரி.. :-))

தேவாவின் விசிறி நான்.எனது நம்பிக்கை நட்சத்திரம். அவர்களுடன் பேச , சந்திக்க இயலுமா? ஜெ. மாமியின் கொலுவில் ஒரு அட்டெண்டஸ் போட்டுருக்கேன்.இப்படி கேட்டது தவறெனில் மன்னியுங்கள்.

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

உமா,உங்களை மறப்பதா...சமீபத்திய பட்டியில்கூட உங்களைதேடி பதிவுகள்

போட்டேன்,..நீங்கள் இருக்கும் இடத்தில் பாதிப்பு இல்லாமல் நலமாய் இருப்பது

கண்டு மகிழ்ச்சி..

தேவாவும் நல்லா விடுமுறையை கொண்டாடிட்டு இருக்காங்க

ஆஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்காய் வருத்தமாய் இருக்கிறது..

எல்லாம் விரைவில் சரியாக வேண்டி கொள்வோம்..

ஏன் இப்போது நீங்கள் அறுசுவைக்கு அதிகம் வருவதில்லை..?
குடும்பம் நலமா?
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

யாரது கேர்ல் ஃப்ரம் ஆஸி எனக்கும் உங்களை தெரியாது:-)

தேவாவை பற்றி தான் நேத்து படுத்துட்டே யோசிச்சேன்..வந்து பேசினால் சந்தோஷமா இருக்கும்

பத்தீங்களா.... இங்கயே லோக்கல்ல உட்கார்ந்துகிட்டு அவங்க சமையல் குறிப்புலாம் சமைக்கும் போது கூட எட்டி பார்க்கல. ;( அண்ணே.... கொஞ்சம் தகவல் சொல்லி வர சொல்லுங்கண்ணே..... எல்லாரும் தேடுறோம்'னு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

***உங்களை மறப்பது அறுசுவையையே மறப்பது போன்றது.. எனது சகோதரியை யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். :-) ***

இந்த வார்த்தைகள் நிஜமாகவே என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது :) பார்த்து பல மாதங்கள் ஆனாலும் இப்படிப்பட்ட அன்பை அதுவும் இணைய தளத்தில் பார்ப்பது மிக மிக அரிது. நாங்கள் எல்லாம் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போகிறோம்?

நல்ல செய்தியை கொடுத்து இருக்கிறீர்கள். படித்ததும் பெரிய நிம்மதி. அவரிடம் பேச நேர்ந்தால் என் அன்பை கூறவும்.

இளவரசி ஆமாம். நான் அறுசுவையில் பங்கேற்று வெகு நாட்கள் ஆகிவிட்டது. நேரமின்மைதான் காரணம். வேலை அதிகம். வீட்டுக்கு வர நேரம் ஆகிவிடுகிறது மற்றும் ரெகுலர் ஆக ஜிம் சென்று வருகிறேன். ஆனால் அப்போ அப்போ வந்து குறிப்புகளை சுட்டுவிட்டு சென்று விடுவேன் :) தேவா தான் என்னை இங்கே அழைத்து வந்தார் :) என்னை விசாரித்தமைக்கு மிக்க நன்றி. குடும்பமும் நன்றாக உள்ளனர் :) உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

தளிகா அறுசுவையில் என் முதல் தோழியே :) யாரை மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன்!! ஏன் எனில் நீங்கள் என் தோழி மட்டும் அல்ல என் தங்கையும் கூட!! உங்கள் குட்டி செல்லங்கள் இருவரும் நன்றாக இருக்கிறார்களா?

அனைவருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)

அன்புடன்

உமா

உமா எப்படி இருக்கிறீங்க? ஆஸியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு வர பிராத்திப்போம். நானும் உங்களை பத்தி அடிக்கடி நினைச்சிப்பேன். இங்க நிறைய பேர் என்னை நீங்கன்னு நினைச்சு பேசியிருக்காங்க. தளிகா நலமா? பையன் ரீமா குட்டி போலவே சேட்டையா? அமைதியாக இருக்கிறாரா?

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்