பனீர் பக்கோடா

தேதி: January 27, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

பனீர் - கால் கிலோ
சோள மாவு - கால் கப்
கடலைமாவு - ஒரு கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கலர் பொடி - ஒரு பின்ச்
உப்பு - தேவைக்கு
சாட் மசாலா - தேவைக்கு
முட்டை - ஒன்று
மிளகு - ஒரு தேக்கரண்டி (இரண்டிரண்டாக பொடித்தது)
சீரகம் - கால் தேக்கரண்டி


 

பனீர் பக்கோடாவிற்கு அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைக்கவும். பனீரை வேண்டிய வடிவத்தில் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் கலந்து கட்டியில்லாமல் இட்லி மாவைவிட கொஞ்சம் கெட்டியான பதத்தில் கலந்து வைக்கவும்
அதில் நறுக்கி வைத்திருக்கும் பனீரை சேர்த்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.
வாணலியில் எண்ணெயை காயவைத்த பின்னர் ஓவ்வொரு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
பரிமாறும் போது சாட் மசாலாவை மேலே தூவவும். சுவையான பனீர் பக்கோடா ரெடி.

இது லக்னோவில் அதிகமாக கடைகளில் விற்கப்படும். மாலை நேர ஸ்நாக்ஸாகவும், குழம்புகளுக்கு பக்க உணவாகவும் வைத்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணாக்கும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சலாம் ஆமினா நலமா?
சூப்பர் பனீர் பக்கோடா.ஈசியாகவும்,வித்தியாசமான பகொடாவாகவும் உள்ளது.
பனீர் இதற்கு இங்கிலீஷ்இல் என்ன? இங்கு பனீர் என்றால் தெரியமாட்டேங்கிறது.
வாழ்த்துக்கள்...........

ஹசீன்

ரொம்ப நல்லா இருக்கு பார்க்க .செய்து பார்த்திட்டு சொல்றேன்.இன்னும் ரொம்ப நல்ல வித்யாசமான குறிப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

பனீர் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆமினா எனக்கும் தாங்க பக்கோடா ஒரு நாள் செய்து பார்க்கிறேன் வாழ்த்துக்கள்

வாழு, வாழவிடு..

நலமா இருக்கீங்களா.குடும்பத்தில் அனைவரும் நலமா. அருமையான,சுலபமான குறிப்பு.வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சந்தேகம் அம்மா நானும் இந்த மாதிரி சிக்கன்,காலிப்ளவர் fry செய்யும் போது மசாலா நல்லா ஒட்டாமல் பிரிந்து வருது.என்ன செய்யலாம்.உங்களுடையது நல்லா ஒட்டியுள்ளது.என்னுடையதில்லை என்ன தப்பு.

Expectation lead to Disappointment

மீனாள்

போயும் போயும் ஆமியை அம்மானு சொல்லிட்டிங்களே.. எனக்கு தெரிஞ்சு அறுசுவையிலேயே குட்டி பொண்ணு இவங்க தான்.. இவங்க பிறந்த வருஷம் 1989.. ;).. சும்மா விளையாட்டுக்கு கூப்பிட்டு இருந்தா நான் சொன்னதை கண்டுக்க வேண்டாம்.. இல்லைனா நீங்க தெரிஞ்சிக்க சொன்னேன். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ரம்யா ரொம்ப தாங்ஸ்பா.நிஜமா எனக்கு தெரியாது.ஏதோ சிலவற்றில் அமினா அம்மா என்று போட்டிருந்தது மாதிரி ஞாபகம். நங்கள் சொல்லவில்லை என்றால் தெரியாது.அமினாவிடமும் மன்னிப்பு கேட்டுகிறேன்.i am sorry amina.

Expectation lead to Disappointment

மீனாள்

ச்சே ச்சே
அதெல்லாம் ஆமி கண்டுக்க மாட்டாங்க நீங்க கவலைப்பட வேண்டாம். மன்னிப்பு..தேங்கஸ் கூட வேண்டாம்.. நம்மையும் அறுசுவையில ஒருத்தர் அம்மானு கூப்படறாங்களேனு அந்த புள்ள சந்தோசம் தான் படும் ;) இல்ல ஆமி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வஸ்ஸலாம்
அல்ஹம்துலில்லாஹ்... நலம் பா ;)
செய்து பார்த்துட்டு சொல்லுங்க (பனீர்க்கு ஆங்கிலத்துல என்னன்னு ரம்யா வந்து சொல்லுவாங்க ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மிக்க நன்றி அஸ்வதா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ரொம்ப நலம் மீனாள்

நீங்க சொன்னத கவனிக்கவே இல்ல. ரம்யா சொன்ன பிறகு தான் கவனிச்சேன்

//அம்மா நானும் இந்த மாதிரி சிக்கன்,காலிப்ளவர் fry செய்யும் போது மசாலா நல்லா ஒட்டாமல் பிரிந்து வருது.என்ன செய்யலாம்.உங்களுடையது நல்லா ஒட்டியுள்ளது.// இதை நானும் அம்மாவும் னு படிச்சுட்டேன் ;) ஓக்கே விடுங்க...

மசாலா கொஞ்சம் கெட்டியா பினைஞ்சா உதிராது பா. நீங்க அசைவம்னு போட்டுருக்கு. சோ 1 முட்டை கலந்து போடுங்க. நீங்களே பிரிக்க நெனச்சாலும் பிரியாது

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எப்படி இருக்கிங்க?? ;)

நமக்கு இப்படியா பப்ளிசிட்டி குடுக்குறது? ;)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ருக்‌ஷானா அப்படியே எடுத்துக்கோங்க... சுட சுட இருக்கு ;)

மிக்க நன்றி மா. செய்து பார்த்துட்டு சொல்லுங்க

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல குறிப்பு,வாழ்த்துக்கள்.
ஹசீனா,இங்கிலிஷிலும் பனீர் தான்,இங்க AL KABEER PANEER CUBES
கிடைக்கும். PANDA,LULU HYPER MARKETIL பாருங்க

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா..,
ஆஹா... பார்க்கும் போதே இந்த மாலை நேரத்தில் சாப்பிட வேண்டும்போல் தோணுது.நிச்சயம் செய்து பார்ப்பேன்.விருப்பபட்டியலில் சேர்த்தாச்சு ஆமினா....
உங்க மெயில் ஐடி இன்னும் நான் வாங்கல...ப்ச்ச்....
சீக்கிரமே ஆமினாவை பிடிக்கணும்னு(மெயிலில்)நினைக்கிறேன்.முடியல....
சூப்பரான பனீர் பக்கோடாவை தந்ததற்க்கு நன்றி ஆமினா....
வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆமினா முந்திரி பக்கோடா மாதிரி பனீர் பக்கோடா நல்ல ரிச்சா இருக்கு. பார்ட்டிக்கு செஞ்சு அசத்தலாம் போல இருக்கு. நல்ல குறிப்பு தந்ததற்கு நன்றி.

ஆமினா... சுவையான குறிப்பு. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். செய்துட்டு சொல்றேன். வாழ்த்துக்கள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

@ரீம்
மிக்க நன்றி ரீம்

@அப்சராவ அலைக்கும் சலாம் வரஹ்..
மிக்க நன்றி அப்சரா
ரிஸ்வானாகிட்ட இருக்குமே வாங்கிக்கோங்க. இல்லைன்னா என் கடை பக்கம் வந்தா மெயில் ஐடி கொடுங்க. (கமென்ட் மாட்ரேஷன் இருக்கு. பப்ளீஸ் பண்ண மாட்டேன்).

@வினோஜா
மிக்க நன்றி பா

@வனிதாக்கா
மிக்க நன்றிக்கா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா