மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

என்னுடைய கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லயே??? PLZZZZ ,,,,,,உதவுங்கள்

நான் ifb சோலோ வாங்கினேன் . எலேக்ட்ரோனிக் பட்டன் கிடையாது . manual பட்டன் தான் . எலேக்ட்ரோனிக் பட்டன் சிஸ்டம் வாங்கினால் திடீரென்று உபயோகிக்கும்போது மின் வெட்டு ஏற்பட்டால் அந்த போர்டு முழுக்க மாற்றப்பட வேண்டுமாம் என்று எங்களுக்கு டெமோ காட்ட வந்த நபர் சொன்னார் . அதனல் அதை பற்றி யோசித்து முடிவெடுங்கள் . நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?? அது மட்டுமின்றி மைக்ரோ ஓவன் மூன்றும் சேர்த்த மாறி வாங்கினாலும் 8000ஆனது . மைக்ரோ ஓவன் சோலோ , otg இரண்டும் சேர்த்து வாங்கினாலும் rs .8000 ஆனது. இரண்டாக இருக்கட்டுமே என்று வாங்கினேன் .

ரீமா ,
மைக்ரோ ஓவனில் pre ஹிட் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் (OTG)அவனில் தான் pre ஹிட் செய்ய முடியும் .

பதில் அளித்ததற்கு நன்றி.
நீங்க வாங்கின மாடல் பார்த்தேன் கொஞ்சம் சின்னதா இருக்கும் போல இருக்கே, என் kitchen குட்டியா இருக்கும் பா. ரெண்டும் வைக்க இடம் பத்தாது. அதான் யோசிக்கிறேன். நீங்க உங்க சோலோ மாடல் use பண்றதுக்கு எப்டி இருக்கு. நான் சண்டே வாங்கலாம்னு இருக்கேன். LG எதாச்சும் நல்ல மாடல் இருக்கா? நீங்க சொல்றமாதிரி manual டைப்ல?

reheating use பண்றேன் பா . எந்த ப்ராப்ளமும் இல்ல . lg பத்தி idea இல்ல . கடையில் விசாரித்து எது உங்களுக்கு பிடிக்கிறதோ வாங்குங்கள் .

தோழி ரம்யா விற்கு நன்றி , அப்படி preheat செய்ய முடியாது என்றால், பப்ஸ் எப்படி செய்வது ? கிரில் மோட் ல வைக்க வேண்டும் ?எத்தனை நிமிடங்கள் வைக்க வேண்டும்?

ரீமா நீங்க பப்ஸ் செய்யணும்ணா otg இல்ல convection மோடி உள்ள microwav வச்சு இருக்கனும். கிரில்ல பண்ண முடியாதுன்னு நினைக்கிறன்.

தோழியே உங்கள் பதிலுகு நன்றி, ஆனால் என்னிடம் combination model உள்ளது, அதில் செய்ய முடியதா?

Hai ரம்யா, எப்படி இருக்கீங்க?
நீங்க ஓ டி ஜி வைத்து இருக்கறதா சொன்னீங.அதில் செய்யும் ஐட்டங்கள் என்ன, செய்முறை எப்படி என்று சொன்னல் உபயோகமாஹ இருக்கும்நானும் வீட்டில் ஒன்று வைத்துள்ளேன்.உபயோகப்படுத்தாமலே
மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.இந்தப் பதிவைப் பார்த்து மஹிழ்ச்சி அடைந்தேன்.நன்றரம்யா

idhuvum kadandhu pogum.

வனிதா என்னுடைய இந்த பதிவை படித்து பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/17411 அப்பொழுது உள்ள நிலைமையில் தான் இப்பொழுதும் செய்ய தெரியாமல் இருக்கிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்??என்ன otg அவன் வாங்கினீர்கள் ?? முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா ??

மேலும் சில பதிவுகள்