தேதி: February 1, 2011
மெகந்தி கோன்
கையின் பின்புறத்தில் மணிக்கட்டுக் கீழ் "v" வடிவில் இரட்டைக்கோடுகளாக வரையவும். சற்று இடைவெளிவிட்டு இதேப்போல் வரைந்துக் கொள்ளவும்.

உள்ளங்கை, விரல்களுக்கு படத்தில் உள்ளது போல் பாகங்களாக பிரித்து வரையவும்.

வரைந்த வளைவுகளில் உள்ள இடைவெளி முழுவதும் அதன் நடுவில் இரட்டைக்கோடு போல் வரைந்து அதன் இருப்புறங்களிலும் சின்ன சின்ன இலைகள் போல் வரைந்து முடிக்கவும்.

பிரித்த பாகங்களுக்கு நடுவில் சிறிய அரை வட்டம் வரைந்து அதை நிரப்பிக் கொள்ளவும். அதன் இடைவெளிவிட்டு மூன்று அரை வட்டம் வரைந்துக் கொள்ளவும். ஒன்றில் வளைவுவளைவாக வரையவும். மற்றொன்றில் இலை போன்று வரைந்துக் கொள்ளவும். கடைசியாக உள்ள வட்டத்தில் சின்ன சின்ன கோடுகள் வரைந்து நிரப்பவும்.

மேலே வரைந்த டிசைனை கைமுழுவதும் உள்ள இடைவெளியில் வரைந்துக் கொள்ளவும்.

பாகங்களாக பிரித்து நடுவில் வரைந்த டிசைனை விரல்கள் பகுதியில் உள்ள இடைவெளியில் வரைந்துக் கொள்ளவும்.

இப்போது கைமுழுவதும் வரைந்த மருதாணியை இரண்டு மணி நேரத்திற்கு பிறகு எடுக்க வேண்டும்.

மிக சுலபமாக அனைவராலும் போடக்கூடிய டிசைன் இது.

