பிஸ்ஸா சாஸ் செய்து ப்ரிட்ஜ்ல்

ஹாய் தோழீஸ் நம்ம பிஸ்ஸா சாஸ் மொத்தமாக செய்து பிரிட்ஜ்ல வைக்கலாமா. அப்படி வைத்தால் எத்தனை நாள் வைக்கலாம். அதை எப்படி ஃப்ரிட்ஜ்ல வைக்க வேண்டும். பிரிசரியலா அல்லது நார்மலாகவா. எப்படி பிஸ்ஸா சாஸ் செய்வது, யாராவது சொல்லுங்கபா. சும்மா பிஸ்ஸா சாஸ் செய்ய கக்ஷ்டமாக இருக்கு. கடைல வாங்கிரது நல்லதா வீட்டில் செய்வது நல்லதா. எனக்கு பிஸ்ஸா ரொம்ப பிடிக்கும் அதான் கேட்டேன்., அப்படியே இன்ஸ்டெண்ட் ஈஸ்ட் எப்படி யூஸ்பன்ரது அதுவும் சொல்லுங்கபா. அருசுவை தோழியதான் மலைபோல நம்பி இருக்கேன். என்னிடம் இன்ஸ்டெண்ட் ஈஸ்ட் தான் இருக்கு. அது எப்படி யூஸ் பன்ரது தெரியல.

யாராவது பதில் தாருங்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா, எப்படி இருக்கீங்க? நலம்தானே? பீஸா சாஸ் மொத்தமாக செய்தீங்கன்னா அதை ஃப்ரீஸரில்தான் வைக்கனும். மொத்தமாக ஒரே டப்பாவில் போடாமல், சின்ன சின்ன மைக்ரோவேவ் கன்டைனரில் ஸ்டோர் செய்து ஃப்ரீஸரில் வைத்தீங்கன்னா, தேவையானபோது எடுக்க வசதியா இருக்கும்.

ஸிம்பிளான பீஸா சாஸ் குறிப்பு இந்த லின்கில் இருக்கு.

http://www.arusuvai.com/tamil/node/6020

அதில் உள்ளி பேஸ்ட்டுன்னு ஒரு பொருள் குடுத்து இருக்காங்க. அது பூண்டு பேஸ்ட்தான். அதுக்கு பதிலா ஒரு 2 பூண்டு பல் கூட கட் செய்து போட்டுக்கலாம். உங்களுக்கு நிறைய வேணும்னா, அதில் இருக்கும் தக்காளியின் அளவை கூட்டிக் கொள்ளுங்கள். 5 தக்காளி போட்டீங்கன்னா, 4 பூண்டு பல், தக்காளி பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் சேத்துக்கோங்க.

அப்புறம் இன்ஸ்டன்ட் ஈஸ்ட் எதுவுமென்றாலும், வெது வெதுப்பான தண்ணீரிலோ அல்லது பாலிலோ சேர்க்கனும்.தண்ணீர் அல்லது பாலில் ஈஸ்ட்டை நன்றாக கலந்து விட்டு ஒரு 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு மாவில் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், சரியா.

ரொம்ப நன்றிபா. இன்னொரு சந்தேகம். இந்த ஃப்ரீ கீட்னி சொல்ராங்கலா. நானும் அது போல 30 நிமிடம் ஃப்ரீ கீட் செய்தேன்பா. அப்புரம் நம்ம ஓவன் அனைத்துடனும்மா. இல்ல அதே கீட் வைத்து பீசா உள்ள வைக்கனும்மா. நான் தெரியாம சொன்னது ஃப்ரீ கீட் 30 நிமிடம் அடுத்து பீசா 30 நிமிடம் வைத்தேன். அது கரிந்து கரி கொட்டையா மாரிட்டுபா. இது ஏன்பா. நான் என்ன தவறு செய்தேன். ப்ரீ கீட் செய்யாமல் பீசா செய்யலாமா. இல்ல கண்டிப்பா ப்ரீ கீட் பன்ன வேண்டும்மா. இன்று பப்ஸ் செய்ய போரேன். அதுவும் இப்படி தான் வருமோனி பயமா இருக்கு. அதுக்கு இது போல தான் நேரம் கொடுத்து இருக்காங்க. எனக்கு சந்தேகம் என்ன வென்றால். நம்ம 30நிமிடம் ஃப்ரீ கீட் செய்த அப்புரம் பீசாவை உள்ள வைத்துடு ஓவன்ன ஆப் பன்னிட்டு 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்மா. இல்ல ஆன்ல வைத்து 30 நிமிடம் எடுக்க வேண்டும்மா. இது தான் யாராவது தீர்த்து வைங்கபா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சோனியா ப்ரீ ஹீட் பண்ணிட்டு நீங்க சமைக்குற பொருளை உள்ளே வைத்த பின் ஒவனை ஆன் பண்ணி கொடுத்திருக்கும் டெம்ப்பரேச்சர் ,டைம் வைக்கனும்...பிஸாக்கு ப்ரீ ஹீட் பண்ணனுமான்னு தெரியல(மறந்திடுச்சு,செய்து ரொம்ப நாள் ஆகுது)...ஒரு வேளை நீங்க அதிக நேரம் வைத்திருக்கலாம்....நான் 25 நிமிடம் எழுதி வைத்துள்ளேன்...(ஓவெனை பொருத்தும் டைம் மாறலாம்)...

