கல்வி கடன் பற்றிய விவரம் தேவை

என் மகன் BE முதல் வருடம் படிக்கிறான் தெரிந்தவரிடம் கடன் வாங்கித்தான் படிக்க வைக்கிறேன் . என் கணவர் இறந்துவிட்டார். நான் சம்பாதிப்பது எங்கள் தேவைக்கே சரியாக உள்ளது .டிரஸ்ட் மூலம் படிக்க வைக்கலாம் என்றால் அதை பற்றி சரியாக தெரியாது . ப்ளீஸ் தோழிகளே என்னை உங்கள் சகோதரியாக நினைத்து உங்களுக்கு தெரிந்த டிரஸ்ட் பற்றி விபரம் சொல்லுங்கள் என் மகனின் படிப்பிற்கு உதவி செய்யுங்கள் . நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டவளாக இருப்பேன்

நீங்க தாரளமாக பாங்கில் லோன் பெற்று உங்க மகனை படிக்க வைக்கலாம். இப்ப எல்லா பாங்க்ளையும் கல்விக்கு லோன் தராங்க. அதை அப்ளை பண்ணுங்க. உங்க மகன் படிப்பை பேங்க் பாத்துக்கும். இதுக்கு, உங்க மகனுடைய சர்டிபிகட் மட்டும் தான் தரனும்.....வேற detail வேணும்ன்ன கேளுங்க..
உங்களது தலைப்ப மாத்துங்க, "கல்வி கடன் பற்றிய விவரம் தேவை" இப்படி ஏதாவது வெச்சா, நம்ம தோழிகள் பதில் போடா ஈஸி ஹ இருக்கும்.
*********************
தலைப்பை மாத்துனது க்கு நன்றி, உங்களுக்கு பேங்க் லோன் பத்தி என்ன சந்தேகம்.. கேளுங்க, எனக்கு தெருஞ்சத நான் சொல்றேன்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ரொம்ப நன்றி சுகந்தி எந்த வங்கியில் தருவார்கள் என்று விவரம் தேவை குறிபிட்ட வாங்கி என்றால் போய் விசாரிக்கலாம். நான் தான் போகணும் வேலையும் பார்த்துகொண்டு வங்கி பற்றியும் விசாரிக்க முடிய வில்லை எனக்கு உதவ என் குடும்பத்தில் யாருமில்லை ப்ளீஸ் உதவுங்கள்

அன்புத்தோழியே
இந்த முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்

Agaram Foundation
29,Vijay Enclave Krishna Street,
T.Nagar, Chennai - 600 017
Tamil Nadu, India.

Telephone : +91 44 4350 6361
Mobile : +91 98418 91000
Email : info@agaram.in

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரொம்ப நன்றி மா நான் இந்த முகவரிக்கு தொடர்பு கொண்டு பேசுகிறேன்

ஹாய் பானு நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க. நீங்க ஏதாவது பேங்கல கல்விக்கடன் கேட்டு விசாரிச்சு இருக்கீங்களா. உங்க ஊரில் பக்கத்துல உள்ள வங்கியில் முதலில் விசாரியுங்கள். கண்டிப்பாக லோன் கிடைக்கும். எனக்கு தெரிந்தவர்கள் கனரா பேங்க், சிண்டிக்கேட் பேங்கில் கல்விக்கடன் பெற்று பி. இ படிச்சுக்கிட்டு இருக்காங்க.

நமக்கு ஏரியாவுல இருக்குற பங்குல கடன் கேட்கணும் அரசுடமை வங்கியில் கடன் கிடைக்கும்.எனது உறவினர்கள் இந்தியன் வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள் .நீங்க அந்த வங்கி மனேஜரை பார்த்து நீங்கள் கேட்டால் .அதன் முழு விவரம் சொல்வார்கள்.
நீங்கள் உங்கள் மகனை விடோ கோட்டாவில் செர்த்திருகிரீர்கள .வங்கியில் கூட விடோ கோட்டா உண்டு என்று நினைகிநேறேன் .நீங்கள் வங்கி மனேஜரை பார்க்கும்போது இதை பற்றி கேட்கலாம்.யாரிடமும் கேட்பதற்கு கூச்சமோ கவலையோ படாதீர்கள் .நல்லபடியாகவே நடக்கும் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

உங்க ப்ரொபைலில் இளையான்குடி என்று இருக்கு,நீங்க அங்க தான் இருக்கீங்களா//கீழக்கரை சதக் காலேஜ் ட்ரஸ்ட்டில் நிறைய உதவி செய்றாங்க.நான் என் கணவரிடம் கேட்டு அந்த விவரங்கள் சொல்றேன்.
http://www.sit-india.org/scholarship.htmlஇதில் பாருங்க.

எனக்கு விவரங்கள் சொன்னதற்கு நன்றி சுகந்தி மஞ்சுளா அரசு வினோஜா அஸ்வதா ரீம்
நான் விடோ கோட்டாவில் சேர்க்கவில்லை வங்கி அதிகாரியிடம் கேட்டு பார்க்கிறேன் ரீம் நான் சென்னைல தான் இருக்கேன் என் பையன் படிப்பது மறைமலை நகர் கல்லூரியில்
டிரஸ்ட்ல
உதவி செய்வார்களா என்று உங்கள் கணவரிடம் கேட்டு சொல்லுங்கள் ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்