மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

ராதா எங்க போயிட்டீங்க........பா! ரொம்ப சந்தோஷம்பா திரும்பவும் உங்களைப் பாத்ததில;-)

எனக்கு ஓவன் பத்தி அவ்வளவா தெரியலை சாரி;-(

உங்க பேர் பாத்ததும் பதிவு போட வந்துட்டேன்;-)

வெயிட் பண்ணுங்க ஜாம்பவான்கள் வந்து பதில் சொல்வாங்க;-)

Don't Worry Be Happy.

தேங்ஸ் ஜெயா...

ஊருக்கு போய்ட்டதால அறுசுவைக்கு வரமுடியல. இப்ப தான் இந்தியால இருந்து வந்தேன்பா. இனிமே அறுசுவைக்கு வருவேன். அறுசுவைக்கு வரமா இருக்க முடியுமா. உங்கள எல்லாம் விட்டுட்டு போக முடியுமா. நீங்க எப்படி இருக்கீங்க?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

நான் ரொம்ப நல்லாயிருக்கேன்பா. ஊருக்கு போயிட்டு வந்தீங்களா கேக்கறதுக்கே மகிழ்ச்சியா இருக்கு;-௦)

சரி நான் இப்ப இங்க அரட்டை அடிச்சா எல்லாரும் என்னை உதைப்பாங்க;-)

நல்ல ஓவன் வாங்க வாழ்த்துக்கள்;-)

Don't Worry Be Happy.

ஹாய்ராதா எப்படி இருக்கிங்க ஊருக்கு போய்ட்டு எப்போ வந்திங்க பையன் நல்லா இருக்கானா

மைக்ரோ ஒவன் என்னிடம் உள்ளது ifB ஆனா கேக் இன்னும் செய்யவில்லை

கோழி,சாதம்,காய்,குழம்பு,இப்படித்தான் செய்து இருக்கேன் எனக்குமே இன்னும் ஒன்னும் புரியலை யாராவது அவனைபத்தி போட்டா முதல் ஆளா வந்து பார்ப்பேன்

நம்ம ராதாவாச்சேன்னு ஒடி வந்து எனக்கு தெரிந்த்தை சொன்னேன் உங்க புண்ணியத்துல நானும் தெரிந்து கொள்வேன்

பாத்திமாம்மா. நீங்க வந்து எனக்காக பதிவு போட்டதற்கு மிக்க நன்றி. நீங்களும் இதுக்கு முன்னாடி ஒரு இழை ஆரம்பித்து அதில் ஆமி பதிவு போட்டிருந்ததை பாத்தேன். எனக்கு இந்த microwave oven பத்தி ஏகப்பட்ட குழப்பம். நம்ம மக்கள் யாராவது வந்து தெளிவா சொன்னா நல்லாருக்கும். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்.

நான் ஊருக்கு போய்ட்டு வந்து 10 நாளாச்சும்மா. எல்லாரும் நல்லாருக்கோம். ஊருக்கு போய்ட்டு வந்ததுல இருந்து எல்லாருக்கும் உடம்பு சரியில்ல. இந்தியால க்ளைமேட் மோசமா இருந்ததால எல்லாருக்கும் காய்ச்சல், சளி. இப்போ எல்லாரும் நல்லாருக்கோம்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மன்றத்துல மைக்ரோஅவன் வாங்கறது எப்படினு சில டாபிக் ஆரம்பிச்சு பேசி இருக்காங்க. சமையல் உபகரணங்கள் பகுதில இருக்கு பாருங்க நீங்க கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கும் INCLUDING UR DOUBTS ---FORUM 100

