pediasure

pediasure பற்றி சொல்லுங்களேன் அது தாய் பாலைவிட சிறந்ததா? என்ன

தாய்பாலை விட எந்த பொருளையும் யாரும் சிறப்பானதாக தயாரித்து விட முடியாது . pediasure fiber நிறைய உள்ளது .ப்ரோடீன் உள்ளது . dha இருக்கிறது .அது மூளைக்கும் கண்களுக்கும் சிறந்தது . இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் கொடுக்க வேண்டும் .

எனது சொந்த அனுபவத்தில் நானும் என் குழந்தைக்கு ஒரே ஒரு முறை வாங்கி கொடுத்திருக்கிறேன் . அதை காலையில் குடித்தால் டிபன் சாப்பிடமாட்டாள் . ஒரு மந்தமானதாக செய்கிறது . அதில் எனக்கு விருபமின்மையால் அதனை நிறுத்தி விட்டேன் . மற்றதை விட விலை சற்று அதிகம்.

தாய் பாலைவிட சிறந்ததா இருந்தா லேபிள்ள ௦௦0-10 வரை வயதுள்ள குழந்தைகளுக்கானதுன்னு குறிபிட்டிருப்பாங்களே;)
அது 1-10 வயது குழந்தைகளுக்கானது, அதனால் தாய்ப்பால்தான் சிறந்ததுன்னு தெரிஞ்சிக்கலாம்;-)

Don't Worry Be Happy.

பீடியாசூர் - தாய்பாலை விட சிறந்தது அல்ல. ஆனால் குழந்தைகளுக்கு தேவையான சத்து கிடைக்கும். 2 வயதுக்கு மேல் உள்ல குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சரியாக உணவு எடுக்காத குழந்தைகளுக்கு ஓரளவு எதிர்ப்பு சக்த்தி கிடைக்க் ஔதவும். ஆனால் இதுவும் உணவுக்கு பதிலாக கொடுத்தால் போதாது. உணவு கொடுத்து தினமும் 2 முறை இதை கொடுக்கலாம். ஆனால் அவர்கள் கொடுத்த கணக்குபடி கொடுத்தால் மந்தம் ஏற்படும். குறைவாகவே பாலில் சேர்த்து கொடுத்தால் உணவு சாப்பிடுவதில் பிரெச்சனை இருக்காது. அவர்கள் கொடுத்த அளவு போட்டு கலக்க விரும்பினால் நீரிலேயே கலப்பது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தண்ணிரில் தான் கலந்து குடுக்கணும்,பாலில் கலக்ககூடாது.சில குழந்தைகளை ஹைப்பர் ஆக்டிவாக மாற்றுது,என நிறைய பேர் சொல்லியிருக்காங்க.

என் மகனுக்கு இரண்டு வயத்தில் இருந்து நான் pediasure தான் கொடுக்கிறேன். தோழிகள் கூறியதை போன்று நானும் சற்று வெது வெது தண்ணீரில் தான் கலந்து கொடுக்கிறேன்.பவுடர் அளவு குறைத்து போட்டால் ஒன்றும் செய்யாது.ஆனால் தாய் பாலை விட எதுவும் சிறந்தது இல்லை.நாம் காலையிலும்,மாலையிலும் அருந்தும் காபி,டீ போல் குழந்தைகள் இரு வேளைகள் மட்டும் pediasure எடுத்து கொண்டால் நல்லது.சத்து அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் விலை அதிகம் தான்.குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக விலை அதிகம் கொடுப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.

Expectation lead to Disappointment

சரிபா இன்னும் விசயம் இருக்கானு காத்திருப்போமே,

சுமையா இப்படி ஒரு கேள்வியை யாருமே கேட்டிருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்..தாய்ப்பாலை விட சிறந்தது எதுவுமே இல்லை.உங்கள் குழந்தையின் ப்ரச்சனை என்ன சொன்னா எதாவது தீர்வு கிடைக்குமா பார்ப்போம்

pediasure complete (vanilla flavour)i given to my daugther 2 times per day.pediasure very helpful to maintain the weight.i prepare pediasure in warm water only.with regards.g.gomathi.

என் குழந்தைக்கு 1வயது 3மாதம் ஆகுது அவள் எடை8கிலோ தான் இருக்கா அவளுக்கு நான் fபீட் பன்னுரேன் ஒரு டாக்டர் தாய் பால் போதும் பீடியசூர் கோடுங்கனு சொல்றார் அதான் இப்படி கேட்டேன் நான் கேட்டது சரிதானா?

Now where are u live in india or abroad.i think in india pedia sure formula avialable for children 2 to 10 years only.i live in sharjah. here pediasure available for children 1 to 10 years.consider your baby age factor give some supplementary food , Breast milk.i started pediasure to my daugther 2 1/2 years only.with regards.g.gomathi.

மேலும் சில பதிவுகள்