தயவுசெய்து சொல்லுங்கள்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம் ....நான் 8 மாத கர்ப்பமாக இருக்கறேன் ...எனக்கு விலா எலும்பு ல ரொம்ப வலி ...படுக்கவே முடில ..நடக்க கூட முடில ...இப்போ 4 நாட்களா வாக்கிங் கூட நான் போகல..டாக்டர் மாத்திரை ஏதும் போடா வேணாம் னு சொல்லிட்டாங்க...volini gel போட சொன்னாங்க ...சுடு தண்ணீர் வைத்து வலிக்கற இடத்தில ஊத்த சொன்னாங்க ....
ஆனால் பலன் இல்ல ...ரொம்ப வலி யா இருக்கு ....வீட்டு வேலை கூட பாக்க முடில ....இந்த வலி க்கு நான் என்ன பண்ணுனா சரி ஆகும் ...தயவுசெய்து சொல்லுங்கள்..

அத பத்தி எனக்கு தெரியாது பொருங்க அனுபவ தோழிகள் வந்து பதில் சொல்வாங்க தோழிஸ் வாங்கோ உங்க பதிலை அள்ளீ கொடுங்கோ

அன்புடன்
ஸ்ரீ

enaku help pana yarume ilaya?plz say frnds..

Hope is necessary in every condition:)

உங்களுக்கு எட்டு மாதம் ஆகி விட்டது இல்லையா.. இது போன்ற வலி வருவது இயல்பு தான்... உங்கள் விலா எலும்பு விருட்சி அடைவதே இதற்கு காரணம்.. எங்க பாட்டி சொல்வாங்க வலிய தாங்குரவ தான் பிள்ளைய பெத்துக்க முடியும்னு... நீங்க பயபடாதிங்க பா.. மாதம் நெருங்குவதால் எல்லா வலிகளும் உச்ச கட்டத்தை அடையும்... வேற வழியே இல்ல வலிய பொறுத்துட்டு தான் ஆக வேண்டும்...

உடல் பொறுக்கும் சூட்டில் வெந்நீர் வைத்து தினமும் காலை மாலை என உடலில் ஊற்றுங்கள்.

சாதம் வடித்த கஞ்சியில் வெண்ணை போட்டு தினம் காலையில் குடியுங்கள்.. (இது சுக பிரசவத்துக்கு உதவும்)

சீரகத்தை நன்கு வறுத்து அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு டம்ளராக வைத்த விட்டு தினமும் குடிக்கவும்..

பயபடாமல் இருங்க.. சுக பிரசவம் ஆக வாழ்த்துக்கள்...

நீங்க மூணு நாளா கஷ்டப்பட்டுட்டு பதில் எதிர்பாகுறதுக்கு பதிலா மீண்டும் மருத்துவரை பார்கலாமல்லவா ????

naan doctor kita keten..volini gel matum poda sonaga...vera entha tablet um intha time la kuduka matagalam....

Hope is necessary in every condition:)

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,தீபா சொன்ன மாதிரி சாதம் கொதித்து கொண்டிருக்கும் போது அந்த கஞ்சியை எடுத்து பனங்கற்கண்டு,வெண்ணை சேர்த்து குடிங்க,அப்புறம் சிறிதளவு அரிசி(புழுங்கல்),வெந்தயமும் சேர்த்து கஞ்சி மாதிரி வச்சு குடிங்க,உடல் சூட்டை தனிக்கும்னு சொல்வாங்க,வலிக்கு ஏதோ கஷாயம் இருக்குன்னு நினைக்கிறேன்,,என் அக்காவிடம் கேட்டு சொல்கிறேன்! உங்கள் பிரசவம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள்.

தோழி ரேகா, தாயாகப்போகும் உங்களை வாழ்த்துகிறேன். இந்த சமயத்தில் அப்படித்தான் இருக்கும். நீங்க எந்த வலிநிவாரணி மருந்தையும் எடுக்க வேண்டாம். மேலே நம் தோழி சொன்னது போல காலையும், மாலையும் வெந்நீரை ஊற்றுங்கள். பிரசவம் வரை அப்படித்தான் இருக்கும். பெண்களால் தாங்கமுடியாத வலி என்று எதுவும் கிடையாது. பிரசவம் என்பது பெண்ணுக்கு மறுபிறவி போன்றது. நம் உயிர் கொடுத்து மற்றொரு உயிரை இந்த உலகத்திற்கு தருகிறோம். அந்த வலியையே நாம் தாங்கும் போது. இதெல்லாம் ஒரு வலியே இல்லை அன்பு தோழியே :)நான் என் முதல் பிரசவத்தில் இரண்டு குழந்தைகளை சுமந்திருந்தேன். இரண்டு குழந்தைகள் மற்றும் தண்ணீரின் அளவோடு சேர்த்து எட்டு கிலோ. கொஞ்சம் யோசித்து பாருங்கள் என் நிலையை. நான் பெருமைக்காக சொல்வதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நான் கர்ப்பமாக இருந்த போது என்னைப் பார்த்து பரிதாபப்படாதவர்கள் குறைவு என்பேன். ஆனால், அந்த சமயத்தில் எனக்கு ஏற்பட்ட உடல் சிரமங்கள் எனக்கு சிரமங்களாகவே தெரியவில்லை. கடைசி 8ம் 9ம் மாதங்கள் என் நிலைமை மிகவும் மோசம். நடப்பது போல தான் தெரியும் ஆனால் நின்ற இடத்தில் தான் நின்றிருப்பேன். காலை எடுத்து வைப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கும். தூங்கும் பொழுது ஒருபுறம் படுத்து மறுபுறம் திரும்பும்போது தொடை எலும்புகளில் ரத்தம் கட்டிக்கொண்டு வலி உயிர் போகும். ஒவ்வொரு முறை படுத்து எழும்போதும் இதே நிலைதான். இதற்காக நான் வெந்நீர் குளியல் கூட எடுத்துக் கொண்டதில்லை. பிரசவம் வரை இந்த சுமைகளை சுகமாக ஏற்று ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு பொக்கிஷங்களை ஈன்றெடுத்தேன். அந்த குழந்தைகளை பார்த்தபிறகு பட்ட வலிகள் எல்லாம் போயே போச்சு. ஆகவே தோழியே பிரசவ காலத்தை சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்ளுங்கள். வலியிலிருந்து விடுபட மனதை உங்களுக்கு பிடித்த மற்ற விஷயங்களில் ஈடுபடுத்துங்கள். அழகான பாப்பா படங்களை சுவரில் மாட்டி வைத்து அதன் அழகில் உங்கள் வலிகளுக்கு விடைகொடுங்கள். இன்னும் ஒன்றரை மாதத்தில் அழகான குட்டி இளவரசனோ, இளவரசியோ உங்கள் கைகளில் தவழ போகிறார்கள். அந்த சந்தோஷத்தை எப்படி கொண்டாட போகிறீர்கள் என்று திட்டமிட தொடங்குங்கள்.சுகபிரசவமாக மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு தாயாக போகும்உங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.பெண்மையின் நிறைவே தாய்மைதானே.இறைவனிடம் பிராத்தியுங்கள்.நன்றி கூறுங்கள்.நம் தோழிகள் நல்லநல்ல குறிப்புகள் தந்துயுள்ளார்கள் அதன்படி செய்யுங்கள். அன்பு செல்லத்தை நினைத்துகொண்டு அதன் அசையுகளை ரசித்து கொண்டுயிருங்கள் வலியே தெரியாது

நினைப்பவை எல்லாம் நல்லவையானல்
நடப்பவை அனைத்தும் நன்மையாகும்

romba thanks frnds...ipo enaku pain kammi ahiruchu...continous a hot water,gel elam poten...ipo parava ila...thanks a lot..enaku first delivery...and pray for me also...

Hope is necessary in every condition:)

உங்கள்கு பயம் வேண்டாம்........... எல்லாம் நல்லதா நடக்கும்........... பெண்கள்கு அதிகம் தையிரியம் இருக்கும் ............ குழந்தை நல்ல படிய பிறக்கும்................ இள்ளவரசன், இள்ளவரசி பிறக்க வாழ்த்துக்கள் ரேகா ............. நம்ம தோழிகள் சொன்னத செய்ங்க ரேகா .............

மேலும் சில பதிவுகள்