கீ குக்கீஸ்

தேதி: February 1, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

மைதா மாவு - 2 டம்ளர்
நெய் - 100 கிராம்
சீனி - அரை டம்ளர்
உப்பு - அரை மேசைக்கரண்டி
திக்காக பிழிந்த தேங்காய் பால் - 3/4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

கீ குக்கீஸ் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்
மைதா, சீனி, உப்பு, நெய் அனைத்தையும் சேர்த்து கிளறவும். அதனுடன் தேங்காய் பாலை சிறிது சிறிதாக சேர்த்து சற்று இறுக்கமாக பிசையவும்.
பின் மாவை வளத்து வேண்டிய வடிவங்களில் கட் செய்துக் கொள்ளவும்.
வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் கட் செய்து வைத்துள்ள குக்கீஸ் துண்டுகளை போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
சுவையான இன்ஸ்டன்ட் கீ குக்கீஸ் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்லா இருக்குபா.வித்யாசமா இருக்கு ...செய்துபார்கனும்....இதுபோல அருமையான குறிப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள் .

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

வாழ்த்துக்கள்.குக்கீஸ் மிக வித்தியாசமான குறிப்பு கொடுத்து இருக்கீங்க. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.தேங்காய் பாலை அப்படியே ஊற்றி பிசையலாம் தானே.இல்லையென்றால் சிறிது சூடு படுத்த வேண்டுமா.குக்கீஸ் எத்தனை நாளைக்கு வைத்திருக்கலாம்.இன்னும் நிறைய குறிப்புகள் கொடுக்க என் வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

ஹாய் ஷாகியா,

ரொம்ப நல்ல இருக்கு..வாழ்த்துக்கள்.

(தேங்காய்பால் சேர்ப்பதினால்) அதிகநாள் வைத்து சாப்பிடலாமா?

நல்ல குறிப்பு.

ஹசீன்

நல்லா இருக்கு,ஷேப்ஸ் எல்லாம் பிள்ளைகளுக்கு பிடித்த மாதிரி பண்ணியிருக்கீங்க,வாழ்த்துக்கள்.

சூப்பர் பிஸ்கட்ஸ் க்ஷாகியா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் நான் செய்துகொடுக்கிறேன் என் குட்டிக்கு வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

மிகவும் எளிதான குறிப்பு. எண்ணையில் பொரிப்பதற்கு பதிலாக ஒவன் - ல் bake பண்ணலாமா?

God is good! All the time!

ஷஹியா சூப்பர் குறிப்பு வாழ்த்துக்கள்

ஹாய் ஷஹியா ரொம்ப அழகா செய்து இருக்கீங்க நீங்க கட் செய்து இருக்கும் வடிவங்கள் ரொம்ப அழகா இருக்கு

ரொம்ப அழகா இருக்கு...

எளீமையாவும் இருக்கு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஷாகியா... கியூட் குக்கீஸ். :) வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஷகியா சூப்பரா இருக்குப்பா எங்க ஊரிலும் இது செய்வாங்க.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் ம்ற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ..

Express Yourself .....

ஹாய் அஷ்வதா .. நிச்சயம் செய்து பாருங்கள் .. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மா ..!!!

Express Yourself .....

ஹாய் மீனாள் .. தேங்காய் பாலை அப்படியே ஊற்றலாம் .. சூடு படுத்த தேவையில்லை.. நிச்சயம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் .. விரைவில் செய்து கொடுங்கள் ..குறைந்த பட்சம் 15 நாட்களுக்கு வைத்து சாப்பிடலாம் உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மா ..!!!

Express Yourself .....

சலாம் ஹசீனா .. சீக்கிரம் கெடாது மா .. 15 நாட்கலுக்கு வைதுது சாப்பிடலாம் .. கெடாது ..சீக்கிரம் செய்துவிட்டு சொல்லுங்கள் .. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ..!!!

Express Yourself .....

சலாம் ருக்ஸானா மற்றும் ரீம் .. உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மா .. விரைவில் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ...

Express Yourself .....

ஹாய் நிலா .. நான் இதுவரை ஓவெனில் பேக் செய்து பார்த்ததில்லை மா .. நீங்கள் முயர்ச்சித்து பாருங்களேன், நன்றாக வரும் என்று நினைக்குறேன் ..!!!

Express Yourself .....

சலாம் ஹமீதம்மா .. உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா ..!!!

சலாம் நஸ்ரின் ... உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி .... விரைவில் செய்து பாருங்கள் ..!!!

Express Yourself .....

சலாம் ஆமினா .. உங்கள் கருதுக்கும் வழ்த்துக்கும் ரொம்ப நன்றி மா ..!!

ஹாய் வனிதா அக்கா .. உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி ..!!

Express Yourself .....

சலாம் ஃபெரோஸா .. நலமா ..?? உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி மா ..!!!

Express Yourself .....

உங்களது பதிலுக்கு மிக்க நன்றி. முயற்சி செய்து பார்க்கிரேன்.

God is good! All the time!

ஷக்கியா சூப்பர் டி.........