*******கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 5********

தோழிகளே
<!--break-->
////தோழிகளே உங்களின் புதிர்க் கேள்விகளை இனி இங்கிருந்து தொடரலாமே ...
வயிற்றுப் பசிக்கு அறுசுவை உணவு வேண்டும் .....
மூளைப் பசிக்கு இந்த அறுசுவை தளத்தின்
மூளையை கசக்குங்க பகுதி தான் வேண்டும் ,,
இனி கேள்விகளை இங்கிருந்து ஆரம்பிங்க தோழிகளே////************

அசத்திட்டே தீபா ..சொல்லுங்க யோகராணி...என் பெயர் அஸ்வதா..நண்பி...

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

தீபா உங்கள் பதிலும் நன்றாகத்தான் உள்ளது.

நம்மாளுகளுக்கு என்னென்ன விதமான சிந்தனைகள் வருகின்றன என்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்கின்றேன்.

ஆனால் நான் சொல்ல வந்த பதில் இதுவல்ல.

நாளை வரை பொறுத்திருக்கவும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இப்படி ஊரு சுத்திட்டு வறீங்க.. என்னையும் கூட்டிட்டு நல்ல படியா போயிருக்கலாம்.. ஜாலியா சுத்தி இருக்கலாம்னு சொன்னாளா?

என்னை சுத்தி இருந்தா உலகத்தையே சுத்தின மாதிரினு சொன்னாளா?

நீங்க இதெல்லாம் செய்தீங்கனு எனக்கு எப்படி தெரியும்? கண் முன்னாடி செய்தாதானே தெரியும்.. பொய்யா இருக்கலாம்.. என்னை கூட்டி போய் மறுபடியும் என் முன்னால செய்ங்கனு சொன்னாளா?

என்னதான் சொன்னா ? ;) அட படத்தோட டைட்டில் மாதிரி இருக்கே?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இதற்க்கு எவரும் சரியான பதிலைக் கூறவில்லை.
ஆனால் மிகப் பக்கமாக வந்துள்ளார்கள்.
அவன் அவள்மீது கொண்ட அன்பை அருகில் இருந்து காட்டாமல் மாதக்கணக்கில் அங்கும் இங்கும் அலைந்து மாதங்களைப் போக்கினதால் அவள் என்னை விவாகரத்து செய்துவிடு என்றுதான் கூறியிருப்பாள்.

இதோ உங்களுக்காக அடுத்த புதிர்.

ஒரு தம்ளர் தண்ணீரில் ஐஸ்கட்டிகள் மிதந்து கொண்டிருந்தது. அதில் நான் மேலும் தண்ணீர் ஊற்றினேன்.இப்போது தம்ளரில் நீர்மட்டம் முழுவதுமாக நிறைந்திருந்தது. மேலும் ஒரு சொட்டு தண்ணீர் நிரப்பினாலும் வெளியே வழிந்துவிடும் அளவுக்கு நிறைந்திருந்தது.
ஐஸ்கட்டிகள் உருகிக்கொண்டே இருந்தன.எல்லா ஐஸ்கட்டிகளும் உருகியதும் தம்ளரில் இருந்து நீர் வெளியே வழியுமா? வழியாதா?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வழியாது. அந்த ஐஸ் கட்டியின் வெயிட் சேர்த்து தான் அதன் நீர் மட்டம் தம்ளரில் உள்ளது

vazhiyaadhu

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உங்கள் இருவர் பதிலும் சரியானதே.

வாங்க அடுத்த புதிருக்குப் போவோம்.

ராமு தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக ஒரு கப் பால் குடித்துவிட்டுப் படுப்பது வழக்கம்.அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனியாகத்தான் வசிக்கிறான். அதனால் வீட்டில் ஒரு மைக்ரோ ஓவன் வாங்கி வைத்துள்ளான். தினமும் இரவில் ஒரு கப்பில் [tea cup]பால் ஊற்றி, அதை மைக்ரோ ஓவனில் வைத்து, சரியாக 84 செகெண்டுக்கு டைமரை வைத்துவிடுவான்.பால் சூடானதும் எடுத்துக் குடிப்பான் ஒருநாள் கூட அதிகமாகவோ குறைவாகவோ வைப்பதில்லை. . அவன் எதற்காக 84 செகெண்ட் டைமர் வைக்கிறான்.?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

84 செகண்டுக்கு குறைவாக வைத்தால் பால் சூடு ஆகாமல் இருக்கலாம் . 84 செகண்டுக்கு மேல் வைத்தால் அவன் தூங்கிவிடலாம்

யோசிச்சி பார்த்த பலவிதமான பதில்கள் வருது. ராமு நேரத்தை வீனாகதவனாக இருப்பான். அவன் வேலைகள் அனைத்தும் நேரத்தை கணக்கிட்டு செயல்படுபவனாக இருப்பான். எனவே 84 செகண்ட்ஸ் என்று தினமும் பயன் படுத்துகின்றான். அது இல்லை என்றால் 84 நிமிடத்திற்கு மேல் போய்விட்டால் அது பொங்கிவிடும் என்பதால் அவன் அந்த டைம் பயன்படுவான் என்று நினைக்கிறன். எனக்கு தெரியல நீங்களே சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

100 ரூபாய் நோட்டை நீங்கள் தனி தனி நோட்டாக 10 ௦ நோட்டுகளாக மாற்ற வேண்டும். அதில் 10 ரூபாய் நோட்டு வர கூடாது. மற்ற படி 50,20,10,2,1 என்ற நோட்டுகள் அடிபடையில் எத்தனை நோட்டுகள் வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் ஆனால் மொத்தம் 10 ௦ நோட்டுகள் தான் வர வேண்டும். கண்டுபிடுத்து சொல்லுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்