எக் பாஸ்தா

தேதி: February 8, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

பாஸ்தா - 2 கப்
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 1/4 பாகம்
முட்டை - 2
குடைமிளகாய் - 1/4 பாகம்
சீரகதூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப


 

வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக தனித்தனியாக சேர்த்து வதக்கவும்.
அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போடவும்.
நன்றாக வதங்கியதும் முட்டை சேர்க்கவும். முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும்.
தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.
சுவையான எக் பாஸ்தா ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்பா??வாழ்த்துக்கள்,முட்டை &காப்சிகம் காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும்,இன்னும் நிறைய குறிப்புகள் குடுங்க.

ரொம்ப எளிமையான நல்ல குறிப்பு.இன்னும் நிறைய குறிப்புகள் தர வாழ்த்துக்கள்.

Tharifa.

pastha evalavu naeram vaeha vida vaendum? evalavu thaneer vittu vaeha vida vaendum?

Complex problems can be solved through simpler solutions. Stay calm to look for simpler solutions

நல்ல குறிப்பு கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்..

வாழு, வாழவிடு..

ஹய் உங்க டிஷ் சூப்ப்ர். உங்க கடாய் நல்லா இருக்குது. அது என்ன மெட்டல் பிலிஸ் சொல்லுங்களேன். தீபா

ஹாய் saheli வாழ்த்துக்கள்.

முதல் குறிப்பே நல்லா இருக்குமா.

இன்னும் நிறைய குறிப்புகள் அனுப்பி ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

ஹசீன்

எக் பாஸ்தா,மிகவும் நன்றாக செய்திருக்கிறீர்கள்.
படங்கள் மிகத் தெளிவாக இருக்கிறது.
செய்து பார்த்து விட்டு சொல்லுகின்றேன்
வாழ்த்துக்கள் சகோதரி saheli.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ரீம் ரொம்ப நன்றி .அமாங்க முதல் குறிப்பு,உங்கோலடதுதான் முதல் பின்னுட்டம்.அதுக்கு ஒரு நன்றி.உங்க வாழ்த்துக்கழுடன் என் பயணம் தொடர்கிறேன்.இந்த receipe கண்டிப்பா பிடிக்கும்.குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.செஞ்சு பாருங்க.

hi

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

hi

thanx mrs.hanifa madam.இந்த receipe கண்டிப்பா பிடிக்கும்.குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.செஞ்சு பாருங்க.

sivagami madam .ஒவ்வொரு பாஸ்தாவும் ஒரு மாதிரி.வேக வைக்கிர டைம் பாஸ்தா கவர்லயே இருக்கும்.குரைந்த்து 20 நிமிடம்.நான் கொஞ்சம் ஜாஸ்தி டைம் வைப்பேன் ,softness கிடைக்கும்.சாப்பிட நல்லா இருக்கும் .செஞ்சு பாருங்க.

thanx Ruksanamammu madam.செஞ்சு பாருங்க.

thanx deepthi,செஞ்சு பாருங்க.அது எவெர்சில்வர் பாத்திரம் தான்.2 இன் 1 இட்லி பாத்திரம்.வானலியாகவும்,பயன்படுத்தலாம் இட்லி பாத்திரமாகவும் பயன்படுத்தலாம்.indiala vaangiyathu.

thanx haseena madam ,உங்க வாழ்த்துக்கள் பழிக்கட்டும்.செஞ்சு பாருங்க.

thanx yogarani sister,,செஞ்சு பாருங்க.

எல்லாரும் செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.வெயிட் பன்ரென்,உங்க பின்னுட்டத்திற்கு.

hi

ரொம்ப எளிமையான குறிப்பு இன்னும் நிறைய குறிப்புகள்தந்து ஸ்டார்வாங்க வாழ்த்துக்கள்

முதல் குறிப்பே குட்டீஸ்'அ அட்ராக்ட் பண்ற மாதிரி கொடுத்து எல்லார் மனசுலையும் இடம் பிடிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்... பல 100 குறிப்புகள் வரணும், அதுக்குலாம் நாங்க இழை துவங்கி வாழ்த்து சொல்லணும். :) அப்படியே உங்க பெயரை சொல்லுங்க ப்ளீஸ். அதை உச்சரிக்க தெரியல. தமிழில் சொன்னா புரிஞ்சுக்குவேன். கோச்சுக்காதீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி பாத்திமா மேடம்.செஞ்சு பாருங்க கண்டிப்பா பிடிக்கும்.

ஆமாங்க வனிதா மேடம்,குழந்தைங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க.மிதமான சுவையுடையது.புளிப்பு இல்லை,காரம் கம்மி.செஞ்சு பாருங்க.செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.மெயின் மாட்டர்க்கு வரேன்,சஹெலின்னா என் பெயர் அல்ல, தோழின்னு அர்த்தம்.ஷோபா

hi