யாராவது சொல்லுங்கபா. பபஸ் சீட் கடைல இருந்து வாங்கிடு வந்தேன். அது மென்மையாக மார வில்லை. அப்படியே இருக்கு. கிட்ட தட்ட 2மனி நேரம் வெளில வைத்து இருக்கேன்பா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் சுமதி ரொம்ப ரொம்ப நன்றி. உடன் பதில் தந்தமைக்கு. எனக்கு பப்ஸ் குரிப்பு இருந்தா கொடுங்கபா. படத்துடன் விளக்கிய பப்ஸ் குரிப்பு. பப்ஸ் சீட்டும் பாஸ்டரின் என்பது ஒன்னா. எனக்கு பப்ஸ் சீட் கிடைக்க வில்லை. பேஸ்டரி சீட் தான் கிடைத்து இரண்டும் ஒன்னு தானா இல்லை வேரையா. இதான் முதல் முறை முயற்ச்சிகிறேன். யாராவது விபரமாக சொல்லுங்பா. புன்னியமாக போகும். பப்ஸ் சீட் வாங்கும் போதே அடுக்கு அடுக்கா இருக்குமா இல்ல ஒரே லேயர் தான் பேக் செய்த பிறகு அப்படி மாரும்மா. நான் வாங்கியது முதல்லையே அடுக்கு அடுக்கா இருக்கு. அப்படி அடுக்கு அடுக்கா இருந்தா ஒரு பப்ஸ்க்கு எத்தனை லேயர் வைக்க வேண்டும்பா. யாராவது உதவுங்கள்பா. ப்ளீஸ்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சாரி சோனியா எனக்கு பப்ஸ் பற்றி தெரியவில்லை...நான் செய்தது கிடையாது...எங்கயாவது பார்த்தால் சொல்கிறேன்...

ஆசைப்பட்டு நீங்க செய்த பீட்ஸா வீனாகி விட்டதா? சரி விடுங்க. ஃப்ரீ ஹீட் செய்ததில் எதுவும் தவறில்லை. நீங்க பீட்ஸாவை அதிக நேரம் வைத்துட்டீங்க. 12 நிமிடம் வைத்தால் போதும்..நான் 400'F -ல் 12 நிமிடம் வைப்பேன்.12 நிமிடம் கழித்து அவனை திறந்து பார்த்து வேக வில்லையென்றால் மேலும் ஒரு 2 நிமிடம் வைங்க. சரியா. நடு நடுவில் திறந்து பார்த்துக் கொள்ளலாம் தவறில்லை.

பஃப்ஸ் பேஸ்ட்ரி ஷீட் பேக் செய்த பிறகுதான் லேயர் லேயராக வரும். இந்த லின்கில் இருக்கும் குறிப்பு பாருங்க. அது ஒரு ஸ்வீட் டிஷ்தான். ஆனால் பேஸ்ட்ரி ஷீட்டை வைத்து மிக அழகாக செய்து காட்டியிருக்காங்க பாருங்க. அதனுள் வைக்கும் ஃபில்லிங்கை மட்டும் நீங்க செய்ததை வைத்துக் கொள்ளுங்கள். இதையும் நடுவில் நீங்க அவனை பார்த்து செக் செய்து கொள்ளலாம்.

http://www.arusuvai.com/tamil/node/14034

I need puffs pastry sheet. where i can get it. Now am in U.S. Is there in walmart?

அம்பிகா கம்பேர்ல செக் பண்ணி பாருங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்