மைக்ரோவேவ் சந்தேகம்

அன்புத்தோழிகளே.. எனக்கு மைக்ரோவேவ் பற்றி பலத்த சந்தேகம் உள்ளதுப்பா.. நான் Microwave Oven வாங்கலாம் என்று உள்ளேன். என்னுடைய சந்தேகம் இது தான்.

Oven Toaster - Oven இரண்டும் ஒன்றா? இரண்டும் ஒன்று என்றால் என்னெவெல்லாம் செய்யலாம்? என்னிடம் ஒரு அவன் டோஸ்டர் உள்ளது. ஆனால் இது நார்மல் டைப். வெறும் டோஸ்ட் மட்டுமே செய்யமுடியும். டெம்பரேச்சர் அட்ஜஸ்மெண்ட் கிடையாது. top or bottom or both top and bottom இதில் எதாவது ஒன்று மட்டுமே செலக்ட் பண்ண முடியும். டைமிங் அட்ஜஸ்ட் பண்ண முடியும். அவ்வளவே

Microwave Oven வாங்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்ன? தயவுசெய்து கூறுங்கள்பா. மைக்ரோவேவ் வெறும் கன்வெக்ஷன் மோட் மட்டுமே உள்ளது வாங்கலாமா அல்லது கன்வெக்ஷன் மற்றும் க்ரில் மோட் உள்ளது வாங்கலாமா? எந்த ப்ராண்ட் வாங்கலாம்? Panasonic or sharp or LG எது சிறந்தது?

கேக், பிஸ்ஸா மற்றும் பிஸ்கட் வகைகள் செய்ய எந்த மாதிரியான microwave oven வாங்க வேண்டும். நான் அறுசுவையில் மைக்ரோவேவ் பற்றிய சந்தேகங்கள் உள்ள குறிப்புகளை தேடி படித்து பார்த்தேன். ஆனாலும் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. இமா, இளவரசி, வனிதா எல்லாரும் அவன் பற்றி கூறியுள்ளீர்கள். ஆனால் எனக்கு தான் புரியவில்லைப்பா. சற்று உதவுங்களேன் ப்ளீஸ்..

ஹாய்ரம்யாஸ்ரீனி,
நீங்க கொடுத்த லின்க் ஒரே அசைவமா இருக்கு. நான் சுத்த சைவம்பா.

idhuvum kadandhu pogum.

இன்றைய தினமலரில் ஹலோ தோழிகளே என்று அழைத்து "நோய்களை வரவேற்கும் மைக்ரோ வேவ் சமையல் என்னும் தலைப்பில் கொடுத்துள்ள செய்திகள் ஆரோக்கியமானதாக இல்லையே.நீங்கள் யாரும் பார்க்கலையா?விவி,ரம்யா,ப்ரியா,கோமு,இமா பேசுங்கப்ப

idhuvum kadandhu pogum.

ondrumilli

நான் பார்க்கலைங்க.

எதுதான் நோய்களை வரவைக்காமலிருக்கிறது? லாப்டாப்ல, சிஸ்டத்துல இருக்கிறது, செல் கூட வரவைக்கும் என்பாங்களே. அதனால விட்டுருறோமா என்ன?

சமைக்க வாங்குற பண்டங்கள்ல கூட பிரச்சினை கொடுக்கக் கூடிய எத்தனையோ இருக்கு. கரண்டுல சமைக்கிறது, நான்ஸ்டிக், ப்ரெஷர் குக்கர் (அலுமீனியம் சாப்பாட்டுல கலக்கும்.) கூட நல்லதா தெரியல. மிக்சில அரைக்கறோம், எங்களுக்குத் தெரியாம கொஞ்சம் ரப்பரோ ப்ளாஸ்டிக்கோ கலக்காதா? எவர் சில்வர் கூட உலோகம்தானே? சிந்தெடிக் துணிகள் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை. தெரியுது. ஆனா 100% பருத்திக்கு மாற முடியுதா?

இந்த த்ரெட்ல நான் கமண்ட் போட்டதா நினைப்பு இல்லை. கூப்பிட்டிருக்கீங்க. தினமலர் படிக்காததால நீங்க கேட்டது என்னன்னும் புரியாம பதில் தட்டுறேன். தப்பா இருந்தா மன்னிச்சுக்கணும். இயற்கை வழிதான் நல்லது என்று வீட்டுக்குள்ள விறகு அடுப்பை வைக்கலாம். புகை ஆரோக்கியத்துக்குக் கேடு இல்லையா? ஆஸ்துமா வரலாம். என்ன செய்யப் போறோம்?

ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிட்டு போக வேண்டியதுதான். அவரவர் வசதி, அவரவர் ஆரோக்கியம் என்று பார்த்துட்டு போக வேண்டியதைத் தவிர வேற எதுவும் செய்ய இயலாது. எங்க மனசு சரி என்று சொன்னாலும் ஒரு அளவுக்கு மேல ஒண்ணும் பண்ண முடிவது இல்லையே.

‍- இமா க்றிஸ்

என் மைக்ரோவேவில் Comb1,comb2,comb3 நு ஆப்சன் இருக்கு அது எதுக்கு யூஸ் பன்றது யார்காவது தெரிந்தால் சொல்லுஙள். வாங்கி 7 மாசம் அக்குது அதிகமாக யூஸ் பன்னவே இல்லை. பயன்படுத்த தெரியாததால்.

மேலும் சில பதிவுகள்