பாலக்கீரை குழிப்பணியாரம்

தேதி: January 21, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (5 votes)

 

இட்லிமாவு - ஒரு கப்
பாலக் கீரை - அரை கட்டு
தாளிக்க:
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
முந்திரி - 6 (பொடியாக நருக்கி கொள்ளவும்)
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - சிறிது


 

இட்லி மாவு ரெடி பண்ணிக் கொள்ளவும். பாலக் கீரையை பொடியாக நறுக்கி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து முந்திரி சேர்த்து வறுத்து வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
அடுத்து பாலக் கீரை சேர்த்து வதக்கி சிறிது தேவைக்கு உப்பு போட்டு 5 நிமிடம் வேக விடவும்.
தாளித்த கலவையை இட்லி மாவில் சேர்த்து கலக்கவும்.
குழிப்பணியார சட்டியை காய வைத்து சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றி, தீயின் தனலை சிம்மில் வைத்து மூடி போட்டு வேக விடவும்.
ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு வேக விடவும்.
சுவையான பாலக் குழிப்பணியாரம் ரெடி. கொத்தமல்லி துவையலுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜலீலா மேடம்

மிகவும் எளிமையான சுவையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. கண்டிப்பா ஒரு நாள் செய்து பார்த்துவிட்டு மறக்காமல் பின்னுாட்டம் கொடுக்கிறேன். வீட்டுல இருக்கற பொருட்களை வைத்து செய்யும் எளிமையான குறிப்பா இருக்கு. ஆனா இப்போ வீட்ல பாலக்கீரையும் இல்ல, இட்லி மாவும் இல்ல. அதுனால இரண்டும் கைவசம் இருக்கும்போது கண்டிப்பா செய்து பார்த்துவிடுவேன். விருப்பப்பட்டியலில் சேர்த்துவிட்டேன்.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சத்தான சுவையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப ரொம்ப ஈஸி ஹா குறிப்பு தந்து இருக்கீங்க, படங்கள் ரொம்ப விளக்கமா இருக்கு...சீக்கரம் பண்ணி பாத்துடறேன்...
நான் முகப்புல வாழை பழம் பாத்த உடனே, என்னடா தலைப்பு "பாலக்கீரை குழிப்பணியாரம்" ன்னு இருக்கு, இருந்தாலும் வாழை பழம் உஸ் பண்ணி இருக்கீங்கன்னு நினச்சுட்டு ஓபன் பண்ணி பார்த்தேன்.... குறிப்பு சூப்பர் மா...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

குறிப்பு நல்லா இருக்கு,ஆனால் பாலக் கீரை ப்ரான்ஸில் எங்கு கிடைக்கும்?குழிப்பணியார சட்டியும் என்னிடம் இல்லையே!

Eat healthy

ஜலீலா மேடம் மிகவும் சுவையான குறிப்பு கொடுத்ய்திருக்கீங்க. சண்டே டிபனுக்கு செய்து பாத்துடுவேன்.

அருமையான, சத்தான, சுலபமான குறிப்பு. வாழ்த்துக்கள். கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் மேடம். உங்கள் படைப்புகள் தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

நல்ல குறிப்பு,எனக்கு ரொம்ப நாளா இந்த சந்தேகம்,பாலக்கீரை&ஸ்பினாச் ரெண்டும் ஒண்ணா??இல்லை வேற வேற கீரை வகையா?தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.

ரீம் எப்படி இருக்கீங்க. ஸ்பினாசு & பாலக் இரண்டும் ஒன்று தான். ஆங்கிலத்தில் ஸ்பினாசு, தமிழிலில் பாலக்.

Expectation lead to Disappointment

வாங்க ராதா ஹரி , முதலாவதாக வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி,
செய்து பாருங்கள் எளிமையான ஈசியான குறிப்பு,
இதற்கு கொத்துமல்லி துவையல் சூப்பராக இருக்கும்
ஜலீலா

Jaleelakamal

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி மஞ்சுலா அரசு, செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

சுகந்தி.

எப்போதும் டிபன் இனிப்பு மற்றும் காரம் இரண்டும் செய்வேன்,
வாழைபழ குழிபணியாரமும் செய்து இருந்தேன் அதான் போட்டோ எடுக்கும் போது இதுக்கு வாழைபபழத்தோடு வைத்து எடுத்தேன்.