ஃபெல்சியா மேடம், தங்களின் பின்னுாட்டத்திற்கு மிக்க நன்றி. நானும் இந்த இழை தொடங்குவதற்கு முன்னால் மன்றத்தில் உள்ள எல்லா இழைகளையும் படித்துவிட்டு தான் ஆரம்பித்தேன். இமா, வனிதா, இளவரசி எல்லாரும் கருத்து சொல்லிருக்காங்க. ஆனாலும் எனக்கு இன்னும் விளக்கம் வேண்டும். அவுங்க வந்தா கேக்கலாம்னு இருக்கேன். ஆனால் மக்கள் ஒருவரையும் காணோம். மற்றபடி வேறு யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால் பதில் சொல்லுவார்களே என்று தான் புது இழை ஆரம்பித்தேன்பா. பழைய இழையிலேயே எனது கேள்வியை கேட்டிருக்கலாம். அது மறந்து போச்சு. அண்ணா அடிக்க வராம இருந்தா சரி....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

என்னப்பா இது கடைசில இந்த இழைய தேடி கண்டுபிடிக்கற மாதிரி ஆகிடுச்சு. யாருக்குமே இதுக்கு விளக்கம் தெரியலையா. யாராவது வந்து சொல்லுங்கப்பா..

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மைக்ரோ ஓவன்ல 3 வகை இருக்கு .
1 . reheat
2 . grill
3 . convection
ரீஹீட்ல சூடு பண்ணலாம் , காய்கள் வேக வைக்கலாம் , சமைக்கலாம்
கிரில் நான் வெஜ் செய்வதற்கு உதவும்
convection mode கேக் செய்வதற்கு உதவும் .
OTG (ஓவன் டோஸ்ட்டர் கிரில்லர் ) இதில் கேக், பிஸ்கட், சிக்கன் ரோஸ்ட் தந்தூரி எல்லாம் செய்யலாம்

மைக்ரோ ஓவன்ல செய்வதற்கான நேரம் குறைவு
otg அவன்ல செய்யும் நேரம் அதிகம்
மைக்ரோ ஓவன்ல முன்றும் சேர்த்து வாங்கும் விலையை விசாரித்தேன் 8500/- வந்தது
மைக்ரோ ஓவன் reheat 3300/ வந்தது
otg அவன் 5500 /- வந்தது
அதனால் மைக்ரோ ஓவன்ல reheat மட்டும் வாங்கினேன்
otg அவன் ஒன்றும் வாங்கினேன்

என்னதான் மைக்ரோ ஓவன்ல கேக் , பிஸ்கட் , செய்யலாம்னு சொன்னாலும் otg அவன்ல செய்றதுபோல் இல்லன்னு அறுசுவை தோழிகள் சொன்னாங்க அதனால ரெண்டுமே வாங்கிட்டேன்
வேறு சந்தேகம் எதாவது இருந்தால் கேளுங்கள்

ரம்யா

தேங்ஸ் பா. முதல்ல அவன் வாங்குவோம்னு யோசிக்கும்போது அறுசுவைல பழைய இழை எல்லாம் தேடிப்பார்த்தேன். அப்போ உங்கஇழை தான் அதிகம் கமெண்ட்ஸ் இருந்தது. அதை எல்லாம் படிக்கும்போது தான் OTG பத்தி கேள்விப்பட்டேன். நான் ப்யுர் வெஜ் பா. அதுனால கிரில் மோட் நான்வெஜ் செய்ய மட்டும் தான் உபயோகப்படுமா?

நான் கேக், பிஸ்கட் செய்வதென்றால் மைக்ரோவேவ் அவனில் செய்ய முடியாதா?

ஓகே பிஸ்ஸா செய்கிறோம் என்றால் எப்படி செய்வது? மைக்ரோவேவ் அவன் கன்வென்சன் மோட் ல பண்ண முடியமா?

நான் ப்யுர் வெஜ் பா. என்னுடைய தேவை கேக், பிஸ்கட், பிஸ்ஸா எல்லாம் பண்ணவேண்டும் என்றால் எந்த மாதிரி வாங்கவேண்டும் என்று மட்டும் கூறுங்கள்பா. ப்ளீஸ்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

மேலும் சில பதிவுகள்