முட்டை பணியாரம்

தேதி: February 15, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

முட்டை - 2
வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை - 4 அல்லது 5 இலைகள்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகுதூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - தேவையென்றால்


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரக்கல் வைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றி காய்ந்ததும் முட்டை கலவையை சிறிதுச் சிறிதாக குழிக்குள் ஊற்றவும்.
ஒரு பக்கம் வெந்ததும் மறுப்பக்கம் திருப்பி விடவும். இருபக்கமும் நன்றாக பணியாரம் வெந்தததும் எடுத்து விடவும்.
முட்டை பணியாரம் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் saheli, எப்படி இருக்கிங்க? என்னா ப வந்து இரண்டே வாரத்துல உங்க சமையல ஆரம்பிச்சுட்டிங்க சூப்பர்.. நீங்க அமெரிக்கா ல இருக்கிங்களா?

எல்லோரும் தோசை கல்லில் தான் செய்வாங்க.நீங்க வித்தியாசமா குழிபணியாரகல்ல செஞ்சு இருக்கிங்க. நான் நாளைக்கே செய்து பாக்குரேன்;))

இன்னும் நிறைய குறிப்பு கொடுத்து அசத்துங்க வாழ்த்துக்கள்........

உன்னை போல பிறரையும் நேசி.

paarkave nalla irukku.naan nalaika saithu parkiren

We Are Remembered Only when We Are Needed

சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிரேன் டிஃபரண்டா நல்லா இருக்கு பா வாழ்த்துக்கள் .இன்னும் நிரைய குரிப்புகள் கொடுக்க

அன்புடன்
ஸ்ரீ

ரொம்ப நல்ல இருக்கோம்னு பார்த்தாலே தெரியுது வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மிகவும் அருமையா இருக்கு ,,,,,,,,,,,, நானும் ட்ரை பண்ணி பார்குறான் ,,,,,,,,,,,,, வாழ்த்துக்கள்

thanx தேவி மேடம்,நீங்க தான் முதல் பின்னுட்டம்.ரொம்ப நன்றி.
அமாங்க ,அமெரிக்கால தான் இப்போ இருக்கோம்.இது அம்மாவோட ரெசிபி, எங்களுக்கு செஞ்சு கொடுப்பாங்க,அதுவும் தாளிக்கிற இரும்பு குழிக்கரண்டில.ஒன்னு போதும் பெரிசா இருக்கும்.சுப்பரா இருக்கும்.செஞ்சு பாருங்க,கண்டிப்பா பிடிக்கும்.பின்னுட்டத்திற்கு காத்திருப்பேன்.

thanx ஸ்ரீமதி மேடம்.செஞ்சு பாருங்க .கண்டிப்பா பிடிக்கும்.பின்னுட்டத்திற்கு காத்திருப்பேன்.

thanx thamarai மேடம்.செஞ்சு பாருங்க .கண்டிப்பா பிடிக்கும்.பின்னுட்டத்திற்கு காத்திருப்பேன்.

thanx revathy மேடம்.செஞ்சு பாருங்க .கண்டிப்பா பிடிக்கும்.பின்னுட்டத்திற்கு காத்திருப்பேன்.

thanx latha மேடம்.செஞ்சு பாருங்க .கண்டிப்பா பிடிக்கும்.பின்னுட்டத்திற்கு காத்திருப்பேன்.

hi

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின்குழுவினருக்கு நன்றி

hi

நல்ல குறிப்பு.எங்க அம்மா முட்டை புளிக் குழம்பு செய்யும் போது இது போல தான் செய்வாங்க.முட்டையை இதுபோல பொரித்து குழம்பில் போடுவாங்க

வித்தியாசமான பணியாரம் வாழ்த்துக்கள் உங்கள் பெயரை
தமிழில் கீழே எழுதவும்..
..மேலும் குறிப்புகள் தரவேண்டும் வாழ்த்துக்கள் நன்றி..

வாழு, வாழவிடு..

its very yummy

நன்றி ரீம் மேடம்,இதுவும் எங்க அம்மாவோட ரெசிபி தான்.ஆனா பனியாரம் தான் செய்வாங்க.முட்டை புளிக்குழம்பு சொல்லுங்க,செஞ்சிடலாம்.

நன்றி ருக்சானா மேடம்.செஞ்சு பாருங்க,கண்டிப்பா பிடிக்கும்.

நன்றி madina மேடம்.செஞ்சு பாருங்க,கண்டிப்பா பிடிக்கும்.

shoba
(rukshaana madam சந்தோஷமா,என் பெயரை மனசுல வைச்சுகொங்க.நான் கொஞ்சம் மறந்துடுவேன்.அப்ப்பப்போ பேர் எழுத :))

hi

ஷோபா நலமா?

வாழ்த்துக்கள்..நல்லா இருக்கு...நாங்க தவ்வாவில் செய்வோம்.

இது வித்தியாசமா இருக்கு.குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடிக்கும் இப்படிக் கொடுத்தால்.........

வாழ்த்துக்கள்...

ஹசீன்

க்ஷோபாவா உங்கள் பெயர் ..ஹ்சீனின் பதிவால் தெரிந்துகொண்டேன்.
உங்கள் பெயர் தெரியாமல் தான் கேட்டேன் மற்றபடிகுறிப்பின் கீழே
போட சொல்லவில்லை க்ஷோபா.மேடம்.

வாழு, வாழவிடு..

ஷோபா... குட்டீஸ்'அ எப்படிலாம் கவர் பண்றதுன்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும். சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா