க்ளியர் history குடுத்து delete ஆன வெப் பேஜ் ஐ பார்க்க முடியுமா? தேவை இல்லாத வெப் sites ஐ எப்படி ப்ளொக் பண்ணுவது?
அன்புடன்
மனு
க்ளியர் history குடுத்து delete ஆன வெப் பேஜ் ஐ பார்க்க முடியுமா? தேவை இல்லாத வெப் sites ஐ எப்படி ப்ளொக் பண்ணுவது?
அன்புடன்
மனு
clear history
ஒருத்தரும் reply பண்ண மாட்டேன்கறீங்க. போங்க பா.
dont worry pa...paarkkave
dont worry pa...paarkkave mudiyaathu
என்றும் அன்புடன்.....
•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪
ctrl+shift+h
show all history
ctrl+shift+h
கண்டிப்பா முடியாது.... போயே
கண்டிப்பா முடியாது.... போயே போச்சு....
sona
மனு
மனு
உங்களுக்கு கொஞசமாவது அந்த சைட் பட்ரிய details தெரிந்திருக்கும். அதை google டைப் செய்தால் உங்கலால் ஓரலவிற்கு கண்டுபிடிக்க முடியும்.
Internet Explorer
"History" delete செய்த பின்பும் பார்க்க முடியும். அது அதான் "cookies". Tools/Internet Options/Settings/View Files
Order by "last viewed" இங்கே போய் பார்க்கவும்.
அப்படி "Cookies" இல்லை என்றாலும் இங்கே பார்க்கலாம்.
Windows Explorer ---->C:\Windows\History" and "C:\Windows\Temporary Internet Files". கிளியர் பண்ணிய பிறகு இதில் ஒன்றுமே இருக்காது ஆனால் files and folders மறைந்திருக்கும். அதை நீங்கள் DOS prompt லிருந்து பார்க்க முடியும். அதிலும் இந்த "Index.dat" பைலில் எல்லாமே இருக்கும்!
நீங்கள் Tools/Internet Options/security/restricted sites/sites இங்கே சென்று ப்ளாக் செய்யலாம்.
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
kumari.r, suni , Sona L,
kumari.r, suni , Sona L, ramyasrini ,Vr Scorp உங்கள் அனைவர்க்கும் நன்றி பா. அப்புறம் இன்னொரு டவுட். ctrl +h குடுத்து history items ஐ delete பண்ணினதும் இதே மாதிரி பார்க்கலாமா ?
எனக்கும் ஒரு டவுட் :)
யாராவது பதில் போடுவாங்கன்னு இதை மேலே கொண்டு வரேன்..... ;) ஏன்னா எனக்கும் ஒரு டவுட் :)
பயர்பாக்ஸ்ல எப்படி ப்லாக் பண்றது?
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா
Firefox ல் Web Site ஐ block செய்ய
Firefoxல் நாம் குறிப்பிட்ட வெப்சைட்டை ப்ளாக் செய்ய...
முதலில் இங்கே போகவும்
https://addons.mozilla.org/en-US/firefox/addon/blocksite/
போனவுடனே....
Continue to Download னு ஊதா நிறத்தில் ஒரு Button இருக்கும்
அதுல கிளிக் (Idathu க்ளிக்) பன்னுனால் அடுத்த பக்கம் போகும்....அந்த பக்கத்தில்
Contribute or Continue Add to Firefox னு இருக்கும்
இதுல உங்களுக்கு தாரளமனசு இருந்தா Contribut ஐ கிளிக் செய்து
ஒரு 5 Dollar ஐ நன்கொடை கொடுக்கலாம் தப்பில்லை :-)
அதுக்கு வேற ஆளப்பாருனு சொன்னாலும் யாரும் கோவிச்சுக்க மாட்டாங்க
அப்ப நீங்க அதை பன்னாமல்.....
அடுத்து உள்ள Add to Firefox ஐ கிளிக் செய்தால்
ஒரு பாக்ஸ் வரும் 5 second முடியும் வரை 5 செகண்ட் காத்திருக்கவும்
அதனைத்தொடர்ந்து வரும் Install Now என்பதன்மீது சொடுக்கவும்
சடுதி நேரத்தில் Install ஆகி முடிந்து ஒரு விண்டோ வரும் அதில்
"Resatar Firefox to complete changes" எனபதம் மீது கிளிக்குக
Firefox Close ஆகிவிட்டு மீண்டும் தானாகவே உயிர்த்தெழும்.
ஓகே இப்ப அந்த நமக்கு தேவையான ஒரு Add-on சேத்தாச்சு
இப்ப ஓபன் ஆகியுள்ள Firefoxன் மேல் வரிசையில்
File Edit History Bookmarks Tools Help இப்படி ஒரு அணி வகுப்பு இருக்கும் இல்லையா. இதுல Tools மேல கிளிக் செய்து வரும் Listல் Add-Ons ஐ கிளிக் செய்திடவும். அப்போது
அதுல நீங்கள் Add செய்துள்ள BlockSite 0.7.1.1 என்ற பட்டன் இருக்கும்.
(0.7.1.1 க்கு பதிலா வேற நம்பர் இருந்தாலும் கண்டுக்கவேண்டாம்)
அதை கிளிக்செய்தவுடன் ஒரு விண்டோ வரும் அதில என்னெல்லாமோ இருக்கும்
எதையும் கண்டுக்காதீங்க...அதுல Black List னு ஒன்னு இருக்கும் அதுக்கு கீழே
கலரா இல்லாமல் வெள்ளைக்கலர்ல ஒன்னுமே இல்லாம காலியா ஒரு இடம் இருக்கும் (அதாவது என் மனசு மாதிரி)
அதன் வலது புறம் பார்த்தால் "Add" னு இருக்கும் உடனே எந்திச்சு ஆடிரக்கூடாது அந்த Add பட்டன் மீது கிளிக் பன்னனும் கிளிக் செய்தவுடன்
ஒரு குட்டி அட்ரஸ் பார் வரும் அதில் மூடவேண்டிய சைட்டின் முகவரியை கொடுக்கவும்.அதாவது அந்த குட்டி அட்ரஸ் பார்ல
http://என ஏற்கனவே இருக்கும் அதனைத்தொடர்ந்து
நீங்க ப்ளாக் பன்னவேண்டிய வெப்சைட்டின் முகவரியை கொடுக்கவும்
For உதாரணம்: youtube Site block பன்ன வேண்டுமாயின்...
அந்த Add மீது சொடுக்கி வரும் அட்ரஸ் பாரில்
http://www.youtube.com என இருக்குமாறு டைப் செய்துவிட்டு
Ok கொடுத்ததும் அந்த குட்டி அட்ரஸ் பாரு மறைந்துவிடுமா..அதுக்கு அப்பறம்
அடுத்து உள்ள விண்டோவில் உள்ள OK யும் கிளிக் செய்துவிட்டால் வேலை முடிஞ்சுது.
Black List க்கு கீழே பாத்தால் நீங்க டைப்பிய அந்த வெப்சைட் அட்ரஸ் அதுல Add ஆகிருக்கும்
இப்ப நீங்க youtube site க்கு போகமுடியாது
மனசு மாறி திரும்ப youtube ஐ unblock செய்ய விரும்பினால்..
மேற்கூறிய அதே முறையில் மீண்டும் சென்று ..அந்த Blacklist கீழே
நீங்கள் முன்னதாக சேர்த்துள்ள அந்த வெப்சைட் முகவரியை கிளிக் செய்து,
வலது புறம் உள்ள "Remove" மீது கிளிக் செய்து,
அதற்கு கீழே கடைசியில் உள்ள OK பட்டன் மீது கிளிக் செய்து விட்டால்
அந்த சைட் Unblock ஆகிவிடும். மீண்டும் அந்த சைட்டுக்கு நீங்கள் போகமுடியும்.
அவ்வளவுதான்...
அப்பறம் இன்னொனு.....
இப்ப நீங்கள் Blcock செய்த அட்ரஸை யாரும் அங்கே போய் Unblock செய்துவிடக்கூடாதுனு விரும்பினால்..நீங்கள் அந்த சைட்டை Block List ல் சேர்க்கும் போது அதே விண்டோவில் பார்த்தீர்களானால் "Authentication" என இருக்கும், அதற்கு கீழே அதாவது ”Enable authenticatio” க்கு இடது புறம் உள்ள கட்டத்தில் கிளிக்செய்துகொண்டு ஒரு பாஸ்வேர்ட் கொடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து அந்த பாஸ்வேர்ட் டைப் செய்துதான்
அதை அந்த Blcoksite ஆப்ஷனுக்குள் போகமுடியும்....
புரியலேனா மீண்டும் கேட்கலாம்
அன்புடன்
ஆஷிக்
ஆஷிக்
இவ்வளவு வெலாவாரியா சொன்னா புரியாம மறுபடியும் கேட்டு மறுபடியும் கோரக்பூர் ப்ளாட்பார்ம் நீள பதிவு போட்டா? ;)) புரிஞ்சது..... புரிஞ்சது... மிக்க நன்றி
நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா