மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

வனிதா என்னுடைய இந்த பதிவை படித்து பாருங்கள். http://www.arusuvai.com/tamil/node/17411 அப்பொழுது உள்ள நிலைமையில் தான் இப்பொழுதும் செய்ய தெரியாமல் இருக்கிறேன். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்??என்ன otg அவன் வாங்கினீர்கள் ?? முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்களா ??

என்ன மைக்ரோ அவன் வாங்கினீங்க பிரியா ??

எப்படி இருக்கீங்க ரம்யா?
நான் lg mc8081alr 30 லிட்டர் வாங்கினேன்பா. இனி தன டிஷ் எதாச்சும் செஞ்சி பாக்கணும். நீங்க use பண்றீங்களா? என்ன first பண்ணீங்க.

நல்லா இருக்கேன் பிரியா .. நீங்க எப்படி இருக்கீங்க ?? என்னோட முதல் முதல் செய்து பார்த்தது நம்ம vaniசெய்து காட்டியிருக்கும் ரவா கேசரி ஓவன் செய்முறை தான் . ரொம்ப நல்லா வந்தது . நீங்களும் வேண்டுமானால் மூயற்சி செய்து பாருங்கள் . http://www.arusuvai.com/tamil/node/14225

நான் நல்ல இருக்கேன் பா. நீங்க facebook ல இருக்கீங்க?

Plum cake and tandoori சிக்கன் பண்ணேன், கேக் நல்லா வந்துச்சு, சிக்கன் ஓகே, கேசரி பண்ணி பாக்குறேன், வேற என்ன ட்ரை பண்ணிங்க

நான் வைத்திருப்பது யூரோ சுமார்ட் செப் அதற்கு ஒரே ட்ரய் மட்டும் கொடுத்தார்கள். நான் கோவையில் வசிக்கிறேன். நான் எப்படிச் செய்வது என்று தெரியாமல் அப்படியே பேக் பண்ணி வைத்துவிட்டேன்.ரொம்ப நன்றி ரம்யா

idhuvum kadandhu pogum.

நலமா. ரொம்ப நாள் கழிச்சு பாக்கரேன். உங்க சந்தேகத்துக்கு என்னால பதில் சொல்ல முடியுமா தெரியல்லே. நான் சாம் சங்க் T.D.S. ஓவந்தான் வச்சிருக்கேன்.
அதாவது ட்ரிபில் டிஸ்ட்ரிப்யூஷன் ஸிஸ்டம். அதுல நாம நார்மல் சமையல்
மட்டுமே முடியும். கிரில், கன்வெக்‌ஷன்மோட் எல்லாம் இல்லே. அன்றாட
உபயோகத்துக்கு இதுவே போதுமானதா இருக்கு.

facebookla இருக்கேன்பா .. என்னுடைய ஓவன் சோலோ . அதனால முக்கியமா சூடு படுத்த மட்டும் தான் .

கேக் நன்றாக வந்ததா வனிதா ???

நான் நிறைய டிஷ் செய்து பார்த்துட்டேன். reheat இல்லாம pizza, fry, ellam panen.

மேலும் சில பதிவுகள்