இதற்கு வழி சொல்லுங்கள்

ஹாய் தோழிகளே

என் பொண்ணுக்கு வயது 11 கடந்த ஒன்றரை வருடமாக உடம்பு குண்டாகி
விட்டது இதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன் யாருமே சொல்லவில்லை ஏன் ?

திடீரென்று குண்டாகுதுன்னா ஒன்று ஹார்மோன் சுரப்பிகள் பிராப்லம் அல்லது சமச்சீரான உணவு இல்லாமை காரணமாக இருக்கலாம் முதலில் உங்கள் மகள் உணவும் உணவு கொழுப்பு சத்துகள் அதிகமானதான்னு கவனியுங்கள் ஆம் என்றால் அதை சரிபடுத்துங்கள்...இல்லையெனில் ஹார்மோன் பிராப்லம்தான் டாக்டரிடம் அழைத்து செல்லுங்கள்..அவர் ஹைட்டிக்கேற்ற வெயிட் இருக்கான்னு சரி பார்ப்பார்,அதற்குண்டான வழிமுறைகளை சொல்லுவார்...நீங்களாக ஏதும் உடல் குறைய மருந்துகளை எடுத்துகொள்ள வேண்டாம்..சரியான,சமமான,ஆரோக்கியமான உணவே போதுமானது பதில் சொல்லியாச்சு இப்ப ஜாஹிதா பானுக்கு சந்தோசமா :)

அன்புடன்,
மர்ழியா நூஹு

இப்பல்லாம் குழந்தைகள் tv முன்னாடி ரொம்ப நேரம் உட்கார்ந்தே இருக்காங்க அதனால் உடம்பு குண்டாயிடுது. தினந்தோறும் ஸ்கிப்பிங் and cycling பண்ண சொல்லுங்க. chips & கடையில் விற்கும் lays வாங்கி தராதீங்க. okவா?

சில பெண்பிள்ளைகள்,பூப்படைவதற்கு முன் ஏற்படும் மாற்றமாக கூட இருக்கலாம்.ஹார்மோன் ப்ராப்ளமாக இருக்கலாம்.

மேலும் சில பதிவுகள்