சீடீ வால்ஹேங்கிங் - 2

தேதி: January 25, 2011

5
Average: 4.5 (31 votes)

 

சீடீ - 7
ஃபெவிக்கால்
ப்ரஷ்
சம்கி தூள் - க்ரீன், பிங்க், ப்ளு, கோல்டு நிறங்கள்
ஃபேப்ரிக் பெயிண்ட் - க்ரீம் கலர்
சுவாமி படம் - ஒன்று
மெல்லிய ரிப்பன் லேஸ் - 15 செ.மீ
ஷைனிங் பேப்பர் - சிவப்பு நிறம்
க்ரீன் கலர் கிலிட்டர்ஸ்
மார்க்கர் - சிவப்புநிறம்

 

சீடீ வால்ஹேங்கிங் செய்வதற்கு அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கல்யாணப் பத்திரிகை அல்லது ஏதாவது ஒரு சுவாமி படங்களை எடுத்து சீடீ அளவிற்கு வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு சீடீயில் நறுக்கி வைத்திருக்கும் சுவாமி படங்களை ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
மற்ற ஆறு சீடீயிலும் க்ரீம் கலரைக் கொண்டு பெயிண்ட் செய்து காயவிடவும்.
ஷைனிங் பேப்பரை 6 சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இதனை சீடீயில் துளை இருக்கும் இடத்தில் அதன் ஓரங்கள் சுற்றி பெவிக்கால் தடவி நறுக்கிய ஷைனிங் பேப்பரை ஒட்டிக் கொள்ளவும்.
இப்போது சீடீயில் ஒட்டிய சுவாமி படத்தை நடுவில் வைத்து வலது, இடது பக்கத்தில் பெயிண்ட் செய்த சீடீயை வைத்து ஃபெவிக்கால் தடவி ஒட்டவும்.
மீதி நான்கு சீடீயையும் படத்தில் உள்ளது போல் மேலும், கீழும் ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
ஒவ்வொரு சீடீயிலும் துளை தெரியும் நடுவட்டத்தை மட்டும் சேர்த்தாற் போல் அகல் போன்று வரையவும்.
அகலின் உள்ளே ஃபெவிக்கால் தடவி பட்ஸ் கொண்டு சம்கி தூளை பரப்பிவிடவும். க்ரீன், பிங்க், ஃப்ளு நிற சம்கி தூளை எதிரெதிர் பக்கங்களில் கொடுக்கவும். சுடருக்கு கோல்டன் நிற சம்கி தூளை தூவிவிடவும்.
சீடீயின் ஒவ்வொரு ஓரத்திலும் மார்க்கரைக் கொண்டு சின்னச் சின்ன வளைவுகள் வரையவும். அதன் உள்ளேயும் சிறிய வளைவாக வரையவும். அதன் இடைவெளியில் க்ரீன் கலர் கிலிட்டர்ஸால் சின்ன புள்ளிகள் வைக்கவும்.
நன்றாகக் காய்ந்ததும் சீடீயை திருப்பி வைத்து மேலுள்ள முதல் இரண்டு சீடீயிலும் ஃபெவிக்கால் தடவி ரிப்பன் லேஸை ஒட்டி காயவிடவும்.
எளிதாக செய்யக்கூடிய சீடீ வால்ஹேங்கிங் தயார்.
அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் இந்த சீடீ வால்ஹேங்கிங் செய்முறையை வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வப்போது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வால்ஹேங்கிங் very nice mam

I love India

சூப்பர் மேம் கீழே தூக்கி போடுகிற பொருட்களை வைத்து எப்படி இப்படி அழகழகானவையாக மாற்ற உங்களால்தான் முடியும் சூப்பர் சூப்பர் நன்றி..

வாழு, வாழவிடு..

C.D.wall hangking very nice.keep it up.you are very great.with regards.g.gomathi.

ஹாய் செண்பகா நலமா....வால்ஹேங்கிங் ரொம்ப அழகா இருக்கு வாழ்த்துக்கள்...நவீனா குட்டியை கேட்டதாக சொல்லவும்...

How are you creating such a wonderful craft with waste material.

Really Superb.Great and keep it up.

Br,Padma

All is Well

very nice..

You are such a talented creator of beautiful, awesome crafts, that's for sure, your creativity is admirable.. Wow..!!! I 'm so jealous of your skills. :-)

"waste is not waste until you waste it"
You prove it. Great!

சூப்பர். வேஸ்டாகுற பொருளை ரொம்ப அழகான கலைபொருளா மாத்திடுரீங்க. ஹேட்ஸ் ஆப் . குட்டி பாப்பாவையும் வைத்துக்கொண்டு எப்படி தான் இதெல்லாம் செய்றீங்களோ. நல்ல திறமை உங்களுக்கு. வாழ்த்துகள்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஷர்மி, ருக்சானா, கோமதி, சுமதி, பத்மா, ப்ரியா, ஜீவிதா, பிருந்தா, மஞ்சுளா பாராட்டிய அனைவருக்கும் ரொம்ப நன்றி.

senbagababu

அடடே தூள் கிளப்பிடீங்க.. ரொம்ப அழகா இருக்கு. ஈஸி ஹ இருக்கு. உங்கள பாத்தா பொறாமையா இருக்கு....எவளோ விஷியம் தெருஞ்சு வெச்சு இருக்கீங்க!!!!!

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

hai
how r u. really superb. very nice.

சீடீ ஐடியா கலக்கல். உங்க வீடு மாதிரி இல்ல இங்க. ;(
இருக்கிற நாலு சுவர்ல எத்தனையைப் பண்ணி மாட்டுறது என்று யோசிக்கிறேன். ஹும்!

‍- இமா க்றிஸ்

unga cd wall hanger romba nice madam, ungaloda ella kaivinai porulkalum nan en vetla senji paratu vangi iruken....romba nalla iruku mam...pappa nalla irukala....

உங்களால் மட்டும் எப்படி முடித்து சுட்டு போட்டாலும் எனக்கு வரமாட்டுது எப்படி தோழி?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

romba alaga iruku

very cute kka

எப்படி இவ்ளோ அழகா பண்ண முடியுது.ரொம்ப அழக இருக்கு.பாப்பா பெயர் என்ன.என் விட்டில் நிறைய சி.டி இருக்கு.நான் முயற்சி செய்கிறேன்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

ஹாய் செண்பகா அக்கா எப்படி இருக்கீங்க?

சிடி வால்ஹேங்கிங் செய்து பார்த்தாச்சு, அன்பளிப்பாகவும் கொடுத்தாச்சு அழகா இருந்தது.

தாங்ஸ் யுவர் டிப்ஸ்க்கா.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Hai Senbaga mam,
your wall hanging is very nice.