உங்கள் அட்வைஸ் please

நான் திருமணம் ஆகி U.K ல் வசிக்கிறன்.எனது கணவர் என் மீது ரொம்ப பாசமாக இருக்கிறார்.ஆனால் அவர் 7 மணிக்கு work போய் இரவு 8 மணிக்கு திரும்புவார்.எனது அப்பா, அம்மா,சகோதரர்கள் ஊரில் இருக்கிறார்கள். எனக்கு தனிமையில் இருக்கும்போது மிகவும் கவலையாக இருக்கிறது.எங்களுக்கு திருமணமாகி 4 வருடங்கள் ஆகின்றது, இன்னமும் baby கிடைக்கவில்லை. கடவுளின் மீது நம்பிக்கை வைத்து babykika காத்து இருக்கிறோம்.
தோழிகளே!எனக்கு பொழுதே போக மாட்டேங்குது.மனமும் சந்தோஷம் இல்லாமலிருக்கிறது. எப்பொழுதும் என் மனம் எதையாவது யோசித்து கவலைப்பட்டு கொண்டிருக்கும்.
எனக்கு உங்களின் ஆலோசனை கிடைக்குமா?

அன்புத் தோழியே, உங்களின் குழந்தை ஏக்கம் புரிகிறது. அதற்காக வருந்தி கொண்டே இருப்பது தான் தீர்வு இல்லை. ஒவ்வொருத்தருக்கும் குழந்தைபேற்றுக்காக ஒவ்வொரு காலத்தை கடவுள் ஒதுக்கியிருப்பார். உங்களுக்கான நேரம் வரும்போது நீங்களும் நிச்சயமாக உங்கள் பிள்ளைகளை கொஞ்சி மகிழவே செய்வீர்கள். கணவர் விஷயத்தில் நீங்கள் கொடுத்து வைத்தவர். உங்கள் மேல் அளவுகடந்த பாசத்தை கொட்டுகிறார் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒருசில இடங்களில் பார்த்தீர்களானால் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் கொடுமைகளை தாங்கிக் கொண்டு தங்கள் குழந்தைகளுக்காக இன்முகத்துடன் பெண்கள் வலம் வருவார்கள். கஷ்டம் இல்லாத மனிதர்களையும் பார்ப்பது அரிது. கஷ்டங்கள் மட்டுமே இருக்கும் மனிதர்களையும் பார்ப்பது அரிது.

அறுசுவையின் அரட்டை பகுதியில் நேரம் கிடைக்கும்போது வந்து நம் தோழிகளோடு உரையாடுங்கள். தோழிகள் கவலைகளை தற்காலிகமாக மறக்க செய்வார்கள். கடவுளிடம் உங்கள் பாரத்தை விட்டு விடுங்கள். மனதிற்கு பிடித்த இசை கேளுங்கள். உங்களுக்கு சந்தோஷம் அளிக்கும் பழைய நிகழ்ச்சிகளை மனதில் அசை போடுங்கள். நல்ல படங்களை பாருங்கள். பிடித்த சமையல் செய்து கணவரோடு உண்ணுங்கள். பிடித்த இடங்களுக்கு கணவரோடு கைகோர்த்து செல்லுங்கள். நீங்கள் உங்களுடைய கஷ்டமேயில்லாத கஷ்டங்களை நினைத்து வருந்துவதை விட்டு, உண்மையாகவே வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்துக் கொண்டிருப்பவர்களை பாருங்கள். உங்கள் கஷ்டம் ஒன்றுமேயில்லை என்று தோன்றும். பிடித்த புத்தகங்களை படியுங்கள். கைவேலைப்பாடுகளில் ஆர்வம் இருந்தால் அவற்றை செய்யுங்கள்.

அடுத்த முறை அறுசுவைக்கு வரும்போது தாயான மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே வருவீர்கள் என்று நம்பிக்கையாக வாழ்த்துகிறேன். நல்லதே நடக்கும் தோழியே :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சும்மா இருந்தால் மனசு எதையாவது நினைத்து குழம்பி கொண்டே தான் இருக்கும்.அறுசுவை ஜோதியில் ஐக்கியமாயிடுங்க,சரியாயிடும்.உங்களுக்கு கைவினையில் இண்ட்ரஸ்ட் இருந்தா,மேலே கைவினை பகுதியில் நிறைய க்ராப்ட்ஸ் இருக்கு,அதை செஞ்சு பாருங்க,படிக்க ஆசை இருந்தால் எதாவது கோர்ஸில் சேருங்க .குழந்தை இல்லை என்ற கவலையை விடுங்க.cheer up.

கவலைப்படாதீங்க பா. உங்களுக்கு பிடித்த ஏதாச்சும் ஒன்றில் கவனம் செலுத்துங்கள் வித விதமாக சமைத்து கணவரை சத்துங்கள் எம்ராய்டரி இது போன்ர கைவேலைபாடுகளில் ஆர்வம் காட்டுங்கள் தோழிகள் இருவரும் சொல்வது போல அருசுவையில் ஒன்ரினையுங்கள் உங்களுக்கு தெரிந்த எல்லாவற்றையும் ஈடுபாடோடு செய்து அனுப்புங்கள் கவலைகளை மறக்க முயற்ச்சி செய்யுங்கள் கடவுளை நம்புவதை கைவிட வேண்டாம் அரட்டை பக்கம் வந்து பாருங்கள் அப்பரம் டைமே இல்ல அப்படின்னு சொல்லுவீங்க இதுல எங்க கவல பட

சுபா எனக்கும் கல்யாணம் ஆகி 3வருடங்கள் ஆகிரது பா குழந்தை இல்லை கண்டிப்பா நம்மளுக்கு குழந்தை பிரக்கும் பா கவலை படாதீங்க என்னோட கவலையை மறக்கும் இடமே அருசுவை தான் அரட்டை தான்

அன்புடன்
ஸ்ரீ

அன்பு தோழி கவலைப்படாதீர்கள். உங்களுடைய மனநிலையை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. ஒன்று சொன்னால் தவறாக நினைக்க வேண்டாம். இரண்டு பேரும் டாக்டரை பார்த்தீர்களா.ஏதாவது பிரச்சனையென்றால் அதற்கேற்ற treatment எடுத்துக் கொள்ளுங்கள்.ஒன்றுமில்லை என்று டாக்டர் சொன்னால் கவலையை விடுங்கள்.ஒரு சிலருக்கு உடனே கிடைக்கும் ஆனால் ஒரு சிலருக்கு சற்று தாமதமாகும்.
இப்பொழுது அதை நினைத்து கவலைப்படுவதை விட்டு விட்டு உங்கள் சிந்தனையை திசைத் திருப்புங்கள்.தோழிகள் கூறியிருப்பதை போல் அறுசுவையில் ஈடுப்படுங்கள்.நல்ல புத்தகம் படியுங்க.கடவுளை தினமும் நினைக்கத் தவறாதீர்கள்.விரைவில் உங்கள் வீட்டிலும் மழலை சத்தம் கேட்கும்.
நீங்களும் உங்க கணவரும் நல்ல ஜாலியா இருங்க.குழந்தை வரும் வரை நீங்கள் இருவரும் உங்கள் இருவருக்கும் குழந்தைகள்.இத்தனை நாட்கள் நீங்கள் காத்திருப்பதால் உங்களுக்கு இரட்டை பொக்கிஷங்கள் கிடைக்கும்.அடுத்த முறை இந்தியா செல்லும்போது உங்களுடைய செல்லங்களுடன் தான் செல்வீர்கள் என்று நாங்கள் அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறோம்.நீங்களும் நம்பிக்கையுடன் இருங்கள்.

Expectation lead to Disappointment

தயவு செய்து குழப்பம் வேண்டாம் எனக்கு குழந்தை இல்லாமல் 5 வருடம் களித்து என் பையன் பிறந்தான் . எல்லாமே நல்லபடியா நடக்கும்

எனக்கு ஆறுதல் கூறிய kalpana sarvan,reem,Srimathi, meenal,lakshmia அணைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.உங்களுடைய அன்பான ஆறுதலான வார்த்தைகள் எனக்கு மன நின்மதியையும் சந்தோஷத்தையும் தருகின்றது. கடவுளின் எண்ணப்படியும் உங்களின் வாழ்த்துக்களோடும் எல்லாம் நல்லதே நடக்கும் என நம்புகிறேன்.

இனிமையாக ஆறுதல் கூறிய எனது தோழிகளுக்கு மீண்டும் மீண்டும் எனது நன்றிகள்.

கண்டிப்பா ஸ்ரீ சொல்வது சரி. நங்கள் எதற்கும் கவலை பட வேண்டாம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அதற்கு முடிவு என்று ஒன்று உள்ளது. எனவே நீங்கள் கவலை பட தேவையில்லை. வாங்கல் அரட்டை பக்கம் ஆயிரம் உள்ளங்கள் உங்கள் வருகைக்கு காத்து கொண்டிருகின்றது கவலையை விடுகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்களுடைய பதிவினை படிக்கும்போது மனதின் சுமை குறைந்து ரிலாக்ஸாக உள்ளது.மற்றவர்களுக்கு நல்லது சொல்லும் நீங்கள் நூறாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார்.நீங்கள் சொன்னபடியே இனிமேல் நடந்துகொள்கின்றேன்.
ஸ்ரீமதி உங்களுக்காகவும் நானும் இறைவனிடம் வேண்டுகின்றேன்.

மேலும் சில பதிவுகள்