ப்ரெட் அல்வா

தேதி: January 30, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

1. ப்ரெட் துண்டு - 3
2. கோதுமை மாவு - 1/2 கப்
3. சர்க்கரை - 4 மேஜைக்கரண்டி
4. நெய், முந்திரி, திராட்சை - தேவைக்கு


 

ப்ரெட் துண்டுகளை பொடியாக நறுக்கி நெய்யில் சிவக்க வறுத்து எடுக்கவும்.
முந்திரி திராட்சை நெய்யில் வறுத்து எடுக்கவும்.
கோதுமை மாவையும் நெய்யில் வறுத்து அதில் ப்ரெட் துண்டுகள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதில் சர்க்கரை சேர்த்து பிரட்டி, கொஞ்சம் சூடான நீர் சேர்த்து ப்ரெட் துண்டுகள் மாவுடன் கலந்து அல்வா பதம் வந்ததும் எடுக்கவும்.
கடைசியாக வறுத்த முந்திரி திராட்சை கலந்து விடவும்.


விரும்பினால் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் வனி நானும் ப்ரட் ஹல்வா செய்துள்ளேன்.
ஆனால் உங்கள் செய்முறையில் கோதுமை சேர்த்து செய்திருப்பது வித்தியாசமாக உள்ளது.நல்ல குறிப்பு...
வாழ்த்துக்கள் வனி...

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

அப்சரா... மிக்க நன்றி. சுவையாக இருக்கும் கோதுமை சேர்த்தால். மைதாவும் சேர்க்கலாம். செய்து பாருங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

It came as very hard.Do we add more water when we adding wheat in this?

ரதி... ரொம்ப சாரிங்க, ஏன் கெட்டியா வந்ததுன்னு தெரியல. இது ரொம்ப சாப்ட்டா இருக்கும். நீங்க சூடான நீர் தானே சேர்த்தீங்க?? நீரும், நெய்யும் குறைவா சேர்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு இதுவரை கெட்டியா வந்ததில்லை. ட்ரை பண்ணி பாருங்க. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க. நான் அடுத்த முறை செய்யும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து அனுப்பறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi vani akka,

can i cal akka? i made this bread halwa. first time, its not bad. but my kid like this. so next time i il make it a good bread halwa.

thank you;
so much....

Anbudan Kanchana Raja

and one more thing,

i could not make a good muttai kulambu till now. my hubby said, plz dont try this n serve me again. what is the prob? dont know?

help me....

Anbudan Kanchana Raja

அன்பு காஞ்சனா... செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. அடுத்த முறை செய்து எப்படி வந்தது என்று சொல்லுங்கள். முட்டை குழம்பு எப்படி செய்தீர்கள்? என்ன குறிப்பு? நம் அறுசுவையில் நிறைய இருக்கே, முயற்சி செய்தீர்களா? நன்றாக வருமே. என்ன பிரெச்சனை என்று சொல்லுங்கள், சரி செய்துடலாம். :) அக்கா'னே கூப்பிடுங்க. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hello akka, eppadi irukinga? romba nall achu, intha pakkam etti paathu.
enaku oru help venum...
en paiyanuku intha masathoda 2years complete akuthu. but aala paartha olliya irukaan. sariya saapida matenguran. rice, dal, idly, dosa, pongal ethuvume pudika matenguthu. nalla thaan saapiturundaan, ippa one montha romba kastama iruku entha food me saapidala, oru suthu ellaichutaan. enga U.S la sariya saapidala nu, india kootitu poi, en co sister pasanka loda, mingle saapadu ootinaa, apavum saapidala. enna seiyaruthune theriyala, doctor avanuku enna pudikutho athu mattum koduganu sollitanga, so anytime sapathi mattum thaan saapiduraan. plz help pannuga.

Anbudan Kanchana Raja