PHP கோர்ஸ் பத்திதெரியுமா?

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
எப்படி இருக்கீங்க? .4 வருஷ இடைவெளிக்கப்புறம் வேலை தேடவேண்டிய சூழலில் இருக்கேன்.நான் வொர்க் பண்ணது i.t field ல.டாட் நெட் ல் வொர்க் பன்ணேன்.இப்போ பிரஷ் அப் பண்ணலாம்னு பாத்தா தலையை சுத்துது.2 குழந்தைகளை வச்சிக்கிட்டு படிக்கறது ரொம்ப கஷ்டமா இருக்கு.நீங்க யாராவது இந்த மாதிரி பிரச்சனையை கிராஸ் பண்ணி சக்ஸஸ்புல்லா வந்திருக்கீங்களா?யாருக்காவது PHP கோர்ஸ் பத்திதெரியுமா? அதை ஆன்லைனில் படிச்சாலே போதுமா?எனக்கு கான்ஃபிடெண்டே இல்லாதமாதிரி இருக்கு.உங்க அட்வைஸை சொல்லுங்க ப்ளீஸ்

அன்புடன் அனு

ஹலோ ஃபரெண்ட்ஸ்,

யாராவது ரீப்ளே பண்ணியிருப்பீங்கன்னு பாத்தா யாரும் பண்ணலையே,ஏன்?அட்லீஸ்ட் கொஞ்சம் பாசிட்டிவாவது பதில் சொல்லலாமில்லையா?யாரும் கொஞ்சம் பிரேக் அப்புறம் வேலைக்கு ட்ரை பண்ணது இல்லையா?தலைப்பை மாத்தி போட்டிருக்கேன்.இப்பவாவது பதில் வருமான்னு வெய்ட் பண்றேன்.
அன்புடன் அனு

I am also in u'r position. when was in india I was working in dotnet.Then i had 2 yrs break baz of visa pbm. Then i worked here in dotnet. Then last 2yrs i am just taking care of my son. Now i am looking for a job. But in jobportal i can see lot of php. So i am having little confusion whether can i study dotnet or Php? where and how to start etc. If u get any ideas plz let me know too.

ஹாய் கலா,
எப்படி இருக்கீங்க?

w3schools வெப்சைட்ல ஃப்ரீ டுடோரியல் இருக்கு.ஆனா அதை மட்டும் படிச்சா போதும்மான்னு தெரியலை.அப்படியே படிச்சாலும் அதை எப்படி சி.வி ல அப்டேட் பண்றதுன்னும் புரியலை.எங்கேயிருந்து ஆரம்பிக்கிறதுன்னு ஒரே குழப்பமாயிருக்கு.கொஞ்சம் தமிழ்ல டைப் பண்ணுங்க்களேன்.
அன்புடன் அனு

எல்லோரும் அரட்டைல பிசியாயிருக்கீங்கன்னு நெனைக்கிறேன்.இல்லன்னா யாருக்கும் இதப்பத்தி தெரியாதா? தோழிகள் எல்லோரும் வந்து கொஞ்சம் கான்ஃபிடெண்ட் கொடுப்பீங்கன்னுபாத்தா யாரும் எட்டிக்கூட பாக்கலை போல இருக்கு.அறுசுவைல பதிவு போடவே தேவையில்லைன்னு நெனைக்கிறேன் கல்வி சம்பந்தமா.

அனு - நான் காலைல தான் உங்க பதிவு பாத்தேன். பதில் போடணும்ன்னு நினைச்சேன், நேரம் இல்லை. இப்ப தான் கொஞ்சம் ப்ரீ ஹ இருக்கேன். எல்லாரும் பிஸி ஹ இருந்து இருப்பாங்க, நம்ம வெளிநாடு வாழ் தோழிகள், நைட் தான் பாப்பாங்க. அதுக்குள்ளே இப்படி கோப பட்ட எப்படி?சொல்லுங்க...