செய்து பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ரசியா கருத்து தெரிவித்த்மைக்கு மிக்க நன்றி. ஏன் வெளிநாடுகளி ஸ்பினாச் (பாலக்) தான் அதிகமாக கிடைக்கும்.கிடைத்தால் செய்து பாருங்கள், மற்ற கீரையிலும் செய்யலாம்.

இல்லை என்றால் பாலக் பதில் கொத்துமல்லி தழை ஆனால் அதை வதக்க வேண்டாம் அப்படியே இரண்டு கைபிடி அளவுக்கு பைனா சாப் செய்து போட்டு சுடுங்கள் ரொம்ப அருமையாக வாசனையாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

கோமு உங்கள் பாராட்டுக்குமிக்க நன்றி, செய்து பாருஙக்ள் சுவை அருமையாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

தோழிகளே எனக்கு பச்ச மஞ்சள் உள்ளது அதை எப்படி உபயோகிப்பது என்று சொல்லுங்களேன் ப்ளிஸ்ஸ்

ரீம் பாலக்கீரையும், ஸ்பினாச்சும் ஒன்று தான்.

இதுபார்க்க பெரியதாக இருக்கும் வதக்கினால் சுருண்டு கை அளவு ஆகிடும்,

இங்கு அதிகமாக கிடைப்பது பாலக் தான், பிறகு தில்,மேத்தி கிரை, பருப்பு கீரை, சிவப்பு பாலக் இப்படி மற்றது எல்லாம் கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான், முருங்கக்கீரை மரம் நிறைய இருக்கு நாமே தேடி போய் பறித்து கொள்ளனும்.
ஜலீலா

Jaleelakamal

ஒரு நேரத்துக்கு ஒரு டிபன் பண்றக்கே, கண்ணாமுழி திரும்பிடும். நீங்க ரெண்டா... ஹ்ம்ம் உங்க வீட்டுக்கு வந்தா நிறைய டெக்னிக் கத்துக்கலாம் போல....முடுஞ்சா வாழை பழ குழி பனிகாரமும் போடுங்க...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

உங்கள் பாராட்டு மிக்க நன்றீ மீனாள் , முடிந்த போது குறிப்புகளை கொடுக்கிறேன்.

குழிபணியார வகை பத்து வகை செய்து பார்த்து இருக்கிறேன், இன்னும் நிறை ய வகைகள் ஐடியா இருக்கு, அதில் ஒன்று தான் இங்கு கொடுத்துள்லேன்.

பல பேர் இந்த குறிப்பை பார்த்தாலும், வந்து கருத்து தெரிவிப்பது நல்ல உள்ளம் கொண்ட சில பேர் தான் . மிக்க ந்ன்றி.

ஜலீலா

Jaleelakamal

என்னப்பா எங்க கூடயேல்லாம் பேச மாட்டிங்கள் என் பதிவில் பதிளலி மாற்று என 2 வாருகிறிரதே ஏன்

சுகந்தி, ஆமாம்,.

இனிப்பு டிபன் என்றால் ஏதாவ்து வடை, அல்லது சுண்டல் வகைகள் (அ) சுண்டல் சாலட் கண்டிப்பாக சேர்த்து செய்வேன்,.
சமையலில் ஆர்வம் , விருப்புடன் செய்தால் எல்லாம் சுலபம் தான். சுகந்தி,
ஜலீலா

Jaleelakamal

ஃப்ரோசா என்ன கேட்கிறீங்க, கேள்விய தெளிவா கேளுங்கள்,
மஞ்சள் ,ஆ என்றால் என்னது ?

//தோழிகளே எனக்கு பச்ச மஞ்சள் உள்ளது அதை எப்படி உபயோகிப்பது என்று சொல்லுங்களேன் ப்ளிஸ்????//

Jaleelakamal

இன்று உங்கள் குறிப்பை பார்த்து தேங்காய்பால் ரசம் செய்யப்போறேன். சாப்பிட்டுவிட்டு சொல்றேன் எப்படி இருந்தது என்று

பச்ச மஞ்சள் தேய்த்து குளிப்பதற்கு வாசனையாக இருக்கும். வட்ட வட்டமாக நறுக்கி வெயிலில் காயவைத்து machine-ல கொடுத்து அரைத்து use பண்ணவும்.

