ஒரு லட்சம் ரூபாய்

அறுசுவை தோழிகளுக்கு வணக்கம்...

நான் கடந்த இரண்டு வருடமாக ஒரு லட்சம் ரூபாய் வரை சேமித்து உள்ளேன் ...என்ன வாங்கலாம்னு ஐடியா சொல்லுங்க...நான் வாடகை வீட்டில் தான் குடி இருக்கிறேன் .. ஒரு நான்கு மாதத்தில் சொந்த வீட்டிக்கு செல்லும் ஐடியா உள்ளது ... நான் த்ரெட்மில் வாங்கலாம்னு நினைக்கிறன் ...என் கணவர் கோல்ட் காயின் வாங்குன்னு சொல்றார்...நீங்க எதாவது ஐடியா சொல்லுங்கபா

கோல்ட் காயின் வாங்குங்களேன் அல்லது அதை பாலிசியில் போடுங்க

அது சரி எப்படி ஒரு லட்சம் சேமிச்சீங்கன்னு சொல்லி தாங்களேன்;-)

அது வா எனக்கு என் அப்பா epoo என்னை பாக்க வந்தாலும் 1000 ரூபாய் குடுப்பாங்க...அப்புறம் தீபாவளி பொங்கல்ன 5000 வரிசை குடுபாங்க..அப்புறம் என் பர்த்டே பாபா பர்த்டே பையன் birthdaynu நு ஒவ்வொண்ணுக்கும் அப்பா நேர்ல வந்து பைசா குடுத்து டிரஸ் எடுத்துக்க சொல்லி பணம் குடுப்பாங்க அப்படி குடுக்க குடுக்க நான் அதை சேர்க்க ஆரம்பிச்சேன் ..என் கணவர்கிட்ட மாதம் எனக்கு தனி செலவுக்குன்னு 1000 ரூபாய் குடுத்துடுவார் அதுல நான் பொட்டு அப்புறம் கிளிப்ஸ் இப்படி வாங்கிக்க நானே அவர்கிட கேட்டு வாங்கிடுவேன்... அப்புறம் ஊருக்கு போராவ்ப்ப என் அப்பா கண்டிப்பா பணம் குடுக்காம இருக்க மாட்டங்க..இட்ஹ்ல்லாம் இரண்டு வருஷம் முன் வரை செலவு செய்துடுவேன் சமிபமகதான் எனக்கு காசு சேர்க்கணும் என்கிற ஆசை வந்தது முதல்ல முடியாதுன்னு நினச்சேன் ...ஈன்ன நான் வேளைக்கு போகல வீட்லதான் இருக்கேன் ....அதும் இல்லாம sharemaarketla treading பண்ணுறேன் ........ முதல் முதல்ல 18,000 போட்டேன் பங்கு சந்தைல அதுக்கு லாபம் 12,000 கிடைச்சது அந்த லாபத்துல என் கணவருக்கு பிடிச்ச Sony Ericsson செல் போன் வாங்கிகுடுதேன்...

இபப்டி சேர்த்ததுதான் என்னால இவ்ளோதான் சேர்க்க முடிந்தது...

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

தோழி த்ரெட்மில் வேண்டாம். 50% கோல்ட் காய்ன், 25% FD, 25% நல்ல மியூச்சுவல் ஃபண்டில் போடலாம். த்ரெட்மில் வாங்கின வீடுகளில் அது தூங்குது. FDயும் சிட்டி யூனியன் பேங்கில் போடவும். 8.5% வட்டி கொடுக்குறாங்க.

Gr8.. invest as said by Priya

Suganthy

எனக்கு ஷேர் trading பண்ணனும்னு விருப்பம், ஆனால் அதை பற்றி abcd கூட தெரியாது.. ஷேர் மார்க்கெட்ல நுழைய என்ன ப்ரோசிஜர்..
புதியவர்கள் என்ன ஷேர், எது மாதிரி ஷேர்ல இன்வெஸ்ட் பண்ணலாம் அது பத்தி சொல்லுங்க பா...
இது பற்றி மற்ற தோழிகளுக்கு தெரிந்தாலும் எனக்கு சொல்லவும்...

வைர நகைகள் வாங்கும் முன் என்ன என்ன கவனிக்க வேண்டும் தெரிந்தவர்கள் சொல்லுங்க ப்ளீஸ்////

ஹாய் குமாரி நல்லாருக்கீங்களா? வாழ்த்துக்கள்பா முதல்ல உங்களுக்கு. செலவு செய்யக்குடுத்த பணத்தைல்லாம் சேமிச்சு லட்ச ரூபாய் சேர்த்துருக்கீங்களே? நல்லதுதான். நானும் அப்படித்தான் பட் உங்க அளவுக்கு பணம் சேராது. இருந்தாலும் சேத்து வெச்சு என் கணவர்க்கு தான் ஏதாச்சு வாங்கித்தருவேன். இப்ப கொஞ்சம் காசு சேத்து வெச்சுருக்கேன் அது வர்ர 14ம் தேதி காலியாய்ரும். ஹாஹாஹா வேலண்டைன்ஸ் டே வருதுல்ல.

ஓகே மேட்டர்க்கு வரேன். நீங்க ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பன்னி லாபம் கிடைச்சதைப்பத்தி சொல்லிருந்தீங்கல்லியா? நல்லது தான். நீங்க வீட்ல இருக்கறதாவும் சொல்லிருந்தீங்களே கம்னு அதையே பன்னுங்க. நிறைய வேணாம் நீங்க முதல்ல போட்ட அளவே இன்வெஸ்ட் பன்னி வர்ர லாபத்துல மட்டும் மறுபடியும் ஷேர்ஸ் வாங்கி ட்ரேட் பன்னுங்க அதான் சரியான வே. ஓகே. ஒரு லட்சம் ரெண்டு லட்சம் மூணு லட்சம் நாளு லட்சம்னு ஆக என் முதல் வாழ்த்துக்கள்பா...:)

மற்ற தோழிகளும் ட்ரேட் பன்னறதைப்பத்தி கேட்டுருந்தீங்களே? பங்குச்சந்தை பற்றி நிறைய ப்ளாக்ஸ் இருக்கு கூகுள்ள சர்ச் பன்னிப்பாருங்க. ஓரளவு மேலோட்டமா தெரிஞ்சுக்கிட்டீங்கன்னா கத்துக்கும் போது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இப்ப நிறைய கம்பெனிகள் ட்ரேடிங் கத்துக்குடுக்கறாங்க. உங்க ஊர்ல ட்ரேடிங் டீலர்ஸ்கிட்ட விசாரிச்சு பாருங்க. நானும் ஆன்லைன்ல கத்துக்கறதைப்பத்தி கேட்டு சொல்றேன். ஓகே... நல்லா தெரிஞ்சுகிட்டு ட்ரேடிங் பன்னுங்க ஏன்னா அரைகுறையா தெரிஞ்சுகிட்டு பன்னரது சுத்த வேஸ்ட் நம்ம காசுக்கு கேரண்டி இருக்காது அதான் சொல்றேன்.

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்...

மீண்டும் பேசலாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

குமாரி..

எப்படி செலவு செய்யனும்னு தெரியனும் தானே.. கம்முனு அறுசுவை தோழிகளுக்கு பிரித்து கொடுத்திருங்களேன்.. ;) சூப்பர் ஐடியா குடுத்ததால எனக்கு ஷேர் அதிகம்..;)

லேன்டில் போடலாம்.. கோல்டும் வாங்கலாம்.. இரண்டுமே நல்ல ஒரு அசட்ஸ் தான்.. கையில் மட்டும் வைத்திருக்க வேண்டாம்.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் தீபா, முதலில் trading account அண்ட் dp account ஓபன் பண்ணனும். அதுக்கு பான் கார்டு, போட்டோ, அட்ரஸ் ப்ரூப் அண்ட் பேங்க் அக்கௌன்ட் வேணும். இப்ப ரியாலிட்டி stocks நல்ல down ஆயி ரெகவர் ஆகுது. HDIL , DLF , IVRCLINFRA வாங்கி வைங்க. HDIL , DLF நல்லாவே ரெகவர் ஆயிருச்சு. IVRCLINFRA ட்ரை பண்ணுங்க. ஆல் தி பெஸ்ட்.

அன்புடன்

மனு

மேலும் சில பதிவுகள்