கலாட்டா கிச்சன் - அசத்தலான் பகுதி - 7

புது உறுப்பினர்கள், புது குறிப்புகள்... புது தலைப்புடன் புது சமைத்து அசத்தலாம்.

தோழிகள் அனைவருடைய உதவியோடும், ஒத்துழைப்போடும் சென்ற வார சமைத்து அசத்தலாம் பகுதி மெகா வெற்றி கண்டது. இந்த முறையும் எல்லாருடைய ஒத்துழைப்பும் இருக்கும் என்ற நம்பிக்கையோடு... இதோ துவங்கிட்டோம். வாங்க வாங்க... வந்து சமைத்து அசத்துங்க.

"கூட்டாஞ்சோறு" பகுதியில் இருந்து இம்முறை நாம் சமைக்க இருக்கும் குறிப்புகள்:

Seethaalakshmi - 56
அதிரா - 50
amina mohammed - 57
appufar - 57

இவற்றில் இருந்து வரும் Feb 07ஆம் தேதி முதல் Feb 14அம் தேதி வரை சமைக்கும் குறிப்புகளை தினம் தினமும் யாருடைய குறிப்பு என்பதையும் சேர்த்து இங்கு குறிப்பிடுங்கள். குறைந்தது 2 குறிப்பாவது சமைக்க வேண்டும். அதிகபட்சம்.... எவ்வளவு விரும்பினாலும் செய்யலாம்... அதிகம் குறிப்புகள் சமைப்பவருக்கே வெற்றி மாலை.

விருப்பம் உள்ளவர்கள் குறிப்புகளை சமைக்கும்போது ஸ்டெப் ஸ்டெப்பாக படம் எடுத்து "யாரும் சமைக்கலாம்" பகுதிக்கு arusuvaiadmin @ gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். கடைசியாக சமைத்து முடித்ததும் ஒரு படமாக அனுப்ப வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறோம். அவற்றை இணைப்பதில் கஷ்டம் இருப்பதாக அட்மின் அறிவிப்பு.

இம்முறை நமது கணக்குபிள்ளை யாழினி.... செல்ல கொட்டு வாங்க தயாராக காத்திருக்கார். அவருக்கும், சமைக்க இருக்கும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் பல.

ஆரம்பிச்சுடோம்ல.... நம்ம கலாட்டாவ. இம்முறை 200 குறிப்புகளுக்கு மேல் இருக்கு, எல்லாரும் கலக்குங்க. இம்முறை நானும் கலக்குவேன். யாழினி எங்கே??? போன முறை காணாம போனாங்க, இன்னும் எங்கும் கண்ணில் படலயே... என்ன ஆச்சுன்னு யாருக்காது தெரியுமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா இன்னும் யார் பதிவையும் காணோம்!!! என்னாச்சு எல்லாருக்கும்??? அறுசுவை இத்தனை நாள் தூங்கலாமா??? வாங்கப்பா எல்லாரும். குறிப்பை கொடுத்தவங்களையே காணோமே!!! இன்று என் கணக்கு:

காலை இட்லிக்கு:

ஆமினாவின் - ஈசி தக்காளி சட்னி
சீதாலஷ்மியின் - இட்லி தக்காளி சாம்பார்

மதிய உணவுக்கு:

சீதாலஷ்மியின் - புடலங்காய் பொரியல், உருளைக்கிழங்கு புட்டு

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆஹா தொடங்கிவிட்டது சமையல் ஆடுகளம்.
வாழ்த்துக்கள் வனிதாக்கா..
ஆமா போனமுறை காணாமல் போன யாழினி இன்னும் வரலையா?
சீக்கிரம் வாங்க யாழினி..
என் கணக்கை சமைத்து முடித்துவிட்டு வந்து சொல்கிறேன்..சரியா வனிதாக்கா.

வாழு, வாழவிடு..

நான் நாளையிலிருந்து கலந்துக்கிறேன்.

ருக்சனா... வாங்க வாங்க. முதல் ஆளாய் வந்திருக்கீங்க, இந்தாங்க பில்டர் காபி. :) தெம்பா சமைங்க. ஆமாம் யாழினியை காணோம்... ;( கண்டு பிடிச்சு கூட்டிட்டு வாங்க ப்ளீஸ்.

ரீம்.... வாங்க வாங்க... இந்தாங்க பில்டர் காபி. அவசியம் நாளை வாங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலட்டா கிச்சன் தோழிகளுக்கு முதலில் ரொம்ப சாரி சொல்லிக்கறேன் வனிதாக்கா ரொம்ப ரொம்ப சாரிக்கா. வர முடியாத சூழ்நிலைகா அதை யாரிடமும் சொல்லி உங்களிடம் தெரிவிக்க கூட முடியலை. இங்க பேச வேண்டாம்னு நினைக்கிறேன். இனி கலட்டா கிச்சன் தடையில்லாமல் நடக்க நான் பொறுப்பு அக்கா.

யாழினி... வந்துட்டீங்களா??? ஒன்னும் பிரெச்சனை இல்லை, நீங்க நலம் தானே? நீங்க வந்ததே போதும் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதலில் சமைத்து அசத்தியது நீங்கதான் வனிதாக்கா.ஃபில்டர்காஃபி தந்தர்க்கு
தேங்க்ஸ் வனிதாக்கா.
யாழினி வந்துட்டிங்களா சந்தோசம் ..

என் கணக்கு ..திருமதி அதிராவின் ---மீன்குழம்பு..
ஆமினாமுஹம்மதின் ---ஆந்திராநூனேஓங்காய்.
சீத்தாம்மாவின் --நெய் விளங்காய்....
அப்சராவின் ---வாழைப்பழஅப்பம்..
சரியா கணக்கு..பாய்

வாழு, வாழவிடு..

ருக்சனா... சமைச்சு கொன்டு வந்தாச்சா??? கலக்குங்க. முதல் நாளே இத்தனை சமையலா?? சூப்பர். வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

யாழினி வந்துட்டேன் இனி நீங்க எல்லாரும் சீக்கிரம் சீக்கிரம் சமைத்து சொல்லுங்க நான் கணக்கை குறித்துக் கொண்டே இருக்கிறேன். 2 நாட்கள் ஆகிட்டு இன்னும் சூடு பிடிக்கலையே சீக்கிரம் வந்து எல்லாரும் கலக்குங்கபா. அனைவரும் வருக

மேலும் சில பதிவுகள்