முகத்துக்கு பூசும் மஞ்சளின் வகை காயதது இலையுடன் உள்ளதுதை மாத பொங்கலின் போது கிடைக்கும்

ஜலீலா மேம்&மீனாள் நன்றி

நன்றி தோழி புது தோழிகளை கண்டு மகிழ்ச்சியாக இருக்கு.என்னிடம் கற்றாலை செடி உள்ளது அதை வைத்து என்ன செய்யலாம்

உங்க பாலக்கீரை குழிப்பணியாரம் அசத்துது;-)

ஃப்ரசண்டேசன் அருமையிலும் அருமை;-)

Don't Worry Be Happy.

அக்கா ரொம்ப சத்தான உணவை கொடுத்துருக்கீங்க.........

செய்து பார்க்குறேன் அக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஜலீலா

தோழி உங்க பாலக்கீரை குழிப்பணியாரம் நல்லா இருக்கு கண்டிப்பா செய்துட்டு சொல்றேன் குழிப்பணியாரம் நான் அடிக்கடி வீட்டில் செய்வேன்

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஜெயலக்‌ஷ்மி

ஜலீலா

Jaleelakamal

ஆமாம் ஆமினா கீரை சேர்த்து செய்வதால் மிக சத்தானது.
பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

ஜலீலா

Jaleelakamal

சலாம் ஹமீத் பாத்திமா.
செய்து பார்த்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

வாழ்த்துக்கள் என்னிடம் குழிப்பணியாரம் சட்டி இல்லயே நான் எப்படி செய்ய முடியும் ..அடுத்தமுறை ஊருக்கு போகும்போது வாங்கிவந்து நிச்சயம் செய்கிறேன் ஜலீலாமேம் சரியா.. டெக்கரேஸன் சூப்பர்..நன்றி

வாழு, வாழவிடு..

நல்ல குறிப்பு... என்னிடமும் குழிப்பணியாரம் சட்டி இல்லை.

வாழ்த்துக்கள் மா.

ஹசீன்

சத்தான குழிபணியாரம் செய்து காட்டியிருக்கீங்க...
நல்லா இருக்கு.
வெறும் இட்லி மாவில் செய்துதான் கறிகுழம்போடு சாப்பிடுவோம்.
இந்த மெத்தடும் நல்லா இருக்கு.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ரொம்ப சத்தான உணவு , செய் முறையும் ரொம்ப சுலபமா இருக்கு ;)

ருக்‌ஷானா கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி, குழிபணியார சட்டி வாங்கியதும் செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஹசீனா, இதை கீரை ஊத்தாப்பம் போலும் ஊற்றலாம், குழிபணியார சட்டி வாங்கியதும் செய்து பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

bumlee bee

ஆமாங்க மிகவும் சத்தானது, கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

Jaleelakamal

அப்சாரா பின்னூடத்துக்கு மிக்க நன்றி பா

இது வரை 12 வகை செய்து பார்த்தாச்சு, எல்லாமே சூப்பர் தான்.
ஜலீலா

Jaleelakamal

அருமையான குறிப்பு வாழ்த்துக்கள்.....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நல்ல குறிப்பு.வெங்காய கலவையில் செய்து உள்ளேன்.இது புதிது.கண்டிப்பாக செய்து விட்டு சொல்கிறேன் மேடம்.

hi

உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஸ்வர்னா
ஜலீலா

Jaleelakamal

சகேலி இது நான் முயற்சி செய்தது, முடிந்த போது செய்து பாருங்கள்.

ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா நலமா உங்க பாலக்குழிபணியாரம் செய்தேன் நீங்க சொன்னது போல் மல்லி சட்னி உடன் ரொம்ப நல்லா இருந்தது மிக்க நன்றி

நஸ்ரின் கனி பாலக்கீரை குழிபணியாரம் நலல் இருந்ததா?

செய்து பார்த்துமறக்காமல் வந்து பின்னுட்டம் அளித்தமைக்கு ரொம்ப நன்றி.

Jaleelakamal