Comments
சுகிமா !!!
ரொம்ப நல்லா இருக்கு .ஆனா எனக்குதான் கஷ்டமா இருக்கு !!!போட!!!!ப்ளீஸ்டா கஷ்டமா இல்லாத டிசைனா கொடுடா .....வாழ்த்துக்கள் அழகா இருக்கு பார்க்க ........நானும் போட்டு பாக்குறேன்.....
நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..
ஹாய் சுகி...
நல்லாருக்கியா? டிசைன் ரொம்ப அழகாருக்கு. முகப்புல பாத்தன்னவே நீயாதான் இருக்கும்னு நினைச்சேன் ஏன்னா முதல் டிசைன்ல இருந்த அதே பேக்ரவுண்ட். எனக்கு அது ரொம்ப பிடிச்ச கலர்... டிசைன் பாக்க ஈஸியாதான் தெரிது. போடனும்னு ஆசையாருக்கு. ட்ரை பன்னி பாத்துடறேன் கூடிய சீக்ரமே ஓகே...:)
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
சுகந்தி
என்ன என்ன சூப்பர் டிஸைன்ஸெல்லாம் போடுறீங்க ..அப்படியே கை காட்டுறேன் எனக்கும் போட்டு விடுங்க .. என்ன சரியா வாழ்த்துக்கள் சுகந்தி..
வாழு, வாழவிடு..
hi suganthi
how are you .this saturday i tried your mehandi desin -1.(29-01-11).it came out very well.thank you very much.this desin also super.keep it up. with regards.g.gomathi.
நன்றி
என் டிசைன் வெளியிட்ட அட்மின் குழுவிற்கு ரொம்ப நன்றி,
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
அஸ்வதா
இது ரொம்ப ஈஸி டா, நீ வீட்டுல ட்ரை பண்ணி பாரு. கண்டிப்பா வரும்....
//கஷ்டமா இல்லாத டிசைனா கொடுடா///// இந்த வார்த்தை சொல்லிட்டியே ?சரி விடு. அடுத்த டிசைன் ரொம்ப ரொம்ப ஈஸி ஹ தரேன் டா. இருந்தாலும் நீ இந்த டிசைன் போட்டு பாரு
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
லதா
எனக்கும் அந்த புல் background ரொம்ப பிடிக்கும் டா, அதான் அங்கேயே வெச்சு எடுக்கறேன். உங்க கைல போடலைனாலும், நிரஞ்சனக்கு போடுங்க...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
ருக்சனா
கண்டிப்பா நீங்க இந்தியா வரும் போது போட்டு விட்டுட்டா போய்டுச்சு.. வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மா
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
கோமதி
டிசைன் போட்டு பாத்தீங்களா? ரொம்ப சந்தோசம். உங்க வீட்டுக்காரர் என்ன சொன்னாரு? இந்த டிசைன் ஊம் போட்டு பாருங்க...உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
hi suganthi
how are you. my husband told me super,you are great.i say no this not my desin and show your desin in arusuvai blog.this creadit goes to you.thank you very much once again.i am enjoying my wedding aniversary with your desin.my kit also say super mom.her name pragathi.with regards.g.gomathi.
சுகி
சுகி
கலக்குறீங்க போங்க! வாழ்த்துக்கள்
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
அடடே கோமதி,
நான் ரொம்ப நல்லா இருக்கேன் மா,
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்படியே பழகுனா , நீங்களே சீக்கரம் ஒரு டிசைன் அறுசுவைக்கு அனுப்பிடலாம். பிரகதி குட்டி க்கும் போட்டு ட்ரை பண்ணி பாருங்க...நீங்க சொல்றத கேக்கரக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
மஞ்சுளா
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி.. நம்மனால இது தான் முடியுது....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகந்தி
சுகந்தி உங்களோட அடுத்த மெகந்தி டிசைனும் சூப்பர். வரைவதற்கு ஈசியா இருக்கு இந்த டிசைன் நல்ல க்ராண்ட்லுக்காவும் இருக்கு சுகி. வனியும், நீங்களும் மெகந்தி வரையறதுல எக்ஸ்பர்ட் தான். உங்களுடைய அடுத்த கைவினைக்காக படைப்புக்காக காத்திருக்கிறேன்.
suganthi
o.k. i will try to send arusuvai blog as soon as possible. i visit your cooking section also. really your multitalnt girl.keep it up. lucky person whoes to marry you.with regards.g.gomathi
வினோஜா
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி டா,
///சுகி. வனியும், நீங்களும் மெகந்தி வரையறதுல எக்ஸ்பர்ட் தான்./// --- என்னை விட வனி அக்கா தான் சூப்பர் மா, நீங்க இதை போட்டு பாருங்க, கண்டிப்பா அடுத்தது சீக்கரமே...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
கோமதி
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி... உங்க பதிவு பாத்து மேல பறக்கறேன், இருங்க எங்க ஆபீஸ் TL கீழ குதிக்க சொல்றாரு...நீங்க அரட்டைக்கு வரலாமே... அங்க நிறைய திறமையானவங்க ஒழுஞ்சுட்டு இருபாங்க....
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
suganthi
i say truth only.i am silent viewer in arusuvai blog.whenever you came i wll come to arattai.i accept there are so many talent members are there in arusuvai blog.now iam leaving.i will talk to u later. to pick up my daughter in school.with regards.g.gomathi.
சுகந்தி
சுகந்தி... ரொம்ப சுலபமான சூப்பரான டிசைன். கலக்கிட்டிங்க. கண்டிப்பா நான் இதை போட்டு உங்களுக்கு படமும் அனுப்பறேன். வாழ்த்துக்கள். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி,
ரொம்ப சந்தோசமா இருக்கு. நீங்க சீக்கரமா போட்டு பாத்துட்டு போட்டோ அனுப்புங்க. நான் வெயிட் பண்றேன்...
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகி ரொம்ப நல்லா இருக்கு, 2
சுகி ரொம்ப நல்லா இருக்கு, 2 நாளுக்குள் சிம்பிளா ஒரு டிசைன் கொடுப்பா
(திருமணம் வருகிறது)
வாழு இல்லை வாழவிடு
நன்றாக இருக்கிறது...
நன்றாக இருக்கிறது...
I love india
சுமி
உங்க வாழ்த்துக்கு நன்றி, எப்ப கல்யாணம்? நான் நாளைக்கு அனுப்புனா போதுமா?
கலா - பின்னூட்டத்துக்கு நன்றி
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
hi suganthi... im wannie from
hi suganthi...
im wannie from sarawak,malaysia...
naan unga henna designs-oda rasigai...
naanum ingga part time-huh henna poduren...atthula ungga design num irrukku...enoda friends ellarukkum athu pidichirukku...
ithaiyum try pandren...
i like to keep in touch with you...
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
சுகி கல்யாணம்
சுகி கல்யாணம் 13-2-2011ம்தேதி நீ சொல்லி கொடுப்பா, அதை என் அக்கா பொண்ணுக்கு போட்டுவிடவேண்டும். முன்ன டைப் பண்ணது உங்க அண்ணன்தான்.
வாழு இல்லை வாழவிடு
சுகந்தி மேடம்
கை நிரம்பின மாதிரி டிசைன், பிடிச்சிருக்கு சுகந்தி. அடுத்த விடுமுறைல பார்க்கலாம்.
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
இமா
இன்னைக்கு வளச்சு வளச்சு பதிவு போட்டுட்டு இருக்கீங்க... ஹ்ம்ம் கண்டிப்பா போட்டு பாத்துட்டு சொல்லுங்க.
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
nice design
nethu naan intha design-nai try pannen...
romba alaga irukkunnu ellarum sonnanga....ungallukku en valthukkal.
enakku kallukku podura mathari design venum...
please....
நண்பனே! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு..
நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானை இராதே!
gud design
romba nalla design... if u would have displayed this design on the same date of last year, i would have decorated my hand for my own marriage... i would have gone to parlour...... but still amazing design.....
Sukanya Muralidharan
இதுவும் கடந்து போகும்
hai suganthi
This is very grand design.you did your job is good,i will try the design for my sister marriage.keep going forward.Best wishes to you and your family
MISS.Suganthi unga mehanthi
MISS.Suganthi unga mehanthi designs ellam romba azhaga erukku.good&try it more to reach your destnatn.
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta