ஜோதிடம்/நியூமாரலாஜி அறிந்தவர்கள் ப்ளீஸ் உதவுங்கள்

அனைவருக்கும் வணக்கம் மற்றும் நன்றிகள்,

எங்களுக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி அறிந்த ஒன்று...மேலும் நம் அறுசுவை அன்பர்கள் மூலமாக கிடைத்த பெயர்களில் ஆறு பெயரை( கீழே பார்க்கவும்) தேர்ந்து எடுத்தோம். அந்த பெயர்கள் நியூமாரலாஜி படிதான் வைக்க வேண்டும் தற்பொழுது பெரியவர்கள் சொல்கிறார்கள் ... பிறந்த நாளும், நேரமும்,நியூமாரலாஜி எண்ணும் மற்றும் நாம் வைக்கும் பெயரில் சார்ந்து இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்...அது என்ன நியூமாரலாஜி எண்... அதை எப்படி நம் வைக்கும் பெயரில் இணைப்பது... ஜோதிடம்/நியூமாரலாஜி அறிந்தவர்கள் ப்ளீஸ் எங்களுக்கு உதவுங்கள்.

1.நேத்ரா ஸ்ரீ
2.நிவாஷினி
3.நேஹா ஸ்ரீ
4.நந்தனா ஸ்ரீ
5.நிதர்சனா ஸ்ரீ
6.நேஹரக்ஷிதா

என் பாப்பு குட்டி பிறந்த நாள் ௦01/01/2011,

பிறந்த நேரம் காலை 08:29,

பிறந்த இடம் மதுரை,திருநகர்...

வேறு தகவல் வேண்டும் என்றால் நாங்கள் தருகிறோம்....

வாழ்க வளமுடன்,

செல்லா-குமார்

ஹாய்

குட்டி பாப்பா :-) குட்.

குழந்தையின் பெயர் இறைவனின் பெயரில் இருந்தால் எந்த யாலஜியும் தேவை இல்லை.

இந்த தளம் சென்று பாருங்க

http://vediceye.blogspot.com/2008/12/blog-post_06.html

மேலும் சில பதிவுகள்