கட்டி வராமல் இருக்க

கட்டி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எனக்கு இரண்டு மூன்று முறை வந்துள்ளது , அது வராமல் தடுக்க ஏதாவது வழி உள்ளதா ? எதனால் கட்டிகள் வருகிறது ? தயவு செய்து உதவுங்கள் .......

உடலில் OILINESS (எண்ணைய் பிசுக்கு ) போன்ற அழுக்குகள் நிறைய சேர்ந்தாலும் ஒரு சிலருக்கு கட்டிகள் வரும் ...
சிலருக்கு உடல் உஷ்ணம் அதிகரித்தாலும் கட்டி வரும் ..
அவர்கள் நல்லெண்ணைய் தலைக்கு வைத்து ஊற வைத்து குளித்தால் உடல் உஷ்ணம் அடங்கி கட்டிகள் குறையும் ..
நீங்கள் முக கட்டியா என்பதை குறிப்பிடவில்லை .
முகத்தில் அல்லது உடலில் வேறெங்கோ கட்டி வந்தால் அங்கு சிறிது மஞ்சளும் ,சோப்பும் கலந்து கட்டியின் மேல் வைத்து வந்தீர்கள் என்றால் ,இருக்கும் கட்டி நன்கு பழுது உடைந்து விடும் ...
பின் மூன்று (அ)நான்கு நாட்கள் காலையில் நாம் எழுந்தவுடன் நாவில் வரும் உமிழ்நீரையும்(எச்சில் ) கட்டி ஏற்பட்ட இடத்தில் வைத்தால் அந்த கட்டி ஏற்பட்டு இருந்த கருமை நிறம் மாறும் ...
உடலுக்கு சூடு தரக் கூடிய தின்பண்டங்களை தவிர்த்தாலே கட்டிகளை தவிர்க்கலாம்

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மிக்க நன்றி பாரதி அவர்களே !!!!
எனக்கு இடது தொடையில் வந்துள்ளது. இனிமேல் கட்டி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ? சூடு தரக்கூடிய உணவுகளை உண்ணக்கூடாது அப்புறம் ? வேறு என்ன செய்தால் கட்டி வராமல் தடுக்கலாம் ???

என் அம்மா சொல்ல கேட்டிருக்கேன். கட்டி வந்த இடத்தில் கடுகை அரைத்து போடலாம்.

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால் ஏமாற்றம் குறைவாக இருக்கும்.

என்றும் அன்புடன்
கிருத்திகா

ஏங்க என்ன கட்டியது??உடம்பில் எங்க கட்டி தென்பட்டாலும் முதலில் மருத்துவரிடம் போய் சாதா கட்டி தானா இல்ல என்ன எதுன்னு தெரிஞ்சுக்கனும்.

மேலும் சில பதிவுகள்