கலாட்டா கிச்சன் - அசத்தலான் பகுதி - 6

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

manjula arasu - 36
beevi - 43
malathi - 48

இவற்றில் இருந்து வரும் Jan 24ஆம் தேதி முதல் Jan 30 ஆம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

உங்கள் கணக்குகளை குறித்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல. முதல் நாளே அறிவித்து விட்டால் அடுத்த நாள் என்னென்ன செய்வது என்ற ஒரு ஐடியா கிடைக்கும்ல உங்களுக்கும்.

ஹாய் யாழி,கலாட்டா கிச்சன் தொடங்கியாச்சா?வாழ்த்துக்கள்.

கலாட்டா கிச்சனில் கலக்கவிருக்கும் அனைத்து தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.

இப்பகுதியை சிறப்பாக தொடங்கி,சிறப்பாக கொண்டு செல்லவிருக்கும் யாழிக்கும்,வனிக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்
நித்திலா

ஆரம்பிச்சாச்சு என்னோட ஃபேவரைட் கிச்சன் கலாட்டா ..இந்த முறையும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன் ...
யாழினி நலமா? முன்னதாகவே சொல்லிவிட்டீர்கள் யார் யாருடைய குறிப்பென்று இது ரொம்ப நல்ல யூஸ் ...வாழ்த்திய நித்திலாவுக்கும் என் நன்றி ..தோழிகள் அனைவரும் கலந்துக்கங்க வாங்க வாங்க ...

வாழு, வாழவிடு..

நானும் கலந்துக்கிறேன் குறிப்புகளை நோட் பண்ணியாச்சு.ரெடி,ஜூட்.

இன்றைய மெனு.
காலை ப்ரேக்ஃபாஸ்ட்

மஞ்சுளா அரசுவின் காரக்கொழுக்கட்டை, கத்தரிக்கா கொத்சு,
மூங்க்தால் லட்டு.

மதியம் லஞ்ச்

மஞ்சுளா அரசுவின் வாழைக்கா பொடிமாஸ், மைசூர் ரசம்.
டின்னர்

மஞ்சுளா அரசுவின் கோதுமை இடியாப்பம், புளி,மிளகா தொக்கு.

என்ன விட்டுட்டே வந்துட்டீங்களே.....;(

ஆமா, ஆமா நானும் களத்துல குதிச்சிட்டேன்;-)

கோமு ஜெட் வேகத்துல இறங்கிட்டீங்க;)

ரீம், ருக்‌ஷானா வாங்க வாங்க இந்த தடவை போட்டி பலமா இருக்க வாழ்த்துகக்ள். வீட்டுக்காரங்களப் பத்தி யெல்லாம் கவலைப் படாதீங்க. இந்த வாரம் கண்டிப்பா வெயிட் ஏறத்தான் போகுது அடுத்த வாரம் நம்ம சமையல சாப்பிட வைச்சு கம்மி பண்ணிடலாம்;-)

Don't Worry Be Happy.

அழகா ரிப்பன் கட் பண்ணி ஆரம்பிச்சு வச்சுட்டீங்களே நன்றி நன்றி;-)

Don't Worry Be Happy.

அட்டகாசமான மெனு கொடுத்திருக்கீங்க. இலைய போட்டீங்கன்னா சாப்பிட்டு போயிடலாம் போல இருக்கு மெனு

அன்புடன்
THAVAM

இன்று என் மெனு,மஞ்சுளா==மைசூர் ரசம்,வாழைக்காய் பொடிமாஸ்,வெங்காயத்தாள் கூட்டு,கேரட்கீர்.
வனி,எங்க ஆளையே காணோம்???

சாரி இரண்டு முறை பதிவாகிவிட்டது

என் இன்றைய சமையல் ..மாலதியின் ----வெந்தயகுழம்பு.பீவியின் --- மல்லிதுவையல் மஞ்சுளாவின் ---ரவாலாடு ...இரவு செய்தால் பதிவிடுகிறேன் ..
வாங்க ஜெயா .நீங்களும் செய்து அசத்துங்க நன்றி..

வாழு, வாழவிடு..

மேலும் சில பதிவுகள்