உருளை பாயாசம்

தேதி: February 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (7 votes)

 

உருளைகிழங்கு - இரண்டு
பால் - ஒரு பெரிய கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் - இரண்டு
உப்பு - சிறிது
தாளிக்க:
நெய், முந்திரி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
பின்னர் எடுத்து தோல் நீக்கி வைக்கவும்.
மிக்சியில் தோல் நீக்கிய கிழங்கை போட்டு பாலை ஊற்றி ஒரு கப் தண்ணீரும் சேர்த்து நன்கு கூழ் போல் அடித்து வைக்கவும்.
ஒரு சட்டியில் சிறிது நெய் ஊற்றி அதில் அரைத்த கிழங்கு கூழை ஊற்றவும்.
அதை அடுப்பில் சிம்மில் வைத்து ஐந்து நிமிடம் கைவிடாமல் கிளறவும். பின்னர் சர்க்கரை, ஏலக்காய், உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கிளறவும்.
அடுத்து வேறு சட்டியில் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து இந்த கலவையில் கொட்டி அடுப்பை நிறுத்தவும்..
சூடான சுவையான உருளைக்கிழங்கு பாயாசம் ரெடி.

இது சாப்பிட்டு பார்த்தால் நல்ல டேஸ்டாக இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். உருளைக்கிழங்கின் வாசமே இந்த பாயாசத்தில் தெரியாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நான் ஏர்கனவே வனிதாக்கா குறிப்பு படி உருளை பாயாசம் செஞ்சுட்டு இருக்கேன்...

இதையும் செய்து பாக்குறேன்.. நன்றி குறிப்புக்கு

வாழ்த்துக்கள்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நல்ல இனிப்பான குறிப்பு தந்து இருக்கீங்க. இது வரைக்கும் பண்ணினது இல்ல, இனிமேல் கண்டிப்பா பண்ணி பாக்கறேன். விருப்ப பட்டியல்ல சேத்துட்டேன்...

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

அஸ்ஸலாமு அலைக்கும் ருக்சானா..,
சூப்பரான சுவையான உருளை பாயாசத்தை தந்துஇருக்கீங்க...?
ரொம்ப நல்லா இருக்கு... நாங்கள் கேரட்,ஜவ்வரிசி சேர்த்து தான் செய்து இருக்கோம்.... இது ரொம்ப நல்லா இருக்கின்றது....
முடிந்த போது செய்து பார்த்துவிட வேண்டியதுதான்....
வாழ்த்துக்கள் ருக்சானா....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நான் இது என் ப்ரண்டு வீட்டில் சாப்பிட்டு இருக்கேன்,அவங்க சொன்ன பிற்குதான் அது உ.கிழங்கு என்றே தெரிந்தது.நல்ல குறிப்பு .

ஹாய் தோழி ருக்சானா இந்த உருளை கிழங்கு பாயாசம் இப்பதான் கேள்வி படுரேன். கண்டிப்பா செய்து சாப்பிட்டு பாக்குரேன் வாழ்த்துக்கள்.....

உன்னை போல பிறரையும் நேசி.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு எனதன்பு நன்றிகள் நன்றி...

வாழு, வாழவிடு..

முதல் ஆளாய் வந்து வாழ்த்திய உங்கள் வாழ்த்துக்கு என் இனிய நன்றிகள்.
செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்..நன்றி

வாழு, வாழவிடு..

நன்றி சுகந்தி உங்கள் பதிவிர்க்கு...
நேரம் கிடைக்கும்போது செய்து பாருங்கள் ..சுவைக்கு நான் கியாரண்டி..நன்றி

வாழு, வாழவிடு..

அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா.. நலமா வீட்டில் அனைவரும்?
நன்றி அப்சரா உங்கள் வாழ்த்துக்கு இதன் சுவை நன்றாக இருக்கும்
முடிந்த போது செய்து பாருங்கள் ...
நன்றி அப்சரா உங்கள் வாழ்த்துக்கு ..

வாழு, வாழவிடு..

நன்றி ரீம் நீங்கள் சொல்வது சரிதான் இது உ.கிழங்கு பாயாசம்
என்று சாப்பிடும்போது சுத்தமாக தெரியாது..
நன்றி ரீம் உங்கள் பதிவிர்க்கு.....

வாழு, வாழவிடு..

ஹாய் ருக்சானா நலமா? பொண்ணு எப்படி இருக்கா? வித்தாயசமான,ஈஸியான பாயசம்.சூப்பர் பா.செய்து பார்க்கிறேன்.வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சந்தேகம் ருக்சானா நீங்கள் குறிப்பு அனுப்பி உடனே வெளி வருகிறதா இல்லை எத்தனை நாட்கள் ஆகிறது என்று சொல்வீர்களா.

Expectation lead to Disappointment

நன்றி தேவி உங்கள் வருகைக்கு
செய்து பாருங்கள் நல்ல டேஸ்டாக இருக்கும்..வாழ்த்துக்கு என் இனிய நன்றிகள்..

வாழு, வாழவிடு..

உங்கள் வாழ்த்துக்கு நன்றி மீனாள் ..நானும் பொண்ணும் நலம் ..
நீங்கள் உங்கள் குட்டிமகன் விக்னேஸ் நலமா?
குறிப்பு அனுப்பி வெளிவர ஒரு வாரம் ஆகும் மீனாள் ..
நீங்கள் அனுப்பி உள்ளீர்களா ..கவலைவேண்டாம் விரைவி வரும்...நன்றி

வாழு, வாழவிடு..

ஆஹா.................ஆஹா......

என்ன என்னமோ செய்து அசத்துறீங்க போங்க...
உருளை ரெடி இன்ஷா அல்லாஹ் நாளை செய்துவிட்டு சொல்லுகிறேன்.

நான் காரட் சேர்த்து பச்சடி செய்வேன்.இது சுபெர்ப்.

வாழ்த்துக்கள் ருக்ஸ்.....

ஹசீன்

நன்றி ஹசீனா ..செய்துவிட்டு மறக்காமல் பதிவிடுங்கள் சுவை எப்படின்னு
உருளையும் காரட்டும் சேர்த்து பச்சடியா ..அப்ப செய்து அறுசுவைக்கு அனுப்பிடுங்க பார்த்து நாங்களும் செய்கிறோம்.
உங்கள் ஐடி அப்சராவிடம் வாங்கிவிட்டேன் இன்னும் ஆட் கொடுக்கவில்லை
இப்போ கொடுக்கறேன்..நன்றி.

வாழு, வாழவிடு..

உங்க ரெண்டு பேர் ஐ.டியும் எனக்கு வேணும்,அப்சரா கிட்ட நானும் வாங்கிகட்டுமா???

ருச்சானா,அவித்த உருளைக் கிழங்கு இருந்த படியால்
இன்று உங்கள் உருளை பாயாசம் செய்து பார்த்தேன்.
வித்தியாசமான ரேஸ்ராக இருந்தது.
நல்லாய் இருந்தது வாழ்த்துக்கள்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

rukshanaa madam நல்ல இனிப்பான வித்தியாசமான குறிப்பு தந்து இருக்கீங்க. இது வரைக்கும் கேள்விப்பட்டதும் இல்லை, இனிமேல் கண்டிப்பா பண்ணி பாக்கறேன். விருப்ப பட்டியல்ல சேத்துட்டேன்.

hi

ந்ல்ல இனிப்பான குறிப்பு வாழ்த்துக்கள்டா

ரீம்,என் id யை வாங்கிக்கோங்க.
நாம chat பண்ணலாம்.

ஹசீன்

நலமா ரீம்? கடைசி பதிவிட்டதும் நான் வெளிவந்துவிட்டேன் ..
உங்கள் பதிவை இப்போதான் பார்த்தேன் .தாமதமாகிவிட்டது ..
வாங்கி கொள்ளுங்கள் ரீம் ...அப்சராவிடம்.நன்றி

வாழு, வாழவிடு..

இவ்வளவு சீக்கிரம் செய்துவிட்டீர்களா ..நன்றி யோகா
செய்துபார்த்து பதிவிட்டதர்க்கு .மிக்க நன்றி ...

வாழு, வாழவிடு..

மிக்க நன்றிம்மா உங்கள் பதிவிர்க்கும் வருகைக்கும் நன்றிம்மா.....

வாழு, வாழவிடு..

மிக்க நன்றி உங்கள் பதிவிர்க்கு செய்து பாருங்கள் .
நன்றாக இருக்கும்..

வாழு, வாழவிடு..

சலாம் ருக்ஸானா .. நல்ல புதுமையான மற்றும் சுலபமான குறிப்பு .. விரைவில் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் ..!!
வாழ்த்துக்கள்..!!

Express Yourself .....

ருக்சனா... சூப்பர். நாளைக்கே என் குட்டீஸ்'கு செய்துட்டு சொல்றேன். உருளை எப்படிலாம் சேர்க்கலாம்'னு பார்த்துட்டு இருக்கேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சலாம் ஸாஹியா ...உங்கள் வாழ்த்துக்கு என் இனிய நன்றிகள்
செய்துபார்த்து சொல்லுங்கள்..நன்றி..

வாழு, வாழவிடு..

நலமா நீங்கள்?கண்டிப்பாக செய்து கொடுங்கள் .
ஆமாம் குழந்தைகளுக்கு .நல்லது ..நன்றி உங்கள் பதிவிர்க்கு மிக்க நன்றி...

வாழு, வாழவிடு..

ருக்ஸானா எனக்கும் உங்கள் ID வேண்டும் .. தருவீங்களா ..? :))

Express Yourself .....

அப்சராவிடம் இருக்கு வாங்கிகொள்ளுங்கள் சரியா ...பாய்ய்

வாழு, வாழவிடு..