PHP ரொம்ப ரொம்ப ஈசி மா. அதை பத்தி கவலை வேண்டாம். உங்களுக்கு C ,C ++ கொஞ்சமாவது நியாபகம் இருக்கா? இல்ல ரெப்ரெஷ் பண்ணுனா வந்துடுமா? சொல்லுங்க? வந்துடும்னா பிரச்சனையே இல்ல....

ஆஸ்திரேலியா ல எந்த பீல்ட் க்கு வேலை வைப்பு அதிகம்ன்னு பாருங்க. PHP இருக்குமான்னு எனக்கு தெரியல. எந்த பீல்ட் க்கு வேலை வாய்ப்பு அதிகமோ, அதை தேர்தெடுங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் அனுஷா நானும் இப்பதான் இத பாக்குறேன்...சாரிப்பா நான் டீச்சர் ட்ரைனிங் தான் படிச்சிருக்கேன்...நீங்க கேட்டுருக்கத பத்தி எதுவும் தெரியாது...ஒன்னே ஒன்னு பண்ணலாம்...உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்கனும்னு pray பண்ணிக்குறேன்...நான் எழுதியதில் ஏதேனும் தவறு இருந்தால் மனிக்கவும்...

சுகந்தி,
நான் இந்த பதிவை நேத்து போடப்பவே உங்ககிட்டயிருந்து பதில் வரும்னு நெனச்சேன்.ஏன்னா,நீங்கதான் எல்லோருக்கும் நல்லா ரெஸ்பான்ஸ் பண்றீங்க.ஆனா இன்னைக்கும் யாரும் பதில் போடலன்னதும் கொஞ்சம் டென்ஷன்.ம்ம்..c,c+ 10 வருஷம் முன்னாடி படிச்சது,இப்போ பிரஷ் அப் பன்னனும்னா தல ரங்கராட்டினம் மாதிரி சுத்துது.php க்கு c knowledge தேவையா என்ன?இங்கே php க்கு வாண்ட்டட் இருக்கு.ஆனா,பிரிப்பேர் பன்னாலும் எப்படி சி.வி ல காட்டறதுன்னு தெரியலை.குழந்தைங்க இருக்கறதால hectic jobs(like programming) எல்லாம் போகனும்னா பயம்மாயிருக்கு.

anpudan anu

சுமதி,
ரொம்ம்ம்ப நன்றி.guidnance கொடுக்கமுடியலைன்னாலும் அட்லீஸ்ட் இந்த மாதிரி பாசிட்டிவ் வார்த்தைகள் நிச்சயம் பூஸ்ட் கொடுக்கும்.

நன்றியுடன் அனு

இழையை மேலே ஏத்தறேன்.யாராவது பாருங்கப்பா

நீங்கள் எந்த துறையில் இருந்தீர்களோ அதே துறையை மறுபடியும் தேர்தெடுங்கள். ஏனென்றால் அப்பொழுது உங்களுக்கு அதில் வேலை செய்ய சுலபமாக இருக்கும். இல்லையா எதாவது ஒரு ட்ரைனிங் சென்டர் சென்று படித்து விட்டு அவர்களின் உதவியுடன் ஒரு வேலையை தேடுங்கள். அவர்கள் உங்களுக்கு ஆன் ஜாப் ட்ரைனிங் கொடுப்பார்கள். நீங்களே ஒன்றை புதிதாக படித்தால் அதில் எப்படி வொர்க் பண்றது என்பதை பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். பல ப்ராஜெக்ட் செடிஹு பழகுங்கள். நீங்களே படித்து ரெசூமில் போட்டுவிட்டு அப்புறம் இன்டர்வு போது கேள்வி கேட்டால் முழிக்க கூடாது. வேலை கிடைத்தபின் நமக்கு ட்ரைனிங் எல்லாம் கொடுக்க மாட்டார்கள். நாம் தான் வேலை செய்ய வேண்டும். அதனால் எண்ணெய் கேட்டால் ஒரு ட்ரைனிங் சென்டரில் படிப்பது பெஸ்டுன்னு சொல்லுவேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்